Published:Updated:

``இந்த ரெண்டு ஃபீலோடதான் விஜய் சாரோட `குட்டி ஸ்டோரி'யை எழுதினேன்!" - அருண்ராஜா காமராஜ்

arunraja and vijay
arunraja and vijay

`தெறி’, ’பைரவா’ என விஜய் படங்களின் தீம் பாடல்களை எழுதிய அருண்ராஜா காமராஜ்தான் `குட்டி ஸ்டோரி’ பாடலையும் எழுதியிருக்கிறார். அவரிடம் இந்தப் பாடலைப் பற்றிப் பேசினோம்.

`மாஸ்டர்’ படத்தின் `குட்டி ஸ்டோரி’ பாடல்தான், இணையத்தின் தற்போதைய சென்சேஷன், டிரெண்டிங் நம்பர் ஒன். `தெறி’, `பைரவா’ என விஜய் படங்களின் தீம் பாடல்களை எழுதின அருண்ராஜா காமராஜ்தான் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அவரிடம் இந்தப் பாடலைப் பற்றிப் பேசினோம்.

`` `குட்டி ஸ்டோரி’ பாட்டை எழுதும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?"

oru kutti katha
oru kutti katha

``அனிருத் சாரோட ஆபீஸ்ல இருந்து போன் வந்துச்சு. `ஒரு பாட்டு சேர்ந்து வொர்க் பண்ணப்போறோம்; மூணு நாள்ல மீட் பண்ணலாம்’னு சொன்னார். மீட் பண்ணும்போது, இந்தப் பாட்டு எப்படி இருக்கணும் இந்தப் பாட்டுல என்ன சொல்லப்போறோம்னு எல்லாத்தையும் பக்காவா சொல்லிட்டார். அவர் அப்போ `தர்பார்’ படத்தோட ஃபைனல் மிக்ஸிங்கில் இருந்தனால, அடிக்கடி அவரை மீட் பண்ண முடியலை. லோகேஷும் டெல்லியில ஷூட் பண்ணிகிட்டிருந்தனால, `அனிருத்கிட்ட பேசிக்கங்க ப்ரதர். நீங்க பேசி, கொடுக்குறதுதான் ஃபைனல்’னு சொல்லிட்டார். நானும் அனிருத் சாரும் மெயில் மூலமாதான் பேசிக்கிட்டோம். நான் பாட்டை எழுதி முடிச்சதுக்கு அப்புறம், அனி சார் ட்ராக் பாடி ரெக்கார்ட் பண்ணிகிட்டிருந்தார். அவரோட ஸ்டூடியோவுக்குப் போய், அங்க சின்னச் சின்ன கரெக்‌ஷன் பண்ணி, பாட்டை ரெக்கார்ட் பண்ணோம்.’’

``இந்தப் பாட்டை ஆங்கிலம் கலந்து எழுதணும்கிறது யாரோட ஐடியா?"

``முழுக்க, முழுக்க இது அனி சாரோட ஐடியாதான். `இங்கிலீஷ் கலந்து எழுதலாம்’னு சொன்னார். ஆனா, இந்த ட்யூன் இங்கிலீஷ் பாட்டுக்கான ட்யூன் கிடையாது. இது நம்ம ஊர் பாட்டு. அந்த டியூன்ல நாம ரெகுலரா பேசுற சிம்பிள் இங்கிலிஷ் வார்த்தைகளை உட்கார வைக்கிறதுதான் கஷ்டம். ஆனா, இயல்பாவே அனி சாரோட ட்யூன்ல அந்த மேஜிக் இருக்கு. நாம அந்த ட்யூனை நல்லா கேட்டு, அதுக்கேத்த வார்த்தைகளை மட்டும் போட்டுட்டா, அழகான பாட்டா அது மாறிடுது.’’

``விஜய் பாட்டைக் கேட்டுட்டு என்ன சொன்னார்?"

master second look
master second look

``இந்தப் பாட்டை என்கிட்ட எழுத கொடுத்தப்பவே, `இந்த ஆல்பத்திலேயே விஜய் சாருக்கு ரொம்பப் பிடிச்ச ட்யூன் இதுதான்’னு அனி சார் சொன்னார். அவரோட இந்த வார்த்தை ஒரு பயம் கலந்த சந்தோஷத்தைக் கொடுத்துச்சு. விஜய் சாருக்குப் பிடிச்ச ட்யூனுக்கு பாட்டு எழுதப்போறோம்னு சந்தோஷம்; நாம எழுதுனதுக்கு அப்புறமும் இந்தப் பாட்டு பிடிக்கிற மாதிரி இருக்கணும்கிற பயம்... இந்த ரெண்டு ஃபீலோடதான் இந்தப் பாட்டை எழுத ஆரம்பிச்சேன். எழுதி முடிச்சு, அனி சார் டிராக் பாடினதுக்கு அப்புறம் விஜய் சார் கேட்டார். அவருக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. ஏன்னா, இது படத்தோட கேரக்டருக்கு செட்டாகுற மாதிரி, விஜய் சார் அவரோட ரசிகர்களுக்காகவும் இந்தப் பாட்டைப் பாடுற மாதிரி இருக்கும். விஜய் சார் இசை வெளியீட்டு விழாக்கள்ல பேசும்போதெல்லாம், அவரின் ரசிகர்களுக்கு ஒரு பாசிட்டிவிட்டியைக் கொடுப்பார். நாங்களும் அவர் பேசியதை எல்லாம் தொகுத்து, இந்தப் பாட்டு மூலமா பாசிட்டிவிட்டியைக் கடத்தணும்னுதான் நினைச்சோம். அதுமட்டுமல்லாம, விஜய் சாரோட பாட்டு குழந்தைங்ககிட்ட ரொம்ப நல்லா ரீச்சாகும். அந்தக் குழந்தைகளுக்கும் பாசிட்டிவிட்டியும் செல்ஃப் மோட்டிவேஷனும்தான் முக்கியம்னு இந்த வயசுலேயே உணர்த்திட்டா, அவங்களோட எதிர்காலத்துக்கு அது உதவும்னு நினைச்சு இதைப் பண்ணோம். அது விஜய் சாருக்கு ரொம்பவே பிடிச்சிருந்ததால, பாராட்டும் பலமா இருந்துச்சு.’’

``இந்தப் பாட்டை விஜய் பாடும்போது நீங்களும் அங்க இருந்தீங்களா?"

vijay and anirudh
vijay and anirudh
``காதலில் நான் ரெண்டாவது வகைங்ணா!" - வித் லவ் விஜய் #VikatanOriginals

``இல்லை. அன்னைக்கு நான் போகலை. எல்லா ரசிகர்களைப் போல நானும் பாட்டு ரிலீஸானப்போதான் கேட்டேன். நான் எழுதுன வரிகளை, விஜய் சாரோட குரலில் கேட்டப்போ, அப்படி ஒரு மகிழ்ச்சி. வேலன்டைன்ஸ் டே அன்னைக்கு எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய கிஃப்ட்டா அதை நினைக்கிறேன். விஜய் சாரோட குரல், அனி சாரோட இசையில நான் எழுதுற வாய்ப்பு இதுக்கு அடுத்து கிடைக்குமானு தெரியலை. அதுனால, அந்த மொமென்ட்டை செமையா என்ஜாய் பண்ணிக்கிட்டேன். பாட்டு கேட்குறதுக்கு எவ்வளவு சூப்பரா இருந்துச்சோ, அதே அளவுக்கு பார்க்கிறதுக்கும் பிரமிப்பா இருந்துச்சு. லிரிக் வீடியோ கான்செப்ட்டும் அதை விஷுவலாக்கிய விதமும் ரொம்பவே செம. என்னோட `கனா’ படத்துக்கும் இப்படித்தான் லிரிக் வீடியோ பண்ணணும்னு நினைச்சேன். ஆனா, எனக்கு அதுக்கான நேரம் கிடைக்கலை. இப்படி ஒரு வொர்க்கோடு லிரிக் வீடியோ பண்ணணும்னா கண்டிப்பா ஒரு மாசம் தேவைப்பட்டிருக்கும். ஆனா, இந்தப் பாட்டை குறுகிய காலத்துக்குள்ளதான் பண்ணியிருக்காங்க. இந்தளவுக்கு ஏலியன் லெவல் வொர்க் பண்ண டீமுக்கு கண்டிப்பா பாராட்டுகளைத் தெரிவிச்சுக்கணும்.’’

``மாஸ் பாடல்களை மட்டும்தான் அருண்ராஜா எழுதிட்டிருக்காரே?"

Arunraja-Kamaraj
Arunraja-Kamaraj

``ஒரு பாடலாசிரியர் எல்லாவிதமான எமோஷன்களுக்கும் பாடல்கள் எழுதணும். ஒரேவிதமான பாடல்களை மட்டும்தான் எழுதுறோம்; அதுக்காக மட்டும்தான் நம்மகிட்ட வர்றாங்கன்னா, நாம தோல்வியடைஞ்சிட்டோம்னு அர்த்தம். ஆனா, நான் எல்லாவிதமான எமோஷன்களுக்கும் பாடல் எழுதணும்னுதான் ஆசைப்படுறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதைப் பண்ணிகிட்டிருக்கேன். `கனா’ படத்துல ஒன் சைடு லவ்வுக்காக எழுதுன `ஒத்தையடி பாதையில’, `நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்துல நண்பர்களுக்காக எழுதுன `ஜிகிடி தோஸ்து’, சசிகுமார் சார் நடிச்சு ரிலீஸாகப்போற `கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்துல எழுதியிருக்கிற காதல் பாட்டுனு தொடர்ந்து வேற வேற மாதிரி எழுதிகிட்டுத்தான் இருக்கேன். அந்த வரிசையில் இந்தக் `குட்டி ஸ்டோரி’ பாட்டும் வித்தியாசமான ஒண்ணுதான். நம்ம வீட்டுல அப்பா, அம்மா, நமக்குப் பிடிச்சவங்க அன்போட நமக்கு அட்வைஸ் பண்ற மாதிரியான ஒரு பாட்டுதான் இது. இதே மாதிரி தொடர்ந்து வேற, வேற எமோஷன்ஸ் இருக்கிற பாடல்களை எழுதணும்.’’

``நீங்க இயக்கிய `கனா’ படத்தைப் பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார்; நீங்க எப்போ விஜய்யை இயக்கப்போறீங்க?"

பாண்டிராஜ், அருண்ராஜா, சுதா கொங்கரா...`விஜய் 65' படத்தின் இயக்குநர் யார்?

``விஜய் சார் எங்களோடதான் `கனா’ படம் பார்த்தார். படம் முடிஞ்சு `எழுத்து - இயக்கம் அருண்ராஜா காமராஜ்’னு ஸ்கீரின்ல வந்ததும் கையைத் தலைமேல தூக்கி வெச்சு அப்ளாஸ் பண்ணார். `படம் பேச வேண்டிய விஷயத்தில் இருந்து எங்கேயும் விலகவே இல்லை’னு சொன்னார். அது ரொம்பப் பெருமையான மொமன்ட். என்னை மாதிரி சினிமாவுக்கு அறிமுகமான இயக்குநர்களுக்கு விஜய் சாரை இயக்கணும்கிற ஆசை கட்டாயம் இருக்கத்தான் செய்யும். எனக்கும் அந்த ஆசை நிறையவே இருக்கு. விஜய் சார்கிட்ட கதையும் சொல்லியிருக்கேன். விஜய் சாரோட லைன்அப்ல நான் சொன்ன கதை எப்போ வரணும்னு அவர் நினைக்கிறாரோ அப்போ என்கிட்ட சொல்லுவார்னு நினைக்கிறேன். நானும் அந்த மொமன்ட்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன்.’’

அடுத்த கட்டுரைக்கு