Published:Updated:

“வாழ்க்கையை சந்தோஷமா வாழ எல்லாருக்குமே உரிமை இருக்கு!” - பூஜா-ஜான்

பூஜா-ஜான்
பிரீமியம் ஸ்டோரி
பூஜா-ஜான்

காதலர் தின ஸ்பெஷல்

“வாழ்க்கையை சந்தோஷமா வாழ எல்லாருக்குமே உரிமை இருக்கு!” - பூஜா-ஜான்

காதலர் தின ஸ்பெஷல்

Published:Updated:
பூஜா-ஜான்
பிரீமியம் ஸ்டோரி
பூஜா-ஜான்

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வேம்புலி யாக அசத்திய ஜானும், `எஸ்.எஸ்.மியூசிக்' விஜே பூஜாவும் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் இவர்கள் பதிவிடும் `ஃபிட்னெஸ் கப்புள் கோல்ஸ்' சமூக வலைதளங்களில் பிரபலம். தங்கள் காதல், ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் என எல்லாம் பகிர்கிறார்கள் இருவரும்.

“எங்க ரெண்டு பேருக்குமே முதல் திருமணம் விவாகரத்தாயிடுச்சு. ‘சார்பட்டா’ படத்துக்காக கிக் பாக்ஸிங் கத்துக்கப் போனபோது பூஜாவும் பாக்ஸிங் கத்துக்க வந்திருந்தாங்க. மத்தவங் களோட விமர்சனங்களைக் கண்டுக்காம, தன் வேலையில கவனமா இருக்குற அந்த ஆட்டிட் யூடு எனக்குப் பிடிச்சது. ஃபிரெண்ட்ஸ் ஆனோம். பூஜாவும் விவாகரத்தை சந்திச்சிருக் காங்கனு தெரிஞ்சுது.

“வாழ்க்கையை சந்தோஷமா வாழ எல்லாருக்குமே உரிமை இருக்கு!” - பூஜா-ஜான்
“வாழ்க்கையை சந்தோஷமா வாழ எல்லாருக்குமே உரிமை இருக்கு!” - பூஜா-ஜான்
“வாழ்க்கையை சந்தோஷமா வாழ எல்லாருக்குமே உரிமை இருக்கு!” - பூஜா-ஜான்

ஃபிட்னெஸ், சாப்பாடு, டிராவல்னு ரெண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமை இருந்துச்சு. சினிமாவுல எனக்குப் பெரிய அங்கீகாரம் கிடைக்காத சூழல்லயும் பூஜா எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. ஒரு பொண்ணால ஓர் ஆணுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணமுடியுமானு ஆச்சர்யமா இருந்துச்சு. பூஜாகிட்ட காதலைச் சொன்ன போது முதல்ல ரொம்ப தயங்கினாங்க. டைம் எடுத்து யோசிச்சுதான் ஓகே சொன்னாங்க” என்று ஜான் நிறுத்த, பூரிப்புடன் தொடர்கிறார் பூஜா.

‘`ஜான்கிட்ட பழக ஆரம்பிச்ச பிறகு, வாழ்க்கை புதுசா தெரிஞ்சுது. ஜான் காதலைச் சொன்னதும் இதெல்லாம் சரியா வருமான்னு பலமுறை யோசிச்சேன். இப்படியொரு நண்பன் வாழ்க்கை முழுக்க கூட வந்தா நல்லா இருக்கும்னு மனசு சொன்னதும் ஓகே சொல் லிட்டேன்.

எங்க கல்யாண போட்டோக்களை சோஷியல் மீடியாவுல பகிர்ந்ததும் ‘சினிமாக் காரங்களுக்கு இதெல்லாம் சாதாரணம். இன்னும் கொஞ்ச நாள்ல மறுபடியும் பிரிஞ்சுருவாங்க’ன்னெல்லாம் விமர்சனம் பண்ணாங்க.

எல்லாருமே சேர்ந்து வாழணும்னுதான் திருமணம் பண்றாங்க. ஆனா, பிடிக்காத வாழ்க்கையில கஷ்டப்படுறதைவிட பிரியுறது நல்லதுன்னு தோணும்போது பிரியறாங்க.

“வாழ்க்கையை சந்தோஷமா வாழ எல்லாருக்குமே உரிமை இருக்கு!” - பூஜா-ஜான்
“வாழ்க்கையை சந்தோஷமா வாழ எல்லாருக்குமே உரிமை இருக்கு!” - பூஜா-ஜான்
“வாழ்க்கையை சந்தோஷமா வாழ எல்லாருக்குமே உரிமை இருக்கு!” - பூஜா-ஜான்
“வாழ்க்கையை சந்தோஷமா வாழ எல்லாருக்குமே உரிமை இருக்கு!” - பூஜா-ஜான்

மறுமணம்... அதுலயும் பெண்களோட மறுமணம் இன்னும் இங்கே இயல்பானதா பார்க்கப்படுறதில்ல. அது மாறணும். வாழ்க்கையை சந்தோஷமா வாழ இங்க எல்லாருக்குமே உரிமை இருக்கு...” படபடக்கும் பூஜாவை கூல் செய்ய அவர்களின் ஃபிட்னெஸ் கோல்ஸ் பற்றி கேட்டோம்.

“எங்க ரென்டு பேருக்குமே ஃபிட்னெஸ் ரொம்ப பிடிச்ச விஷயம். லாக்டெளன் நேரத்துல ரெண்டு பேரும் சேர்ந்து வொர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சோம். கணவன் மனைவி ரெண்டுபேரும் சேர்ந்து வொர்க் அவுட் பண்ணும்போது, டயட், ஃபிட்னெஸ்னு எல்லா விஷயங்களையும் ஃபாலோ பண்றது ரொம்ப ஈஸியா இருக்கு. ரெண்டு பேரும் சேர்ந்து செலவிடற நேரமும் காதலும் அதிகரிச்சிருக்கு'' என்பவரின் வார்த்தைகளைப் போலவே வாழ்க்கையிலும் காதல் பெருகட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism