Published:Updated:

`வாட்... விஷாலுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சா?!' - `டான்ஸ் க்ளாஸ்’ லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன் சில காலமாகத் தமிழ் சினிமாவை விட்டு விலகியிருக்கிறார். தற்போது அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது பற்றி அவரிடமே பேசினேன்.

''எனக்கு நடனம் பிடிக்கும். அதைப் பற்றிதான் படிச்சேன். என் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் நடனம் பற்றி புதுப்புது விஷயங்களைக் கத்துக்கிட்டுதான் இருப்பேன். வீட்டிலேயே நான் சில குழந்தைகளுக்கு டான்ஸ் க்ளாஸ் எடுத்துக்கிட்டிருக்கேன். என்னோட மாணவர்களின் அரங்கேற்றம் நிகழ்ச்சியைப் பார்க்கணும்னு ஆசைப்படுறேன்'' என்று பேசுகிறார் நடிகை லட்சுமி மேனன்.

Vikatan

தமிழ் சினிமாவில் உங்களைப் பார்க்க முடியலையே?

லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்

’’நிறைய கதைகள் வந்தன. ஆனா, எந்தக் கதையும் எனக்குப் பிடிச்ச மாதிரி இல்லை. ஏதோ கதைகள் வருது; படம் பண்ணலாம்னு நினைக்கிற ஹீரோயின் நான் இல்லை. சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகி இருக்கிறது உண்மைதான். கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கேன். இந்த பிரேக் நல்லாயிருக்கு. இப்போ தேவைப்படுற ஒண்ணாவும் இருக்கு.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சினிமாவை விட்டு விலகியிருக்கிற இந்த முடிவுக்கு வீட்டுல மற்றும் நண்பர்கள் மத்தியில் என்ன சொன்னாங்க?

லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்

’’எனக்கு நிறைய நண்பர்கள் கிடையாது. இருக்கிற சிலரும் என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டவங்கதான். வீட்டுல இருக்கிறவங்களுக்கு நான் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்னு நம்புவாங்க.’’

'யங் மங் சங்' திரைப்படம் எப்போ ரிலீஸ் ஆகும்?

லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்

’’நம்ம நடிச்ச எல்லா படமும் எப்போ ரிலீஸ் ஆகும்ங்கிற எதிர்பார்ப்பு இருக்கும். அந்த மாதிரிதான் இந்தப் படமும் எப்போ ரிலீஸ் ஆகும்னு காத்திட்டிருக்கேன். அதுக்கு மேலே எதுவும் நினைக்கல. படமே காமெடி ஜானர்தான். காமெடி படத்துல ஒரு ஹீரோயினுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்குமோ அந்தளவுக்குத்தான் எனக்கும் இதுல முக்கியத்துவம் இருக்கும்.’’

பிரபுதேவாகூட சேர்ந்து வேலை பார்த்த அனுபவம்?

Vikatan

"அவர் எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகமா பேச மாட்டார். எங்க போர்ஷன் தவிர மற்ற போர்ஷன் ஷூட்டிங் போயிட்டிருக்கும் போது, எங்க ரெண்டு பேருக்கும் இடையில் எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது. அமைதியா அவருடைய வேலையை மட்டும்தான் அவர் பார்ப்பார். என்னோட ஷாட் முடிந்தவுடனே கேரவனுக்குப் போயிருவேன். படத்தோட கடைசி ஷெட்டியூலின்போதுதான் அவர்கிட்ட பேசினேன். அவர் டான்ஸ் மாஸ்டர் அப்படிங்கிறனால நான் பரதநாட்டியம் ஆடிய வீடியோஸ் அவர்கிட்ட காட்டுவேன். அவர் பார்த்துட்டு அவருடைய கருத்தை சொல்லுவார். அவருடைய அண்ணன், தம்பிகூட பரதநாட்டியம் க்ளாஸ் போனது பற்றிச் சொல்லுவார். அதிகமா நடனம் பற்றிதான் ரெண்டு பேரும் பேசிக்குவோம்.’’

லட்சுமி மேனன் அதிக எடை போட்டதுனாலதான் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாம இருக்காங்கனு சில வதந்திகள் வருது. இதற்கு உங்களுடைய பதில் என்ன?

’’என்னைப் பற்றி யாராவது இப்படிப் பேசுனா அதைப் பத்தி நான் எந்தக் கவலையும் படுறதில்லை. இப்படி பேசுறவங்களுக்கு என்கிட்ட எந்தப் பதிலும் இல்லை. அவ்வளவுதான்.’’

லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்

தமிழில் நீங்க நடிச்ச 'ஜிகர்தண்டா' படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படத்தில் வேலை பார்த்த அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?

’’நான் ஸ்கூல் படிச்ச காலத்தில் சித்தார்த் சாரை ரொம்பப் பிடிக்கும். அவர் நடிச்ச 'பாய்ஸ் பார்த்துட்டு ஃபேனானேன். அவர்கூட நடிப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கல. 'ஜிகர்தண்டா' ஷூட்டிங்ல என்னோட கனவு கண்ணன்கூட நடிக்கிற ஃபீல்லதான் நடிச்சேன்.’’

Vikatan

உங்களுடைய நண்பர் விஷாலுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. அவருக்கு உங்களுடைய வாழ்த்துகளைச் சொன்னீங்களா?

’’சினிமாவில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை. அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்த விஷயமே எனக்கு சமூகவலை தளங்களில் புகைப்படங்கள் பார்த்துதான் தெரிஞ்சது'' என்று முடித்தார் நடிகை லட்சுமி மேனன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு