Published:Updated:

``பண விஷயத்துல பல தடவை ஏமாந்திருக்கேன்!" பெர்சனல் பகிரும் மனோகர்!

மனோகர்

இதுவரை அரசாங்கத்துக்குக் கட்ட வேண்டிய வீட்டு வரியை முறையா கட்டிட்டு இருக்கேன். நானும் பல முறை மாநகராட்சிக்கு போய் இது சம்பந்தமா புகார் கொடுத்துட்டேன். - மனோகர்

``பண விஷயத்துல பல தடவை ஏமாந்திருக்கேன்!" பெர்சனல் பகிரும் மனோகர்!

இதுவரை அரசாங்கத்துக்குக் கட்ட வேண்டிய வீட்டு வரியை முறையா கட்டிட்டு இருக்கேன். நானும் பல முறை மாநகராட்சிக்கு போய் இது சம்பந்தமா புகார் கொடுத்துட்டேன். - மனோகர்

Published:Updated:
மனோகர்

கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் வயது கொண்ட பழைமையான வீடு. குனிந்து செல்லும் அளவிற்கு சிறிய முகப்பு. உள்ளே எந்த நேரமானாலும் இடிந்து விழும் என்கிற நிலையில் உடைந்த மண் சுவர்கள். சேதமடைந்த கழிப்பறை. திறந்தவெளி குளியலறை என சேதமடைந்த நிலையில் இருக்கும் அந்த வீட்டில்தான் காமெடி நடிகராக நமக்கு பரிச்சயமான நடிகர் 'லொள்ளு சபா' மனோகர் வாழ்ந்து வருகிறார். பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுகிறார் என்பதுபோல அவர் குறித்த வதந்திகள் சமூகவலைதள பக்கங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்ற சூழலில் அவரைச் சந்தித்து பேசினோம்.

மனோகர்
மனோகர்

'நான் பாங்கில் வேலை பார்த்துட்டே நடிச்சிட்டும் இருந்தேன். இப்போ ரிட்டயர்டு ஆகிட்டேன். அதோட பென்ஷன் பணம் மாச, மாசம் வந்துட்டு இருக்கு. சினிமாவில் சம்பாதித்த பணமும் கையில் இருக்கு. எனக்கு பொருளாதார ரீதியா எந்த பிரச்னையும் இல்லைங்க. இந்த வீட்டை இடிச்சு கட்ட முடியலை அது மட்டும்தான் என்னோட பிரச்னை என்றவர் அது குறித்து விரிவாக பேசத் தொடங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்னோட பெரியப்பா கட்டின வீடு இது. இந்த வீட்டை அடி மனை குத்தகைக்கு மனோகருக்கு விற்கப்பட்டதுன்னு என் பெயரில் ரிஜிஸ்டர் பண்ணிக் கொடுத்துட்டாங்க. ஒவ்வொரு ஆளுக்கா இந்த வீடு கை மாறி கடைசியில் நான் பணம் கொடுத்து வாங்கிட்டேன். யார், யாரோ இந்த வீட்டில் அவங்களுக்கும் பங்கு இருக்குன்னு சொல்றாங்க. பங்கு இருக்குன்னு வாய் வார்த்தையால் சொன்னா என்ன பண்ண முடியும்? பத்திரத்தை கொண்டு வந்து இது என் இடம் என் அனுமதி இல்லாமல் நீ இந்த வீட்டை இடிக்கக் கூடாதுன்னு சொன்னாங்கன்னா அது சரி.. ஆனா, எந்த பத்திரமும் இல்லாம இந்த வீட்டில் எங்களுக்கும் உரிமை இருக்குன்னு சொல்றது எப்படி சரியா இருக்கும்? 20 வருஷமா இப்படியே என்னை அலைக்கழிச்சுட்டே இருக்காங்க. மன நிம்மதி மொத்தமா போச்சு.

மனோகர்
மனோகர்

இந்த வீடு எப்போ வேணும்னாலும் இடிந்து விழும். கார்ப்பரேஷனில் இருந்து வந்து வீட்டை பார்த்துட்டு நீங்க உடனே வீட்டை இடிச்சு கட்டுங்கன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்.. நாளைக்கே வேலையை ஆரம்பிச்சிடுவேன். இதுவரை அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிய வீட்டு வரியை முறையா கட்டிட்டு இருக்கேன். நானும் பல முறை மாநகராட்சிக்கு போய் இது சம்பந்தமா புகார் கொடுத்துட்டேன். அவங்க யாரும் எந்த ஸ்டெப்பும் எடுக்கலை. வீடு இடிஞ்சு விழுந்து எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு அரசாங்கம் தான் பொறுப்பு. அவங்க இந்த பிரச்னையில் தலையிட்டு இதுக்கு தீர்வு வாங்கிக் கொடுத்தாங்கன்னா நான் இந்த வீட்டை சீரமைச்சிட்டு நிம்மதியா இருப்பேன்.

எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். பொண்ணு இன்ஜினியரிங் படிச்சு முடிச்சிருக்கு. என் பொண்ணுக்கு கல்யாண பேச்சுவார்த்தை கூட தொடங்க முடியலை. பொண்ணு பார்க்க வர்றவங்க இப்படி இருக்கிற வீட்டில் எப்படி முதலில் பொண்ணு கொடுக்க சம்மதிப்பாங்க. மாப்பிள்ளை, பொண்ணு கல்யாணம் ஆகி தங்க கூட இந்த வீட்டில் வசதியில்லை. வீட்டை சீரமைச்சா தான் பொண்ணுக்கு திருமண வாய்ப்புகள் வரும்.

மனோகர்
மனோகர்

பணம் கையில் இருந்தப்போ பக்கத்துல நண்பர்களா பழகினவங்க கடன் கேட்டாங்கன்னு கொடுத்தேன். வாங்கிய பணத்தை இதுவரைக்கும் திரும்ப கொடுக்கலை. நான் மனிதாபிமானத்தோடு அவங்களுக்கு உதவி பண்ணினேன். நான் அவங்ககிட்ட கடன் கேட்கிற மாதிரி என்னை அணுகுறாங்க. நான் கொடுத்த பணத்தில் பிசினஸ் ஆரம்பிச்சு இன்னைக்கு லைஃப்ல நல்லா செட்டில் ஆகியிருக்காங்க. இப்பவரைக்கும் கொடுத்த பணம் திரும்பி வரலை. இப்படி நான் மத்தவங்களை நம்பி பண ரீதியா பல தடவை ஏமாந்திருக்கேன்.

என்னை நிம்மதியா இருக்க விட்டாலே போதும். பெரிய நடிகனா இருக்கேன்.. ஆனாலும், எனக்கே இந்த அளவுக்கு மன உளைச்சல் கொடுக்கிறாங்க. இருபது வருஷமா இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். வீட்டை சீரமைச்சிடலாம்னு தொடர்ந்து அதுக்கான முயற்சிகள் செய்துட்டே இருக்கேன். ஒவ்வொரு முறையும் அந்த முயற்சியில் தோல்வியடைஞ்சிட்டும் இருக்கேன். இனியாவது இந்த நிலை மாறும்னு நம்புறேன். என்னோட கோரிக்கையை புரிஞ்சுகிட்டு அரசாங்கம் எனக்கு ஒரு தீர்வு கிடைக்க உதவி பண்ணுவாங்கன்னு நம்புறேன்!' என்றார்.

படங்கள் - சந்தீப், விக்னேஷ்