Published:Updated:

"ரசனையும் உணர்வும்... இளையராஜா சொன்ன வேத வாக்கியம்!" - யுகபாரதி பகிர்வுகள் #VikatanDiwaliMalar2019

மெட்டுக்கு அழகாக, எளிமையாக, எல்லோருக்கும் புரியும்விதமாக இருந்தால் போதும் என்பேன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''பிரத்யேகமான உணர்வு காதல். திரும்பத் திரும்பச் சொல்லும்போது சலிப்பு உணர்வு ஏற்படும். காதல் உணர்வுகளைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க என்ன செய்வீர்கள்?"

'' 'கண்ணக் காட்டு போதும்' என்று ஒருவரி எழுதிவிட்டேன். இனி எத்தனை ஆயிரம் பாடல்கள் எழுதினாலும் அந்த வரியை எழுதவே கூடாது. இதுதான் சவாலே. மற்றபடி உணர்வுகள் புதியதாகக் கிடைத்துக்கொண்டே இருக்கும். ஒரே சொற்களைப் பயன்படுத்தும்போதுகூட உணர்வுகள் மாறும். 'பார்த்திபன் கனவு' படத்தில் கரு.பழனியப்பனுக்கு முதலில் எழுதும்போது 'காதல் பிசாசே', 'வெட்கக் கவிதை' இப்படியெல்லாம் ஏன் கடினமா கஷ்டப்படுத்தறீங்க? 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்' - இது எவ்வளவு எளிமையா இருக்கு?' என்று கேட்டார். நல்ல விஷயமாத் தோணிச்சு. அந்தப் படத்துல 'கனா கண்டேனடி' பாடலில் 'எதையோ என் வாய் சொல்லத் தொடங்க, அதையே உன் வாய் சொல்லி அடங்க' என்று எழுதியிருப்பேன். அது ஒண்ணுமில்லை... 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்' வரிகளோட விரிவுதான்."

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

மாரிசெல்வராஜ், 'பரியேறும் பெருமாளி'ல் எழுதிய 'நான் யார்' பாடல் ரொம்பப் பிடிக்கும்

"கவிஞனாக இருப்பதால் கவித்துவமான வார்த்தைகளை உங்களால் உருவாக்க முடியும். 'சாதாரண வார்த்தைகளைப் பயன்படுத்துவிட்டோமே' என்று நினைத்தது உண்டா?"

"ஒருமுறை ராஜா சாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, 'பல்லவி சாதாரணமாகத்தானே இருக்கிறது?' என்று சொன்னேன். அவர், 'இது சாதாரணம் என்று நீ உன் அறிவிலிருந்து தீர்மானிக்கிறே... உன் அறிவிலிருந்து இது நல்லது, இது கெட்டதுனு தீர்மானிக்காதே. உன் உணர்வுலருந்து தீர்மானி. அறிவை வைத்துக்கொண்டு கலையைத் தீர்மானிக்கக் கூடாது. ரசனைதான் முக்கியம். ரசனையாக இந்தப் பாட்டு நல்லா இருக்குதா, ஓர் உணர்வைக் கிளப்புகிறதா என்பது முக்கியம். அதைவிட்டுவிட்டு இது பழசு, நல்லா இல்லை என்று சொல்லக் கூடாது' என்றார். அது எனக்கு வேத வாக்கியமாக மாறியது. அதன் பிறகு எந்தச் சொற்களின் மீதும் ரசனைக் குறைவு ஏற்படவில்லை. மெட்டுக்கு அழகாக, எளிமையாக, எல்லோருக்கும் புரியும்விதமாக இருந்தால் போதும் என்பேன்."

"உங்களுடைய இடதுசாரி சித்தாந்த மனம், பாடல் எழுதுவதற்கு இடையூறாக இருந்திருக்கிறதா?"

"சமூகத்துக்கு எதிராகவோ, பெண்களைக் கொச்சைப்படுத்துவது மாதிரியோ இருக்கக் கூடாது என்பதில் கவனமா இருப்பேன். 'சண்டாளி' என்ற வார்த்தையே எனக்குப் பிடிக்காது. பல்லவியில் இருந்தது. ஜி.வி.பிரகாஷிடம் 'வேண்டாம்' என்று சொன்னேன். அதற்கு இணையாகப் பல வார்த்தைகள் எழுதியும் குடுத்தேன். கேட்டுக் கேட்டு, 'அதுவே செட் ஆகிருச்சு' என்று அவர் மாற்றவில்லை. வெளியான பிறகு, சிலர் என்னைத் திட்டி எழுதியிருந்தார்கள். அவர்களிடம் இதையெல்லாம் விளக்கவும் முடியாது. அந்த மாதிரி நேரத்தில் இடதுசாரி மனோபாவம் தவித்து வெம்பிப்போகும்."

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

யுகபாரதி
யுகபாரதி

"உங்களுடைய சக பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்களில் உங்களுக்கு பிடித்தமான பாடல்?"

"மாரிசெல்வராஜ், 'பரியேறும் பெருமாளி'ல் எழுதிய 'நான் யார்' பாடல் ரொம்பப் பிடிக்கும். உமாதேவியின் 'மாயநதி', அருண்ராஜா காமராஜ் எழுதிய 'ஒத்தையடி பாதையில', அதே படத்தில் ஜிகேபி எழுதிய 'வாயாடி பெத்தபுள்ள'... இப்படி நிறைய. 'விஸ்வாச'த்தில் தாமரை எழுதிய 'கண்ணான கண்ணே' பாடல் அபாரமாக இருந்தது."

- இவை சாம்பிள்தான். இன்னும் நிறையவே பகிர்ந்திருக்கிறார் கவிஞர் யுகபாரதி.

முதல் பாடல் எழுதிய பிறகு, ஒன்பது மாதங்களுக்குப் பாடல் வாய்ப்பே இல்லை. இன்றைக்கு இவர் எழுதிய ஒரு பாடலையாவது கேட்காமல், நம் ஒருநாளைக் கடந்துவிட முடியாது என்கிற அளவுக்கு பிஸியாக எழுதிக்கொண்டிருப்பவர், கவிஞர் யுகபாரதி. அவரது சற்றே நீண்ட நேர்காணல், விகடன் தீபாவளி மலரில் வெளியாகியிருக்கிறது.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

"ரசனையும் உணர்வும்... இளையராஜா சொன்ன வேத வாக்கியம்!" - யுகபாரதி பகிர்வுகள் #VikatanDiwaliMalar2019
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு