Published:Updated:

ஷங்கருக்கு வக்கீல் நோட்டீஸ்... இந்தியன் 2, இம்சை அரசன் அப்டேட்ஸ்

எம்.குணா

கமல், வடிவேலு படங்களுக்கு 50 கோடி செலவு செய்தது லைகா.

ஷங்கர்
ஷங்கர்

'இந்தியன் -2' படத்துக்கான வேலையை எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ தெரியவில்லை சோதனை மேல் சோதனை. முதலில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனையும், ஆர்ட் டைரக்டர் முத்துராஜையும் அழைத்துக் கொண்டு உக்ரைன், ஹாலந்து நாடுகளுக்குச் சென்று ஷூட்டிங் நடத்த இருக்கும் லொகேஷன்களை தேர்வு செய்துவிட்டு திரும்பினார், ஷங்கர்.

indian 2
indian 2

ஏற்கெனவே திட்டமிட்டதைவிட '2.0' திரைப்படத்தின் பட்ஜெட் எகிறிப்போனது. அதனால் 'இந்தியன்-2' படத்துக்கான பட்ஜெட் எவ்வளவு என்று எழுதிக்கொடுங்கள் இப்போதே ஒப்பந்தம் போட்டுவிடலாம் என்று ஷங்கரிடம் கேட்டது லைகா.

இந்த சூழ்நிலையில் 'இந்தியன்-2' படத்தையும் எடுக்காமல், 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' முடிக்காமல் ஷங்கர் தெலுங்கு சினிமாவின் மேல் கவனம் செலுத்தியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது, லைகா. பென் மீடியா தயாரிக்கும் படத்தை இயக்குவதாக ஒப்புக்கொண்ட ஷங்கர் அந்தப்படத்தில் நடிப்பதற்காக 'பாகுபலி' பிரபாஸிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்

இம்சை அரசன் 24
இம்சை அரசன் 24

கமல் படத்தையும், வடிவேலு படத்தையும் அந்தரத்தில், விட்டுவிட்டு பிரபாஸிடம் பேசும் ஷங்கரின் மேல் லைகா கடுங்கோபத்தில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் சினத்தின் உச்சிக்கே போன லைகா, 'இந்தியன் - 2' ' இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்துக்காக செலவு செய்த 50 கோடி பணத்தை உடனடியாக திரும்பி கொடுக்கும்படி ஷங்கருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 'லைகா'விடம் பணம் பெற்றதற்கான எழுத்துபூர்வமான அக்ரிமென்ட் ஆதாரம் எதுவும் இல்லாததால் ஷங்கர் தரப்பு ஷாக் ஆகவில்லை என்று சொல்கிறார்கள்.

எம்.குணா