Published:Updated:

'சூப்பர் டீலக்ஸ்' ராசுக்குட்டிக்கு அடுத்த படம் ரெடி!

சனா

சின்னத்திரையில் பிரபலமான அஸ்வந்த் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

அஸ்வந்த்
அஸ்வந்த்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ரிலீஸான திரைப்படம் `சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி திருநங்கை கேரக்டரில் நடித்த இப்படத்தில் இவரின் மனைவி கதாபாத்திரத்தில் காயத்ரி நடித்தார். மேலும், மகன் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் நடித்திருந்தார். இவர் சின்னத்திரையில் பிரபலமானவர். இவரது பேட்டி ஒன்றை ட்விட்டரில் பார்த்த தியாகராஜன் இவரை `சூப்பர் டீலக்ஸ்' படத்துக்காக கமிட் பண்ணினார்.

அஸ்வந்த்
அஸ்வந்த்

`ராசுக்குட்டி' கேரக்டரில் இப்படத்தில் அஸ்வந்த் நடித்திருந்தார்.

இதற்கிடையில் `பாபநாசம்' படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப் எடுத்துக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க அஸ்வந்த் கமிட்டாகி இருக்கிறார். இப்படத்தில் ஜோதிகாவும் கார்த்தியும் அக்கா தம்பியாக நடிக்கின்றனர். இவர்கள் தவிர நிகிலா விமல், சத்யராஜ், அம்மு அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்கள். வயாகாம் 18 தயாரிக்கும் இப்படத்துக்கு `96' படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைப்பாளாராக கமிட்டாகி இருக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது.

அஸ்வந்த்
அஸ்வந்த்

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..