Published:Updated:

``விஜயலட்சுமியைப் பார்த்தா கஷ்டமா இருக்கு... ஆனா, சீமான் ஃபாலோயர்ஸ்?!" - லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணன்

வனிதா விஜயகுமார் விவகாரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் போட்ட ஒரு ட்வீட், பல அதிர்வலைகளை ஏற்படுத்தி சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

விஜயலட்சுமி வெர்ஸஸ் லட்சுமி ராமகிருஷ்ணன் என விவகாரம் திசைமாற, இந்த விவகாரத்தில் தலையிட்டது என்னுடைய தவறு எனச் சொல்லி தன்னுடைய ட்விட்டர் அக்கவுன்ட்டுக்கும் பூட்டு போட்டுவிட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான லட்சுமி ராமகிருஷ்ணனுடன் பேசினோம்.

``லாக்டெளன் நாட்கள் எப்படிப் போயிட்டிருக்கு?''

``முதல்ல 10 நாள்ல முடிஞ்சிடும், 15 நாள்ல முடிஞ்சிடும்னு நினைச்சோம். இப்ப மூணு மாசத்துக்கு மேல ஆகிடுச்சு. ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமா இருந்தது. என்னோட ரெண்டு பொண்ணுங்க, அமெரிக்கா, இங்கிலாந்துல இருக்காங்க. கடைசிப் பொண்ணு என்கூட இருக்கா. எல்லோருக்குமே சின்னக்குழந்தைங்க இருக்காங்க. அதனால ஏதாவது ஆகிடுமோ, என்ன நடக்குமோன்னு யோசிச்சி யோசிச்சு பீபி-யே ஜாஸ்தியாகிடுச்சு. அப்புறம் பயப்படுறதுல ப்ரயோஜனம் இல்லை. இதை ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்னு புரிஞ்சது. இது, நமக்கான பிரச்னை மட்டுமல்ல. உலகமே போராடிட்டிருக்குன்னு என்னை நானே டைவர்ட் பண்ணிட்டு குழந்தைகளோட விளையாடுறது, கணவரோட நிறைய நேரம் பேசுறது, விதவிதமா சமைக்கிறதுன்னு இதுல கவனத்தை செலுத்த ஆரம்பிச்சிட்டேன். இதுக்கு அப்புறம்லாம் இப்படி ஒரு டைம் கிடைக்குமான்னு தெரியல. அதேமாதிரி ஒரு பெண், வீட்ல பேச ஆரம்பிச்சா பல உண்மைகள் வரும். எனக்கு 6 வயசு இருக்கும்போது பாலியல் தொந்தரவை சந்திச்சேன். இதைப்பத்தி சொன்னவுடனே, இதையெல்லாம் பேசாதே... குடும்பத்துக்கு அவமானம்னு சொல்றாங்க. இது நடந்ததுதான் குடும்பத்துக்கு அவமானம். இதுக்கெல்லாம் சண்டைபோட்டு வீட்ல கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணேன். அப்புறம் கிருஷ்ணனும் ஜீசஸும் இருக்கிற மாதிரி ஒரு போட்டோ பார்த்ததும் `Such a Beautiful Picture'னு கேப்ஷன் போட்டு ட்விட்டர்ல போட்டேன். உடனே அதுக்கு 1500 பேருக்கும் மேல என்னை அப்யூஸ் பண்ணாங்க. அவ்ளோ கேவலமான வார்த்தைகளால் திட்டினாங்க. நான் என்ன தப்பு பண்ணேன்?''

``7 வயது பெண், அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியா இருக்கே?''

``ஒரு பெண்ணா, பெண் குழந்தைகளோட தாயா, தாங்க முடியாத வலியோட இருக்கேன். இந்த 7 வயது சிறுமியோட வேதனையை, வலியை எப்படிச் சரிபண்ண முடியும்? உடம்பு முழுக்க காயம். இப்படி உடல் முழுக்க காயங்களோட எத்தனை குழந்தைகளை நான் ஷோல பார்த்திருக்கேன் தெரியுமா? 14 வயசு குழந்தை கர்ப்பமா ஷோல என் முன்னாடி உட்கார்ந்திருக்கா. ஒரு குழந்தையை அவங்க அப்பாவே பல வருஷமா பாலியல் வன்கொடுமை பண்ணியிருக்கார். அப்பாவோட சேர்ந்து அந்த ஊர்ல இருக்கிற பெரியவங்க எல்லோரும் சேர்ந்து அந்தக் குழந்தையை வன்கொடுமை பண்ணியிருக்காங்க. இந்த உலகம் எங்க போறது? நம்மளால் நம்ம குழந்தைகளைக்கூட காப்பாத்த முடியலையே, பாதுகாக்க முடியலையே?"

``இப்படிப்பட்ட சம்பவங்களுக்கான காரணம் என்னன்னு நினைக்கிறீங்க?''

``தொடர்ந்து வக்கிரமான மனிதர்களை உருவாக்கிட்டே இருக்கோம். என் பொண்ணு சென்னை கார்ப்பரேஷன் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. அங்க 5-வது படிக்கிற பையன் போன்ல ஆபாசப்படங்கள் பார்த்திருக்கான். எதுலயுமே கன்ட்ரோல் இல்லாம போயிட்டிருக்கு. விலங்குகளோட செக்ஸ் வெச்சிக்கிட்டா என்ன பிரச்னைனுலாம் இப்ப பேச ஆரம்பிச்சிட்டாங்க. அந்த விலங்குககள் ஒண்ணும் சொல்லலையேன்னுலாம் கேக்குறாங்க. நாம எங்க போயிட்டிருக்கோம். நம்மளோட கல்விமுறையையே மாத்தணும். நிறைய மாற்றங்கள் சமூகத்துல தேவைப்படுது.''

லட்சுமி ராமகிருஷ்ணன் & டீம்
லட்சுமி ராமகிருஷ்ணன் & டீம்

``இந்தமாதிரி சூழல்ல ஒரு சினிமா இயக்குநரா, இன்றைய சினிமா இயக்குநர்கள் என்ன மாதிரியான படங்கள் எடுக்கணும்னு நினைக்கிறீங்க?''

``எஜுகேஷன்னு சொல்லிட்டு மேலோட்டமா கமர்ஷியலா படம் பண்ணக்கூடாது. முறையான ஆராய்ச்சிகள் பண்ணி படங்கள் எடுக்கணும். ஏன்னா, மனநிலை சம்பந்தமான படங்களை தமிழ் சினிமா எப்படி எடுத்திருக்குன்னு நாம எல்லோருக்குமே தெரியும். பெரிய பெரிய நடிகர்களே மனநலப் பிரச்னைகளைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் இர்ரெஸ்பான்சிபிளா நடிச்சிருக்காங்க. மன அழுத்தம் இருக்கிற மக்களைத் தப்பா காட்டினா, அது சமூகத்துல பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.''

``ஜெயராஜ் - பென்னிக்ஸ் விவகாரம், இப்போது அறந்தாங்கி விவகாரம்னு சமூக அநீதிகளுக்கு எதிரா குரல்கொடுக்க செலிபிரிட்டிகள் ரொம்ப யோசிக்கிறாங்களே... ஏன்?''

``ஆமாம்... உடனே பேசமாட்டாங்க. ஏன்னா அவங்க பயப்படுறாங்க. அவங்க ஏதாவது சொல்லி, அது தப்பா ஆகிடுச்சுனா மக்கள் உண்டு இல்லைன்னு பண்ணுடுவாங்க. அதுதான் பிரச்னை. இதோ விஜயலட்சுமி மேட்டரை எடுத்துக்கோங்க. யாருமே பேசமாட்றாங்களே... அந்தப் பொண்ணு எல்லா வீடியோலயும் அவ்ளோ கதறுது. பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்தப் பொண்ணை எனக்கு நல்லாத் தெரியும். `பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்துல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்கோம். அப்புறம் ஒரு பிரச்னைல என்கிட்ட பேசினாங்க. நான் ஹெல்ப் பண்ணியிருக்கேன். அதுக்கு அப்புறம் நாங்க டச்ல இல்லை. இப்ப அந்தப் பொண்ணோட வீடியோவைப் பார்க்கும்போதெல்லாம் வயிறு எரியும். ஆனால் வாயைத் தொறக்க பயமா இருக்கு. மிஸ்டர் சீமானையும் எனக்கு நல்லாத் தெரியும். `உச்சிதனை முகர்ந்தால்' படத்துல நாங்க நடிச்சிருக்கோம். என்கிட்ட அவ்ளோ மரியாதையாப் பேசுவார். அம்மான்னுதான் கூப்பிடுவார். ஆனால், இந்த விஷயத்துல இன்டர்ஃபியர் ஆகுறதுக்கே எனக்கு பயமா இருக்கு. குழாயடி சண்டையா மாறிடும். சமீபத்துலகூட நான் பேசினது அப்படித்தான் மாறிடுச்சு. இன்னொரு பெண்ணை தாக்குறதுக்கு, அசிங்க அசிங்கமாப் பேசுறதுக்கு நான் ஏன் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கணும். ஒரு பெண்ணை ஸ்லட் ஷேம் பண்ண நான் ஏன் காரணமாயிருக்கணும். அதனாலதான் என் ட்வீட்டையெல்லாம் டெலீட் பண்ணிட்டேன். இப்போ, விஜயலட்சுமிகிட்ட போன் பண்ணி பேசக்கூட பயமா இருக்கு. ஏன்னா மிஸ்டர் சீமானுக்கு அவ்ளோ ஃபாலோயர்ஸ் இருக்காங்க. என்னை வந்து அசிங்க அசிங்கமா திட்டுவாங்க. அதை நினைச்சாதான் பயமாவும் யோசனையாவும் இருக்கு.''

``சமீபத்திய பிரச்னைல நீங்க சொன்ன கருத்துக்கு எதிர் கருத்தா நீங்க டிஆர்பி-க்காக சில விஷயங்கள் பண்ணதா அவங்க சொல்லியிருந்ததை எப்படிப் பார்க்குறீங்க?''

லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணன்

``நான் என்ன புளூ ஃபிலிமா காட்டினேன். பாவப்பட்ட மக்கள் நியாயம் கேட்குற நிகழ்ச்சிதானே அது. அதுல என்ன தப்புயிருக்கு? கோட், சூட்லாம் போட்டுட்டு, ஸ்டைலா கால் மேல கால் போட்டு உட்கார்ந்து மல்ட்டிப்பிள் ரிலேஷன்ஷிப் பத்திலாம் பேசினா, லிவிங் டு கெதர் பத்திலாம் பேசினா அது முற்போக்கா? யாரைக் கேவலப்படுத்துறீங்க, என்னையா கேவலைபடுத்துறீங்க. சாதாரண மக்களைத்தான் கேவலப்படுத்துறீங்க. அந்த மக்கள் எங்க போவாங்க? இந்த விஷயத்துல இன்னொரு பெண் செலிபிரிட்டி கிடையாது. அவ பாதிக்கப்பட்டிருக்கா. அதனாலதான் நான் பேசினேன். அப்புறம் பார்த்தா அந்த செலிபிரிட்டியை எல்லோரும் ஸ்லட்ஷேம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. எத்தனை கணவர்கள்னுலாம் எழுத ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு பெண்ணை திட்டுறதுக்கு நானே காரணமாயிட்டனேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். அவங்ககிட்ட பேசி மன்னிப்பு கேட்டேன். இந்த விஷயத்துக்குள்ள வந்ததுக்கு என்னை நானே செருப்பாலேயே அடிச்சிக்கணும்னு தோணுச்சு. அதனாலதான் ட்விட்டர் அக்கவுன்ட்டை லாக் பண்ணிட்டேன். இப்ப எடுத்துட்டேன்.''

``அவங்க பிரிஞ்சி 8 வருஷமாச்சு... இப்ப 1 கோடி கேட்டு மிரட்டுறாங்க!'' - வனிதா விஜயகுமார்
அடுத்த கட்டுரைக்கு