Published:Updated:

`சிங்கம்’ டேனி முதல் ஏமி ஜாக்ஸன் வரை... கோலிவுட்டில் கலக்கிய ஹாலிவுட் நடிகர்கள்!

கோலிவுட்டில் களமிறங்கிய வெளிநாட்டு நடிகர்கள்!

ராஜமெளலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் `RRR' படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜெனிஃபர் என்ற கேரக்டரில் நடிக்க ஒலிவியா மோரிஸ் எனும் ஹாலிவுட் நடிகை ஒப்பந்தமாகி இருக்கிறார். தவிர, அந்தப் படத்தின் நெகட்டிவ் கேரக்டர்களாக ரே ஸ்டீவன்சன் எனும் அயர்லாந்து நடிகரும் அவரின் மனைவி கேரக்டருக்கு ஆலிசன் டூடி எனும் அயர்லாந்து நடிகையும் ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இந்தச் சம்பவங்கள் தமிழுக்குப் புதிதல்ல. தமிழ்ப் படங்களில் நடித்த வெளிநாட்டு நடிகர்களின் பட்டியல் இது!

2
Danny Sapani

சிங்கம் 2 - Danny Sapani :

ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டை பூர்வீகமாகக் கொண்ட டேனி, லண்டனில் பிறந்து வளர்ந்தவர். லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடிப்பு கற்றுக்கொண்டு பிரிட்டிஷ் டிவி சீரிஸ்கள், படங்கள் என நடித்துவந்தார். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட டிவி சீரிஸ்களிலும், பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். `சிங்கம் 2' படத்தில் நைஜீரியாவைச் சேர்ந்த போதை மருந்து கடத்தும் சர்வதேச கேங்ஸ்டராக நடித்திருப்பார், டேனி. சூர்யாவுக்கும் இவருக்குமான ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

3

லிட்டில் ஜான் - Bentley Mitchum :

சிங்கீதம் ஶ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உருவான படம், `லிட்டில் ஜான்'. தமிழ், இந்தி, ஆங்கிலம் என ட்ரைலிங்குவலில் உருவான இப்படத்தில் அமெரிக்க நடிகர் பென்ட்லி மிட்சமை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் சிங்கீதம். அவருக்கு ஜோடியாக ஜோதிகா. ஃபேன்டஸி ஜானரில் வெளியான இந்தப் படத்தில் நிறைய கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இருக்கும். பென்ட்லி மிட்சம், ராபர்ட் மிட்சம் எனும் புகழ்பெற்ற அமெரிக்க நடிகரின் பேரன். நிறைய அமெரிக்க திரைப்படங்களிலும் டிவி சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.

4
Amy Jackson

மதராசப்பட்டினம் - Amy Jackson :

லண்டனைச் சேர்ந்த ஏமி ஜாக்சன் தன் பதின் பருவத்திலிருந்தே மாடலிங்கில் கவனம் செலுத்திவந்தார். மிஸ் டீன் லிவர்பூல் பட்டத்தை வென்ற பிறகு, மிஸ் டீன் வேர்ல்ட் பட்டத்தையும் வென்றார். இந்தப் போட்டியில் எமி பங்குபெற்ற போட்டோவை பார்த்த இயக்குநர் விஜய் `மதராசப்பட்டினம்' படத்தில் அவரை துரையம்மாவாக நடிக்க வைத்தார். பின், `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இந்தி வெர்ஷனாகிய `ஏக் திவானா தா', `தாண்டவம்', `ஐ', `தங்கமகன்', விஜய்யுடன் `தெறி' ரஜினிகாந்த்துடன் `2.0' என முன்னணி நாயகியாக இருந்தார் ஏமி ஜாக்ஸன்.

5
Nathan Jones

பூலோகம் - Nathan Jones :

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாதன் ஜோன்ஸ், அடிப்படையில் ஒரு பளுதூக்கும் மற்றும் மல்யுத்த வீரர். மார்ஷியல் ஆர்ட்ஸும் கற்றுள்ளார். நிறைய மல்யுத்தப் போட்டிகளிலும் மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டிகளிலும் கலந்துகொண்டு பல பட்டங்களை பெற்றுள்ளார். WWE–லும் சிலகாலம் போட்டியாளராக இருந்துள்ளார். இவை தவிர, ஆஸ்திரேலியன் திரைப்படங்கள், ஃப்ரெஞ்ச் திரைப்படங்கள் என சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டும் இருந்தார். அதைப் பார்த்த `பூலோகம்' இயக்குநர் கல்யாணகிருஷ்ணன் இந்தப் படத்தில் ஸ்டீவன் ஜார்ஜ் என்ற கேரக்டரில் நடிக்கவைத்தார்.

