Published:Updated:

``தற்போது பேசுவது சரியாக இருக்காது!" - 'மாறன்' படத்திலிருந்து விலகியது குறித்து விவேக்

'மாறன்'

மாறன் படத்தின் திரைக்கதை, டயலாக் எழுதியிருந்த விவேக் அதிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

``தற்போது பேசுவது சரியாக இருக்காது!" - 'மாறன்' படத்திலிருந்து விலகியது குறித்து விவேக்

மாறன் படத்தின் திரைக்கதை, டயலாக் எழுதியிருந்த விவேக் அதிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Published:Updated:
'மாறன்'

தனுஷின் 'மாறன்' படத்தின் திரைக்கதை, டயலாக் ரைட்டராக இருந்த பாடலாசிரியர் விவேக், அதிலிருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 'மாறன்'. இப்படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், ராம்கி உள்பட பலர் நடித்துள்ளனர். ஒடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வரும் 11ம் தேதி இப்படம் வெளிவருவதாக அறிவித்திருக்கிறார்கள். தனுஷிற்கு 'ஜெகமே தந்திரம்', 'அட்ராங்கி ரே' படங்களை தொடர்ந்து 'மாறனு'ம் ஒடிடியில் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் திரைக்கதை, டயலாக் ரைட்டராக இருந்த விவேக் அதிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். '' 'மாறன்' படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன். என் முடிவை மதித்த பட குழுவிற்கு நன்றி. இன்று இந்தியாவின் மிகப்பெரிய படங்களுக்கு ரைட்டராக இருக்கிறேன். இதற்கு 'மாறன்' ஒரு தொடக்கப் புள்ளி என்பதை நினைவில் வைத்துக்கொள்வேன்' என்று சொல்லியிருந்தார்.

பாடலாசிரியர் விவேக்
பாடலாசிரியர் விவேக்
தி. ஜீவாகரன்

இதுபற்றி விவேக்கிடம் பேசினேன். ''அது ஒரு பெரிய கதை. அதைப் பத்தி இந்த நேரத்தில் பேசுறது சரியா இருக்காது. ஏன்னா ஒரு பெரிய டீம், பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். என் டீம்னு சொல்லி, ஒரு பெரிய டீமோடு நான் பயணித்திருக்கிறேன். இன்னும் சில தினங்கள்ல படம் வெளியாகப் போகுது. இப்போ அதைப் பத்தி பேசுறது எனக்குமே சரியா தோணல. ஆனா, ப்டத்தின் 'ட்ரைலர் நல்லா இருக்கு. டயலாக் நல்லா இருக்குது' எல்லாரும் என்னைப் பாராட்டினாங்க. அந்த கிரெட்டிஸை நான் எடுத்துக்க கூடாது. ஏன்னா, அது என் டயலாக் இல்லை. இப்ப, அந்த டீம்ல நான் இல்லைனு வெளியே தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால, சொல்லிட்டேன். இப்போ சில பெரிய படங்களுக்கு எழுதிட்டு இருக்கேன். சீக்கிரமே அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவரும்.'' என்கிறார் விவேக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism