Election bannerElection banner
Published:Updated:

ஓரம் போ, ஆரண்ய காண்டம், இன்னும் பல... - தமிழ் சினிமாவின் ஈஸ்டர் எக்குகளைக் கண்டுபிடிப்போமா?!

aaranya kaandam
aaranya kaandam ( screenshot from youtube )

சினிமா உலகில், `ஈஸ்டர் எக்' என்றொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. அதை எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு படம் எந்தப் புனைவுலகத்தில் நடக்கிறதோ அதே புனைவுலகத்தைச் சேர்ந்த மற்ற படங்கள் / கதாபாத்திரங்கள் / புகைப்படங்கள் போன்றவற்றை அதில் ஒளித்துவைத்திருப்பார்கள்.

ஈஸ்டர் திருநாளான நேற்று, `ஈஸ்டர் எக்' எனப்படும் ஈஸ்டர் முட்டைகளை அன்புக்குரியவர்களுக்குப் பரிசளிப்பார்கள். சில நேரங்களில் அவற்றை ஒளித்துவைத்து, `ஈஸ்டர் ஹன்ட்' என்கிற பெயரில் அவற்றைக் கண்டுபிடித்தும் களிப்படைவார்கள். அதுபோல், நம் தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலரும் அவர்களின் படங்களில், ஈஸ்டர் எக்குகளை ஒளித்து வைக்கிறார்கள் தெரியுமா!
super deluxe
super deluxe

சினிமாவுலகில், `ஈஸ்டர் எக்' என்றொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. அதை எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு படம் எந்தப் புனைவுலகத்தில் நடக்கிறதோ அதே புனைவுலகத்தைச் சேர்ந்த மற்ற படங்கள் / கதாபாத்திரங்கள் / புகைப்படங்கள் போன்றவற்றை அதில் ஒளித்துவைத்திருப்பார்கள். அப்படி கண்டுபிடித்த சில ஈஸ்டர் எக்குகள் இதோ...

தியாகராஜன் குமாரராஜாவின் படங்கள் எல்லாம் ஒரே புனைவுலகத்தில் நடக்கக்கூடியவை. அதனால்தான், `ஆரண்ய காண்டம்' படத்தில் நடித்திருந்த நடிகர்களில் வெறும் இருவர் மட்டுமே, `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்திருப்பார்கள். அதுவும் முந்தைய படத்தில் நடித்திருந்த அதே கேரக்டரில். இன்னும் சிலரும் முகம் காட்டியிருப்பார்கள். ஆனால், அது 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டரில்.

aaranya kaandam
aaranya kaandam
`சூப்பர் டீலக்ஸ்' படத்தின் சுவர்களில் இருக்கு அவ்ளோ டீடெயில்ஸ்! #1YearOfSuperDeluxe

`ஆரண்ய காண்டம்' படத்திலும், அதற்கு முன் தியாகராஜன் குமாரராஜா பணியாற்றிய `ஓரம் போ' படத்தைச் சேர்ந்த ஒரு ஈஸ்டர் எக்கை ஒளித்துவைத்திருப்பார். சப்பையும், சுப்புவும் சாலையில் நடந்து செல்கையில், அவர்களைக் கடந்து `ஓரம் போ' படத்தில் வரும் ஆட்டோக்கள் ரேஸில் பறந்துகொண்டிருக்கும்.

இன்னொரு காட்சியில் சப்பை விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ கேமில், ஒரு காதல் ஜோடியை ஏலியன் ஸ்பேஸ்ஷிப் ஒன்று தூக்கிச்செல்வது போல் இருக்கும். 8 வருடங்கள் கழித்து ரிலீசான `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் வரும் காஜியின் கதையை நமக்கு அப்போதே சொல்லிவிட்டார் குமாரராஜா.

poovarasam pepee
poovarasam pepee

`சில்லுக்கருப்பட்டி' படத்தின் மூலமாக நம்மை அன்பில் நெகிழ வைத்த ஹலிதா ஷமீம் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் `ஏலே'. ஆனால், இந்தப் படத்தை பற்றிய ஈஸ்டர் எக்குகளை தனது முந்தைய படத்திலேயே ஒளித்துவைத்திருக்கிறார் அவர். `பூவரசம் பீப்பி' படத்தில் வரும் ஐஸ்வண்டியில், `ஏலே' என எழுதியிருக்கும். அதேபோல், `சில்லுக்கருப்பட்டி'யில் முகிலன் தனக்கு நிச்சயிக்கபட்ட பெண்ணிடம், ``ஏலே' படத்துக்குப் போலாமா?' என வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பிக்கொண்டிருப்பார்.

'ஓரம் போ' படமெடுத்த புஷ்கர்-காயத்ரியின் அடுத்த படம் தான் 'வ: குவார்ட்டர் கட்டிங்'. இந்தப் படத்தில் ஆர்யா 'ஓரம் போ' படத்தில் ஓட்டிய அதே ஆட்டோவுடன் வந்து அட்டெண்டெண்ஸ் போட்டுவிட்டுப் போவார். இந்த `ஓரம் போ' ஆட்டோதான் எங்கெல்லாம் பயணித்திருக்கிறது!

va
va

`மாற்றான்' படத்தின் ஒரு ஃப்ரேமில் கே.வி.ஆனந்தின் முந்தைய படமான 'கோ' படத்தில் வருகின்ற, அதில் இறந்துபோகும் கதாபாத்திரமான 'சிறகுகள்' வசந்தனுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். அதேபோல்,`கோ' படத்தில், `அயன்' படத்திற்கு சினிமா விமர்சனம் எழுதுவது பற்றியான உரையாடலும் பத்திரிகை அலுவலகத்தில் எழும். `அனேகன்' படத்தில் நாயகியுடன் படிக்கும் மாணவியாக ஆங் சான் சூகியைக் காட்டியிருப்பார்கள்.

'ஜிகர்தண்டா' படத்தில் அசால்ட் சேதுவுக்கு தான் எடுத்த குறும்படங்களைப் போட்டுக் காட்டுவார் கார்த்திக். அவை எல்லாம் நிஜத்திலேயே, நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காகக் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படங்கள். அதேபோல், `பீட்சா' படத்தின் முதல் காட்சியில் அமானுஷ்ய நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். அந்த நிகழ்ச்சியின் தொழில்நுட்பக் கலைஞர்களாக, `பீட்சா' படத்தின் கலைஞர்கள் பெயரே வரும்.

jigarthanda
jigarthanda

'வாரணம் ஆயிரம்' படத்தில் அமெரிக்கா செல்ல விசா கிடைத்த குஷியில் கிடார் வாசித்துக்கொண்டிருப்பார் சூர்யா. `இது என்ன படம் பாட்டு' என வீட்டார் கேட்கையில், `இது என்னோட சொந்த கம்போஷிசன். இந்த மாதிரி டியூன்லாம் வர இன்னும் பத்து வருஷம் ஆகும்` என்பார் சூர்யா. அந்த ட்யூன், `வேட்டையாடு விளையாடு' படத்தில் வரும் `மஞ்சள் வெயில் மாலையிலே'.

இப்படி நீங்கள் பார்த்த படங்களில், நீங்கள் கவனித்த ஈஸ்டர் எக்குகளை கமென்ட்டில் தட்டிவிடுங்க மக்களே!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு