“ஒரு வாழ்க்கையைத் தொலைத்தபிறகு இன்னொரு வாழ்க்கையை நாம் தேடிக் கண்டடைவதில் தவறில்லை. இத்தனை வருடங்கள் நான் மறுமணத்தைப் பற்றி யோசிக்க வில்லை. எனக்கும் என் குடும்பத்துக்கும் ஏற்ற ஒருவர் அமைந்தால், நிச்சயம் யோசிப்பேன்!” என்கிறார், தன்னம்பிக்கைப் பெண்ணாக நிமிர்ந்து நிற்கும் ரேஷ்மா... பிக் பாஸ் பிரபலம்!

‘`எனக்கு நினைவுதெரிந்து நான் கூட்டுக் குடும்பமாகத்தான் வாழ்ந்திருக்கிறேன். நானும் பாபி சிம்ஹாவும் ஒன்றாகத்தான் பள்ளிக்குப் போவோம். எனக்கு 18 வயது இருக்கும்போது அப்பா அம்மாவின் விருப்பத்தின்பேரில் திருமணம் நடந்தது. பிறகு, அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டோம். குழந்தைகள் பிறந்தார்கள். சிறிய வயதில் நடைபெற்ற திருமணம் என்பதால் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்படவே, இருவரும் பிரிந்தோம். என்ன வாழ்க்கை இது எனப் புலம்பியிருந்தாலும், ஒரு கட்டத்துக்குமேல் அதிலிருந்து என்னை மீட்க ஆரம்பித்துவிட்டேன். ஆயிரம் கவலைகள், பிரச்னைகளில் இருந்துதானே தன்னம்பிக்கை மிளிரும்?’’ - சிரித்துக்கொண்டே தொடர்ந்தாலும் ரேஷ்மாவின் முகத்தில் அழுகை ரேகைகள்தாம்.

‘`என் இரண்டாவது குழந்தை, பிறந்து மூன்றாவது மாதத்திலேயே இதய பாதிப்பினால் இறந்துவிட்டது. இல்லாத குழந்தையின் மீதான ஏக்கம் கொடியது. ஒவ்வொரு வருடமும் என் இரண்டாவது குழந்தையின் கல்லறைக்குச் சென்றுவருவதுண்டு. திரும்பி வரும்போது மனம்கனத்துக் கண்ணீர் கரைபுரண்டோடும். அது ஒன்பது மாதங்கள் என் கருவறையில் இருந்திருக்கிறது. அது பூமிக்கு வந்தும், அம்மாவைப் பார்த்தும் அதனுடைய வாழ் நாள் நீடிக்கவில்லையே’’ - அழும்போது அவரைத் தேற்ற நமக்கு வார்த்தை இல்லை.

“அந்தக் குழந்தையை இழந்த துக்கத்திலிருந்து என்னை மீளவைத்தது, என் மூன்றாவது குழந்தை. ஒருமுறைகூட நான் குழந்தைகள் முன்பு அழுததில்லை. என் கஷ்டத்தை, ஆத்திரத்தை அவர்களிடம் காட்டியதில்லை.

என் பெற்றோருக்காக இரண்டாவது திருமணத்துக்கு சம்மதித்தேன். ஓர் அமெரிக்கருடன் எனக்குத் திருமணமானது. இரண்டாவது முறையாக அமைந்த வாழ்க்கைத் துணையும் என்னைத் துன்புறுத்தினார். என்னை அடிப்பது, வார்த்தைகளால் காயப்படுத்துவது தொடர்ந்தது. பல இரவுகள் வலியில் துடித்திருக்கிறேன், கண்ணீர் விட்டிருக்கிறேன். பெற்றோருக்குத் தெரிந்தால் சங்கடப்படுவார்கள் என்பதால் சில விஷயங்களை மட்டுமே சொல்வேன். என் மூன்றாவது குழந்தையின் பிரசவ நேரத்தில்கூட அவர் என்னுடன் இல்லை. பிரசவ வலியைப் பொறுத்துக்கொண்டு, பிரசவத்துக்கான வழிகளை நானே பார்த்துக்கொண்டேன். குறைப்பிரசவம் என்பதால் மருத்துவமனையிலேயே சில நாள்கள் இருந்தேன். என் குழந்தை என்னுடன் இல்லை. பிறகு என்னை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். நான் எவ்வளவு வற்புறுத்திக்கேட்டும் குழந்தையோடு இருக்க முடியவில்லை. பகலில் சில மணி நேரம் மட்டுமே பார்க்க அனுமதிப்பார்கள். அந்த நேரத்துக்காக இரவெல்லாம் விழித்திருப்பேன்.

சில நாள்கள் கழிந்து குழந்தை முழுவதுமாக குணமடைந்துவிட்டதாகச் சொன்னார்கள். அந்த நேரத்தின் ஆனந்தத்தின் அளவை வேறு எப்போதுமே கண்டதில்லை. மருத்துவ மனைக்குச் செல்லும்போதெல்லாம் என் முதல் குழந்தையையும் அழைத்துச் செல்வேன். அவனும் அந்தக் குழந்தையைப் பாசமாகப் பார்ப்பான். அந்தப் பிணைப்பு இப்போதும் தொடர்கிறது.

இந்த சம்பவங்களையெல்லாம் இவ்வளவு நாள்கள் மறைத்தே வைத்திருந்தேன். மறைத்து வைப்பதால் என்ன பயன்? என் வாழ்க்கை மற்ற பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டுமே என்று இப்போது பகிர்கிறேன்.

என் குழந்தைகள் சென்னை யில்தான் படிக்கிறார்கள். அவர் களுக்கு அப்பா இல்லாத குறையை நானே போக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவர்கள் மனதில் நான் என்னவாக இருக்கிறேன் என்பது, அவர்கள் வளர்ந்த பிறகுதானே தெரியும்?'' என்கிற ரேஷ்மா பெண்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான்...

``எதற்கும் தயங்காதீர்கள்; தளராதீர்கள். நீங்கள் விட்ட இடத்திலிருந்து மீண்டும் வாழ்க்கை யைத் தொடர உங்களால் மட்டுமே முடியும்!”

ஓ... அமெரிக்கா!

எனக்கு வாழ்க்கையைப் புரியவைத்த, புரட்டிப்போட்ட இடம் அமெரிக்கா. அதனால், அந்த நாடு எப்போதும் என் ஃபேவரைட்!

2008-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத் திரும்பினேன். முதன்முதலாக தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2012-ல் சென்னைக்குத் திரும்பி விட்டேன். ‘மசாலா படம்’, ‘கோ’ என சினிமாவிலும் ‘வம்சம்’, ‘வாணி ராணி’ என சின்னத்திரையிலும் நடித்து முழுநேர நடிகையானேன்.