Published:Updated:

மோகன்லாலுக்கு பதில் சிரஞ்சீவி... பிரித்விராஜிற்கு பதில் மோகன்ராஜா... லூசிஃபர் ரீமேக் அப்டேட்ஸ்!

மோகன்ராஜா - சிரஞ்சீவி
மோகன்ராஜா - சிரஞ்சீவி

19 ஆண்டுகள் கழித்து, 'லூசிஃபர்' ரீமேக் மூலம் டோலிவுட் பக்கம் சென்றிருக்கிறார், மோகன்ராஜா. முதல் தெலுங்கு படமும் மலையாள ரீமேக். இந்தப் படமும் மலையாள ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மலையாளத்தில் பெரிய ஹிட்டான படம் 'லூசிஃபர்'. மோகன்லாலின் தீவிர ரசிகனான பிரித்விராஜ், மோகன்லாலை எவ்வளவு மாஸாக காட்ட முடியுமோ அப்படி காட்டினார். ஸ்டீஃபன் நெடும்பாலி எனும் கேரக்டரில் வரும் மோகன்லாலை ரசிக்காதவர் எவரும் இருக்கமாட்டார்கள். மோகன்லால் தவிர, மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் எனப் பல முன்னணி நடிகர்களும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஸ்கோர் செய்ய தனித்தனி இடங்கள் இருக்கும். இந்தப் படம் வெளியான சில நாள்களில் இதனை தெலுங்கில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கினார், சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண்.

ராம் சரண் தயாரிக்க சிரஞ்சீவி இந்தப் படத்தில் நடிக்க, 'சாஹோ' இயக்கிய சுஜீத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் என முதலில் பேசப்பட்டது. ஆனால், அவர் பேச்சுவார்த்தையின்போதே படத்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில், ரீமேக் படங்கள் எடுப்பதில் கில்லியான இயக்குநர் V.V.விநாயக் இந்தப் படத்தை இயக்குவார் என்ற தகவல் வெளியானது. இவர் ஏற்கெனவே, 'ரமணா', 'கத்தி' ஆகிய படங்களின் தெலுங்கு ரீமேக்கை சிரஞ்சீவியை வைத்து இயக்கியவர்.

'லூசிஃபர்' படத்தில் மோகன்லால்
'லூசிஃபர்' படத்தில் மோகன்லால்

இந்த ஹிட் காம்போ மறுபடியும் இணைவதால் மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், திடீரென்று அவர் பெல்லம்கொண்டா ஶ்ரீநிவாஸ் இந்தியில் அறிமுகமாகும் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் அங்கு சென்றுவிட்டார். இது தெலுங்கில் ராஜமெளலி இயக்கிய 'சத்ரபதி' படத்தின் ரீமேக். அப்போது, 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலாக, வந்தவர்தான் இயக்குநர் மோகன்ராஜா. தமிழில் பல ரீமேக் படங்கள் எடுத்து சூப்பர்ஹிட் கொடுத்தவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவருடைய முதல் படமே மலையாளத்தில் வெளியான 'தென்காசிப்பட்டினம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஹனுமான் ஜங்ஷன்'. பின், அவர் டோலிவுட் பக்கம் செல்லவில்லை. 'ஜெயம்', 'எம்.குமரன்', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'தில்லாலங்கடி' என அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ரீமேக் படங்கள். ஆனாலும், கதையில் சில மாற்றங்கள் செய்து சுவாரஸ்யங்கள் சேர்த்து ஹிட் கொடுத்திருந்தார். இவரின் சொந்தக் கதையான 'தனி ஒருவன்' படம் தெலுங்கில் ராம் சரண் நடிக்க 'துருவா' என்ற பெயரில் ரீமேக்காகி வெற்றி பெற்றது.

அப்பா மற்றும் மகனுடன் மோகன்ராஜா
அப்பா மற்றும் மகனுடன் மோகன்ராஜா

19 ஆண்டுகள் கழித்து, 'லூசிஃபர்' ரீமேக் மூலம் டோலிவுட் பக்கம் சென்றிருக்கிறார், மோகன்ராஜா. முதல் தெலுங்கு படமும் மலையாள ரீமேக். இந்தப் படமும் மலையாள ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன்ராஜாவின் அப்பா எடிட்டர் மோகன் சிரஞ்சீவிக்கு மிகவும் நெருக்கமானவர். சிரஞ்சீவி நடித்த 'ஹிட்லர்' என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் மோகன்ராஜா உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மோகன்ராஜா சிரஞ்சீவியுடன் இணைந்திருப்பதும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது, 'ஆச்சார்யா' படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார், சிரஞ்சீவி. பொங்கல் முடிந்ததும் மோகன்ராஜா படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. ஏப்ரலில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

'வேலைக்காரன்' படத்திற்குப் பிறகு, மோகன்ராஜா படம் இயக்கவில்லை. 'தனி ஒருவன் 2' படத்திற்கான கதையை முடித்து அதனை இயக்க ஆவலோடு காத்திருந்த சமயத்தில் ஜெயம் ரவிக்கு 'பொன்னியின் செல்வன்' வாய்ப்பு வந்துவிட்டது. அதனால், இந்தப் படம் தள்ளிப்போய்விட்டது. அதற்குள், 'அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கச் சொல்லி தியாகராஜனும் பிரசாந்தும் கேட்க, அதற்கு ஓகே சொல்லி வேலைகளை ஆரம்பித்தார். அதற்காக 'அந்தாதுன்' இயக்குநர் ஶ்ரீராம் ராகவனை சந்தித்து பேசிவிட்டு வந்தார். ஆனால், திடீரென்று அந்தப் படத்திற்கான இயக்குநர் 'பொன்மகள் வந்தாள்' படத்தை இயக்கிய ஃப்ரெட்ரிக் என்ற அறிவிப்பு வெளியானது.

மோகன்ராஜா - சிரஞ்சீவி
மோகன்ராஜா - சிரஞ்சீவி

சில கருத்து வேறுபாடு காரணமாக, மோகன்ராஜா படத்திலிருந்து விலகிவிட்டார் என்ற செய்தியும் வெளியான நிலையில், 'லூசிஃபர்' படத்தை இயக்க வாய்ப்பு வந்ததால்தான் வெளியேறினார் என்ற தகவலும் இப்போது வெளியாகியிருக்கிறது. எந்தப் படத்துடைய ரீமேக்கை எடுத்தாலும் அதன் ஒரிஜினல் வெர்ஷனுடைய இயக்குநரை சந்தித்து அந்தக் கதைப் பற்றி கலந்தாலோசிப்பது மோகன்ராஜாவின் வழக்கம். அப்படி விரைவில் 'லூசிஃபர்' படத்தின் இயக்குநர் நடிகர் பிரித்விராஜும், மோகன்ராஜாவும் இருக்கும் புகைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

மோகன் ராஜா, இந்தப் படத்தை முடிப்பதற்கும் ஜெயம் ரவி 'பொன்னியின் செல்வன்' படத்தை முடிப்பதற்கும் சரியாக இருக்குமாம். மே- ஜூன் வாக்கில் 'தனி ஒருவன் - 2' ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு