Published:Updated:

விஜய் சேதுபதியின் `லாபம்', கங்கனாவின் `தலைவி'... விரைவில் தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன?

'தலைவி' கங்கனா

"இந்த வெள்ளியன்று நேரடித் தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகல. ஆனால் மம்மூட்டியின் டப்பிங் படமான 'சர்க்கிள்', ஆங்கிலப்படம் ஒன்று 'வீராதி வீரன்', 'காஞ்சுரிங்3' ஆகியப்படங்கள் வருது. வரும் வியாழனறு 'காந்தி இர்வீன்3' என்ற ஆங்கிலப் படம் வெளியாகுது."

விஜய் சேதுபதியின் `லாபம்', கங்கனாவின் `தலைவி'... விரைவில் தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன?

"இந்த வெள்ளியன்று நேரடித் தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகல. ஆனால் மம்மூட்டியின் டப்பிங் படமான 'சர்க்கிள்', ஆங்கிலப்படம் ஒன்று 'வீராதி வீரன்', 'காஞ்சுரிங்3' ஆகியப்படங்கள் வருது. வரும் வியாழனறு 'காந்தி இர்வீன்3' என்ற ஆங்கிலப் படம் வெளியாகுது."

Published:Updated:
'தலைவி' கங்கனா
தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் எதிர்பார்க்கப்படும் புதுப் படங்களின் ரிலீஸ்கள் அடுத்த மாதத்துக்கு தள்ளிப்போகின்றன.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளியன்றும் குறைந்தது நான்கைந்து நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாவது வழக்கம். கொரோனா சூழலால் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த திங்கள்தான் மீண்டும் திறக்கப்பட்டது. 'தியேட்டர் திறக்கலாம்' என்ற அரசின் திடீர் அறிவிப்பினால் பல தியேட்டர்கள் உடனடியாக ரெடியாகாத காரணத்தினால், நாற்பது சதவிகித திரையரங்கங்களே திறந்தன. இந்நிலையில் வரும் வெள்ளியன்று 100 சதவிகித திரையரங்குகளும் திறக்கப்பட்டுவிடும் என்கிறார்கள்.

லாபம்
லாபம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிலீஸுக்கு ரெடியாக சுந்தர்.சியின் 'அரண்மனை-3', மிஷ்கினின் 'பிசாசு- 2', சசிகுமாரின் 'எம்ஜிஆர் மகன்' உள்பட நாற்பது படங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால், இப்போது திரையரங்குகளில் ஐம்பது சதவிகித பார்வையாளர்களே கண்டுகளிக்க முடியும் என்பதால், அதன் தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்ய முன் வரவில்லை என்கிறார்கள். சின்ன பட்ஜெட் படங்களும் இந்த வாரம் எதுவும் வெளியாகவில்லையாம். அவை செப்டம்பர் 3-தேதி வெளியாகும் என்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபற்றி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினோம்.

"இந்த வெள்ளிக்கிழமை நேரடித் தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகல. ஆனால், மம்மூட்டியின் டப்பிங் படமான 'சர்க்கிள்', 'வீராதி வீரன்', 'காஞ்சுரிங்-3'னு சில படங்கள் ரிலீஸுக்கு வருது. செப்டம்பர் 3-ம் தேதி 'ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்' வெளியாகுது. ஆனால், தமிழ் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே வரும் செப்டம்பர் 9, 10-ம் தேதி, அதாவது விநாயகர் சதுர்த்தியிலிருந்து வரிசையா வெளியாகும். செப்டம்பர் 9-ம் தேதி விஜய் சேதுபதியின் 'லாபம்' மற்றும் கங்கனாவின் நடிப்பில் ஜெயலலிதாவின் பயோபிக்கான 'தலைவி' படங்களின் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளன. 'திரௌபதி' இயக்குநரின் படம் 'ருத்ரதாண்டவம்' வருகிற மூன்றாம் தேதியன்றோ அல்லது பத்தாம் தேதியன்றோ வெளியாகலாம்.

வலிமை
வலிமை

அதே தினத்தில் விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' சன் டி.வியிலும், 'கடைசி விவசாயி' சோனி லைவிலும் வெளியாகிறது. சிம்புவின் 'மாநாடு' படத்தை சரஸ்வதி பூஜையன்று வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அஜித்தின் 'வலிமை' தீபாவளியன்றோ அல்லது வருகிற கிறிஸ்துமஸ் தினத்திலோ வரலாம். தீபாவளிக்கு 'அண்ணாத்த' நிச்சயம் ரிலீஸ் என்றால் 'வலிமை' வெளியாவது சந்தேகம்தான். உடனடியாக ரிலீஸ் செய்யலாம் என்ற பட்டியலில் 'அரண்மனை-3'யும், 'சிவகுமாரின் சபதம்', 'குருதி ஆட்டம்' படங்கள் உள்ளன. சசிகுமாரின் 'எம்.ஜி.ஆர் மகன்' உள்பட பல படங்கள் இன்னும் பேச்சு வார்த்தையில்தான் உள்ளன" என்றார் திருப்பூர் சுப்ரமணியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism