Published:Updated:

``சுதா கொங்கரா `மண்ணுருண்ட' பாடலுக்கான சூழலைச் சொல்லும்போது மிரண்டுட்டேன்!" - ஏகாதசி

பாடலாசிரியர் ஏகாதசி
News
பாடலாசிரியர் ஏகாதசி

`ஒத்த சொல்லால', `கம்பத்துப் பொண்ணு', `கத்தரி பூவழகி' எனக் கிராமத்து அழகியலைக் குதூகலத்தோடு இயல்பு மாறாமல் பாடல்களில் வார்த்தெடுப்பவர் பாடலாசிரியர் ஏகாதசி.

'ஒத்த சொல்லால', 'கம்பத்து பொண்ணு', 'கத்தரி பூவழகி' என கிராமத்து அழகியலை குதூகலத்தோடு இயல்பு மாறாமல் பாடல்களில் வார்த்தெடுப்பவர் பாடலாசிரியர் ஏகாதசி.

பாடலாசிரியர் ஏகாதசி
பாடலாசிரியர் ஏகாதசி

சமீபத்தில், `சூரரைப் போற்று' படத்தில் வெளியான `மண்ணுருண்ட மேல' பாடலில் சாதி ஆதிக்கத்துக்கான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். பாடல் போலவே, அனல் தெறிக்கும் ஒரு மதிய வேளையில் அவரைச் சந்தித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சினிமால இயக்குநராக ஆசைப்பட்டு பாடலாசிரியரா மாறின இந்தப் பயணம் இப்போ எப்படி இருக்கு?

பாடலாசிரியர் ஏகாதசி
பாடலாசிரியர் ஏகாதசி

``சாதாரண ஒரு கிராமத்து பையனா வானொலி, காணொளி... ஏன் காணாம போனவர்கள் பட்டியல்லகூட என்னுடைய பெயர் வராதான்னு ஏங்கிகிட்டிருந்த சமயங்கள் எல்லாம் உண்டு. அதுக்குப் பிறகு, சினிமாவுக்குள்ள இயக்குநரா வரணும்னு ஆசைப்பட்டு சென்னைக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருஷங்கள் ஆகிடுச்சு. `கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை', `அருவா'னு ரெண்டு படங்கள் இயக்கிவிட்டேன். அதுக்கு முன்னாடியே த.மு.எ.ச மேடைகள், தனி ஆல்பம் எல்லாம்கூடப் பண்ணியிருக்கேன். ஆனா, இயக்குநராகற கனவோட இருந்ததால, அதை நோக்கியே என் பயணம் இருக்கணும்னு ஆரம்ப காலத்துல பாடலாசிரியர்ங்கிற முகத்தை மறைச்சு கிட்டத்தட்ட ஒரு தலைமறைவான வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகிட்டிருந்தேன்.

ஆனா, காலப்போக்குல சில தேவைகள் இருந்ததால, பாடலாசிரியராக வேண்டிய சூழல் வந்துடுச்சு. ரெண்டு படங்களுக்குப் பாடல் பண்ணியிருந்தாலும், `வெயில்' படத்துல பண்ண ஒரு சின்ன பாடல் எனக்கான அறிமுகத்தைக் கொடுத்தது. அந்தப் படத்தோட இயக்குநர் வசந்தபாலன் மூலமாதான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிமுகமானார். அங்க தொடங்கின எங்க பயணம், இப்போ `சூரரை போற்று' வரை தொடருது. ஆனா, ஏகாதசினு ஒரு பாடலாசிரியர் இருக்கான்னு பல பேர்கிட்ட கொண்டுபோய் சேர்த்தது `ஆடுகளம்' படத்துடைய `ஒத்த சொல்லால' பாடல்தான்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`கோணக்கொண்டக்காரி, `கம்பத்து பொண்ணு', `கத்தரி பூவழகி'னு நீங்க எழுதின காதல் பாடல்கள்ல பெண்களை வர்ணிக்கற இந்த வார்த்தைகளை எங்கிருந்து பிடிக்கறீங்க?

Sandakozhi2
Sandakozhi2

``நான் பெண்களைப் பெரிதும் மதிக்கக்கூடிய ஒருத்தன். சினிமா தவிர்த்து நான் எழுதியிருக்க தனிப்பாடல்கள்ல பெண்களை அம்மா, தங்கைனு உறவுகளை உணர்வுபூர்வமா எழுதியிருப்பேன். அதனால, சினிமாவோட காதல் பாடல்கள்ல பெண்களைக் கவித்துவமா எழுதுறது எனக்கு சவாலான ஒரு விஷயமாதான் இருந்தது. எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் கொச்சைப்படுத்துற விதமா எழுதக் கூடாதுன்னு கவனமா இருப்பேன். அதுகூட, நான் வளர்ந்த சூழல்ல நான் பார்த்த பெண்களோட அழகையும் கொண்டு வந்து சேர்க்கிறதால வர்றதுதான் இந்த வார்த்தைகள்.

கத்தரிக்காய் எல்லாருக்கும் தெரியும். ஆனா, அதோட பூ எவ்வளவு அழகா இருக்கும்ங்கிறது கிராமத்துல பிறந்து வளர்ந்தவனுக்குதான் தெரியும். அதோட ஒப்பிட்டு வந்ததுதான் `கத்தரி பூவழகி.'

எங்க அம்மா போடற கொண்டை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களை `கொண்டக்காரி'ன்னு கூப்பிடுறவங்களும் எங்க ஊர்ல இருக்காங்க. `மதயானைக் கூட்டம்'ல ஓவியா கதைப்படி ஒரு கேரளத்து பொண்ணு. அதனால கேரளத்துக் கொண்டையை இணைச்சு `கோணக் கொண்டக்காரி'னு பாடலை எழுதினேன்

தொடர்ந்து கிராமத்துப் பாடல்களே எழுதினாலும், அந்த வட்டத்துலருந்து வெளிய வந்து, சிட்டி லைன்லயும் பாடல்கள் எழுத ஆசை இருக்கு. அதுக்கான வாய்ப்புக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்.''

வசந்தபாலன், வெற்றிமாறன், விக்ரம் சுகுமாரன்னு நீங்க பணியாற்றிய இயக்குநர்கள் பத்தி சொல்லுங்க?

பாடலாசிரியர் ஏகாதசி
பாடலாசிரியர் ஏகாதசி

``முதல்ல பாடல் எழுதும்போது, பாடல் சூழ்நிலையை இயக்குநர்கள் விளக்கிடுவாங்க. அதுல எந்தமாதிரி எழுதணும்கிறதை பெரும்பாலும் என்னுடைய விருப்பத்துல விட்டுடுவாங்க. அந்த வகையில இதுவரை நான் பணிபுரிந்த இயக்குநர்களுக்கு நன்றி.

இயக்குநர் வசந்தபாலன் மூலமாதான் நல்ல அறிமுகம் திரையுலகில எனக்குக் கிடைச்சது. விக்ரம் சுகுமாரன் சினிமாவுக்கு வந்த ஆரம்பகாலத்துல இருந்தே என்னுடைய நண்பர். விக்ரம் சுகுமாரன், வெற்றிமாறன் எல்லாம் பாடல்களை பிரத்யேகமா மெனக்கெட்டு காட்சிப்படுத்தக்கூடியவர்கள்.''

`மதயானைக் கூட்டம்' வெளியானபோது படத்துக்கும் பாடல்களுக்கும் சாதிய ரீதியா வந்த விமர்சனங்களை எப்படிப் பார்த்தீங்க?

இயக்குநர் விக்ரம் சுகுமாறன்
இயக்குநர் விக்ரம் சுகுமாறன்

``என்னுடைய சொந்த ஊர் மதுரை. விக்ரம் சுகுமாறன் 'மதயானைக் கூட்டம்' கதை சொல்லும்போது, அந்தக் கதையைத் தனிப்பட்ட முறையில என்னோட தொடர்புபடுத்திக்க முடிஞ்சது. அதனாலதான் அந்தப் படத்துல வர்ற பாடல்கள்ல அந்தப் பகுதி மக்களோட வாழ்க்கை வரைவியலை எழுத்துல கொண்டுவர்றது எளிதா இருந்துச்சு. `கோணக்கொண்டக்காரி' பாடலைவிட அந்தப் படத்துல வர்ற ஒப்பாரி பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. `நீ எவ்வளவு பாடல்கள் எழுதியிருந்தாலும் உன் சாவுக்குன்னு ஒரு பாடல் எழுதிட்ட. நாளைக்கே நீ செத்தாலும் உனக்கும் இந்தப் பாடல்தான். நிறைவா இரு'னு என் நண்பன் சொல்வான்.

நான் சாதியத்துக்கு எதிரான ஆள். ஆனா, `சாதியப் பார்வையில பாடல்கள் இருக்கு'னு என் மேலயும் விமர்சனங்கள் வந்தன. அப்படிக் கிடையவே கிடையாது. மகிழ்ச்சி, துக்கம், சண்டைனு அந்தச் சமூகத்தோட குறுக்குவெட்டுத் தோற்றத்தைத்தான் படமாவும் பாடல்கள் வழியாவும் பதிவு பண்ணியிருப்போம். வேறு சாதியினரை எந்த இடத்துலயும் கொச்சைப்படுத்தியோ, உயர்த்தியோ இருக்காது. என்னைப் பொறுத்தவரை மக்கள் கொண்டாட தவறிய படம் `மதயானைக் கூட்டம்.' "

`சூரரைப்போற்று' படத்துடைய 'மண்ணுருண்ட மேல' பாடல் அனுபவம்?

``ஜி.வி.பிரகாஷ் மூலமாதான் 'சூரரைப்போற்று' படத்துல இந்தப் பாடல் எழுதுற வாய்ப்பு வந்தது. இயக்குநர் சுதா கொங்கரா அதுக்கு முன்னாடியே என்னுடைய `ஒத்த சொல்லால' பாடல்கள் எல்லாம் கேட்டு அதைப் பத்தி நிறைய விஷயங்கள் பகிர்ந்துக்கிட்டாங்க. `மண்ணுருண்டை' பாடலுக்கான சூழலை இயக்குநர் சொல்லும்போது, உறைஞ்சு போயிட்டேன். அந்த அளவுக்கு பாடலும் காட்சியும் சாதிய பாகுபாட்டை எதிர்த்து ஒரு வீரியத்தோட இருக்கும். பொதுவா, ஒரு பாடலுக்கான களம் இயக்குநர் சொல்லும்போது, அந்தச் சூழலுக்கான உச்சம் வரைக்கும் எழுதி வெச்சிடுவேன். அந்த வகையில, முற்போக்கான பாட்டு எழுதறதுக்கான வாய்ப்பு இந்த மாதிரி ஒரு மாஸ் படத்துல கிடைச்சது சந்தோஷம்.

என்னுடைய நண்பர் ஞானசம்பந்தன் ஐயா அடிக்கடி சொல்லுவார், `சாவுக்கான ஆட்டம்தான் இருக்கிறதுலயே வெறித்தனமா இருக்கும். சென்னை மாதிரி இடநெருக்கடியான ஊர்ல அந்த ஆட்டம் அடிபட்டுபோயிடுச்சு. ஆனா, மதுரை மாதிரியான விலாசமான ஊர்ல அந்த ஆட்டத்தை நின்னு விளையாடலாம்'னு சொல்லுவார். அதுதான் `மண்ணுருண்டை' பாட்டுலையும் நடந்துருக்கு."

`ஆத்தா உன் சேல' பட பாடலை சமயத்துல பாடகர் செந்தில் கணேஷ் க்ரெடிட்ஸ் தராம பாடினார்னு சர்ச்சை வந்தது. பிறகு சமாதானமும் ஆகியாச்சு. இப்போ அவர் `மண்ணுருண்ட' பாடலை பாடியிருக்கார். அதைப் பத்தி?

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி
செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி

``சினிமா பாடல்கள் தவிர்த்து தனியா எழுதுற மண் சார்ந்த பாடல்களை நிறைய கலைஞர்கள் மேடைல பாடுறாங்க. அந்த வகையில, என்னுடைய 'ஆத்தா உன் சேலை' பாடலை இன்னும் பல பேர்கிட்ட கொண்டு போய் சேர்த்த செந்தில்கணேஷ்-ராஜலட்சுமிக்கு நன்றி. பாடலுக்கான க்ரெடிட்ஸ் தரலைங்கறது தொடர்பா, 'எடிட்டிங்கல போயிடுச்சு. எல்லா இடங்களையும் உங்க பேரை சொல்லித்தாண்ணே பாடுவேன்'னு அப்பவே அவர் விளக்கம் கொடுத்துட்டார். அதனால, எங்களுக்குள்ள எந்த பிரச்னையும் இல்லை. `மண்ணுருண்டை' பாடலுக்குப் புதுசா ஒரு குரல் தேடிட்டு இருந்தபோது, செந்தில் பாடினா நல்லா இருக்கும்னு நான்தான் ஜி.வி.பிரகாஷ்கிட்ட சொன்னேன். அப்படித்தான் இந்தப் பாடலுக்குள்ள அவர் வந்தார்.''

அடுத்த படங்கள்?

தேரும் போரும்
தேரும் போரும்

``இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்குற, `ராவணக் கோட்டம்', `தேரும் போரும்' ரெண்டுலயும் பாடல்கள் எழுதியிருக்கேன். வெற்றிமாறனுடைய `வாடிவாசல்'லயும் என்னோட பாடலை எதிர்ப்பார்க்கலாம்."