6
Roland Kickinger

பேராண்மை - Roland Kickinger :

`பேராண்மை' படத்தின் இரண்டாம் பாதியில் ஜெயம் ரவியை மட்டுமல்லாது படம் பார்க்கும் அனைவரையும் மிரட்டும் ரோலன்ட் கிக்கிங்கரின் தோற்றம். ஆண்டர்சன் எனும் கேரக்டரில் இவரது ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த ரோலன்ட் ஒரு பாடி பில்டர். குறும்படங்களில் நடித்துவந்தவர் பிறகு, அமெரிக்க படங்களில் நடிக்கத் தொடங்கினார். `பேராண்மை' படம் பார்த்த அனைவரும் `பார்க்க அர்னால்டு மாதிரியே இருக்கார்ல!' என்றுதான் சொன்னார்கள். அதன்பிறகுதான் தெரிந்தது இவர் அர்னால்டுக்கே டூப் போட்டவர் என்று. தற்போது அமெரிக்கா டிவி சீரிஸ்களில் நடித்துவருகிறார்.

7
Johnny

ஏழாம் அறிவு - Johnny :

வியட்நாமில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளரான ஜானி ட்ரி நுயென், `ஸ்பைடர் மேன்' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் ஸ்டன்ட்மேனாகவும் பணிபுரிந்துள்ளார். பிறகு, தன் சகோதரர் இயக்கிய `The Rebel' னும் பீரியர் மார்ஷியல் ஆர்ட்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்தப் படத்துக்கு வியட்நாமில் பெரிய வரவேற்பு கிடைத்தது. வியட்நாம் படங்கள் மட்டுமல்லாது சில தாய்லாந்து படங்களிலும் நடித்தார், ஜானி. அதைத் தொடர்ந்து, முருகதாஸ் இவரை கோலிவுட்டுக்கு அழைத்துவந்தார். `ஏழாம் அறிவு' படத்தில் இவரது கேரக்டரான டாங் லீயை மறக்கவே முடியாது. இவருக்கும் சூர்யாவுக்குமான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் சிறப்பாக அமைந்திருக்கும். இந்தப் படம் மூலம் டாங் லீயாகவே நம் மக்களுக்கு பரிட்சயமான ஜானி, அதர்வாவுக்கு வில்லனாக `இரும்புக்குதிரை' படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு, தமிழ் படங்கள் நடிக்கவில்லை. இப்போது வியட்நாமில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி கொடுத்துவருகிறார். அருண் விஜய் நடிக்கும் `பாக்ஸர்' படம் மார்ஷியல் ஆர்ட்ஸ் தொடர்புடையது என்பதால் அருண் விஜய் ஜானியிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

8
Andreanne nouyrigat

ரஜினிமுருகன் - Andreanne nouyrigat :

பிரான்ஸில் பிறந்து பாண்டிச்சேரியில் சில காலம் வாழ்ந்திருக்கிறார். பிறகு, மீண்டும் பிரான்ஸுக்குப் பறந்தவர் அங்கு தன் படிப்பை முடித்துவிட்டு திரும்பினார். ஒரு டெலி பிலிமிலும் நிறைய பிரெஞ்ச் மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார். அப்போது வந்த வாய்ப்புதான், `சிவாஜி' பட `அதிரடிதான் மச்சான்' பாடல். தவிர, மாடலிங்கில் கவனம் செலுத்தியவர் தமிழ் பேசவும் கற்றுக்கொண்டார். `ரஜினிமுருகன்' படத்தில் சூரியின் ஜோடியாக நடித்து கவனம் பெற்றார். பிறகு, `ஜீரோ' படத்தில் பேயாக நடித்திருந்தார். `மேல்நாட்டு மருமகன்' என்ற படத்தில் ஹீரோயினாகவே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர, கோலிவுட்டில் நடித்த வெளிநாட்டு நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். உங்களுக்குப் பிடித்தவர்களை கீழே கமென்ட் செய்யுங்கள்!

அர்ஜுன் ரெட்டியாக விஜய்தேவரகொண்டா தாறுமாறு... ஆதித்ய வர்மாவாக துருவ் விக்ரம் எப்படி?!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு