Published:Updated:

விஜய் இல்லாமல் தொடங்குகிறது 'விஜய் 64' ஷூட்டிங்! #Vijay64

Lokesh Kanagaraj directorial Vijay-64 shoot to start soon
Lokesh Kanagaraj directorial Vijay-64 shoot to start soon

'கைதி'க்குப் பிறகு, விஜய்யை வைத்து ஒரு கேங்ஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகச் செய்திகள் வெளியாகின.

அட்லி இயக்கிவரும் 'பிகில்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், விஜய்யின் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கும் இந்தப் படத்துக்கு 'விஜய் 64' எனத் தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

'மாநகரம்', 'கைதி' படங்களைத் தொடர்ந்து விஜய் 64 படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ். முதல் படத்திலேயே திரைக்கதையில் தனக்கென ஒரு முத்திரை பதித்துவிட்டு, தற்போது இரண்டாவது படமான 'கைதி'யின் முன்னோட்டத்திலும் அதே அளவுக்குத் த்ரில் சேர்த்திருக்கிறார். கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் 'கைதி', சிறையிலிருந்து தப்பிச் செல்லும் ஒரு தண்டனைக் கைதியைப் பற்றிய படம் எனக் கூறப்படுகிறது. இந்தப் படம் செப்டம்பரில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

'கைதி'க்குப் பிறகு, விஜய்யை வைத்து ஒரு கேங்ஸ்டர் படத்தை லோகேஷ் இயக்குகிறார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும், அர்ஜுன் மற்றும் 'அங்கமாலி டைரீஸ்' நாயகனான ஆண்டனி வர்க்கீஸ் வில்லன்களாக நடிக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகின.

தற்போது இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவிருப்பதாக, படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் 'பிகில்' படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், முதலில் விஜய் இல்லாத காட்சிகளை 'விஜய்-64' படக்குழு படமாக்க இருக்கிறது. கிட்டத்தட்ட 30 நாள்கள் கொண்ட முதல்கட்டப் படப்பிடிப்பின் இறுதியில் விஜய் இணைவார் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்த வருடம் சம்மருக்கு படம் ரிலீஸ்!

அடுத்த கட்டுரைக்கு