கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“ஈழம் பற்றிய படங்களில் நடிக்க மாட்டேன்!”

 லாஸ்லியா, ஹர்பஜன்சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
லாஸ்லியா, ஹர்பஜன்சிங்

இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராகத்தான் என் கரியர் தொடங்குச்சு. இந்தியாவுக்கு வந்து ஒரு நல்ல டிவி ஆங்கர் ஆகணும் என்பது மட்டும்தான் அப்போதைய விருப்பமா இருந்துச்சு.

இனிது இனிது தமிழ் இனிது. அதனினும் இனிது லாஸ்லியா கதைக்கும் ஈழத்தமிழ். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், அர்ஜுன் நடிக்கும் ‘ஃப்ரெண்ட்ஷிப்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த திருப்தியில் இருந்த லாஸ்லியாவிடம் பேசினேன்.

“ஈழம் பற்றிய படங்களில் நடிக்க மாட்டேன்!”

``இலங்கையில் செய்தி வாசிப்பாளர், பிறகு ‘பிக்பாஸ்’ போட்டியாளர், இப்போது சினிமா... எப்படி இருக்கு இந்தப் பயணம்..?’’

“இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராகத்தான் என் கரியர் தொடங்குச்சு. இந்தியாவுக்கு வந்து ஒரு நல்ல டிவி ஆங்கர் ஆகணும் என்பது மட்டும்தான் அப்போதைய விருப்பமா இருந்துச்சு. ஆனா, இங்கே வந்தபோது ஒரு சீரியல்ல ஹீரோயினோட தங்கச்சி கேரக்டர்ல நடிக்கற வாய்ப்பு வந்துச்சு. அந்த நேரத்துலதான் ‘பிக்பாஸ்’ல கூப்பிட்டாங்க. அதுல நல்ல ரீச் கிடைக்கவும் நிறைய பட வாய்ப்புகள் வந்துச்சு. கதை மட்டும் பிடிச்சிருந்தாப் போதும்னு நினைக்காம அந்தப் படம் என்னை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துமான்னு ஒரு கேள்வியை எனக்குள்ள கேட்டுக்கறேன். அதற்கான சரியான பதில் கிடைக்கும் கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கறேன். அப்படித்தான் ஹர்பஜன்சிங் நடிக்கற ‘ஃப்ரெண்ட்ஷிப்’, கே.எஸ்.ரவிக்குமார் சாரின் ‘கூகுள் குட்டப்பா’ படங்கள் பண்ணியிருக்கேன்.

‘ஃப்ரெண்ட்ஷிப்’ படத்துல, என்னோட கேரக்டர் என் ரியல் கேரக்டர் மாதிரியே இருந்துச்சு. நான் நானாக இருந்தாலே போதும். அப்படி ஒரு ஸ்வீட் ரோல். இதுல ஒரு பாட்டும் பாடியிருக்கேன். அர்ஜுன் சார் ரொம்ப நல்லா கதைச்சார். படத்துல அவருடன் எனக்கு காம்பினேஷன் கிடையாது. ஹர்பஜன்சிங் சார், ரொம்பவே ஜாலியான ஆள். அவருக்குத் தமிழ் தெரியாது. அவருக்கு ஸ்பாட்ல தமிழ் மாஸ்டர் சதீஷ்தான். ஏதாவது வேடிக்கையா தமிழ்ல சொல்லிக் கொடுத்து, கலாய்ச்சிட்டிருப்பார்.

அடுத்து, ‘கூகுள் குட்டப்பா.’ நான் இலங்கையில் இருந்தபோது இந்தப் படத்துல நடிக்கக் கேட்டாங்க. பொதுவா, இப்ப நான் குறைவாப் பேசுறேன். ஸ்பாட்லேயும் அப்படித்தான் இருக்கேன். ஸ்பாட்ல கே.எஸ்.ரவிக்குமார் சார் கூட, ‘என்னம்மா நீ பேசவே மாட்டியா... இவ்ளோ அமைதியான பொண்ணா இருக்கே’ன்னு ஆச்சரியமா கேட்டிருக்கார். பிரேக்ல ரஜினி சார், கமல் சார் பட ஷூட்டிங்கில் நடந்த விஷயங்களை அவர் சொல்லும்போது ஆச்சரியமா இருக்கும். யோகி பாபு சார் செம ஃப்ரெண்ட்லி. அவர் வீட்ல உள்ளவங்ககிட்ட கூட போனைக் கொடுத்துப் பேச வைப்பார்.’’

“ஈழம் பற்றிய படங்களில் நடிக்க மாட்டேன்!”

``இப்ப சென்னைவாசியா, இலங்கைவாசியா?’’

“சென்னையிலதான் இருக்கேன். சொந்தபந்தங்கள் இன்னும் இலங்கையில்தான் இருக்காங்க. பொதுவாகவே நான் வீட்டுப்பறவை. வேலை விஷயமா வெளியே சுத்துவேனே தவிர, மத்தபடி வீட்டுக்குள்தான் இருக்கப் பிடிக்கும். அடுத்து மூணு படங்கள் பேச்சுவார்த்தையில் இருக்கு. எல்லா ஜானர்கள்லேயும் படங்கள் பண்ண விரும்புறேன். தமிழ்ப் படங்கள் பார்த்துதான் வளர்ந்தேன். நல்ல வெப்சீரீஸ் வாய்ப்பு வந்தால் அதையும் பண்ணுவேன்.’’

“ஈழம் பற்றிய படங்களில் நடிக்க மாட்டேன்!”
“ஈழம் பற்றிய படங்களில் நடிக்க மாட்டேன்!”

``நீங்க ஈழத்துல இருந்து வந்ததால இந்தக் கேள்வி. ஈழம் தொடர்பாக இங்கே ‘ஜெகமே தந்திரம்’, ‘மேதகு’, ‘ஃபேமிலிமேன்’னு படைப்புகள் வந்திட்டிருக்கு. உங்க பார்வை என்ன? அப்படிக் கதைகள்ல நடிக்க ஆர்வமா இருக்கீங்களா?’’

‘‘அங்கே பிறந்து வளர்ந்ததால அங்கே என்ன நடந்ததுன்னு தெரியும்ங்கறதால ஈழம் தொடர்பான கதைகள்ல நடிக்க மாட்டேன். வெளியே இருக்கறவங்களுக்குத்தான் அதுக்கான தெளிவு இல்லாமலிருக்கும். ஆனா, இலங்கையில் இருக்கற எல்லாருக்குமே அங்கே என்ன நிகழ்ந்ததுன்னு தெரியும் என்பதாலே அப்படியான படங்கள் என்னால பண்ண முடியாதுன்னு நினைக்கறேன். சிலர் இதை நாங்க ஒரு படமாகத்தான் பண்ணியிருக்கோம்னு சொல்லிடுறாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரை அங்கே நிகழ்ந்தது, பார்த்த விஷயங்கள் எல்லாமே ரொம்பக் கொடூரமானவை. அப்படியான விஷயங்கள் இல்லாத படங்களை என்னால பண்ணவே முடியாது.’’

லாஸ்லியா குரலில் அவ்வளவு உறுதி!