Published:Updated:

மாறா - சினிமா விமர்சனம்

மாறா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
மாறா - சினிமா விமர்சனம்

ஆச்சர்யம், காதல், நெகிழ்வு என வெவ்வேறு உணர்வுத்தடங்களில் பயணிக்கும் பாத்திரத்தை அனுபவித்து ஈர்ப்புடன் நடித்திருக்கிறார் ஷ்ரத்தா

மாறா - சினிமா விமர்சனம்

ஆச்சர்யம், காதல், நெகிழ்வு என வெவ்வேறு உணர்வுத்தடங்களில் பயணிக்கும் பாத்திரத்தை அனுபவித்து ஈர்ப்புடன் நடித்திருக்கிறார் ஷ்ரத்தா

Published:Updated:
மாறா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
மாறா - சினிமா விமர்சனம்

பாரு என்கிற பார்வதி, தான் சிறுவயதில் கேட்டறிந்த கதையை எதிர்பாராத இடத்தில் ஓவியமாகப் பார்த்துத் திகைக்கிறாள். அந்தக் கதை அவனுக்கு எப்படித் தெரிந்தது என்று ஓவியனைத் தேடிச் செல்லும் பயணத்தில் அவளுக்குப் பல கதைகள் கிடைக்கின்றன. அன்பினால் நெய்யப்பட்ட இந்தக் கதைகளே ‘மாறா.’

துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் மலையாளத்தில் வெற்றியடைந்த ‘சார்லி’ படத்தைத் தமிழில் சில பல மாற்றங்களுடன் ‘ரீமேக்’கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் திலிப் குமார். ‘மாறா’வாக நடித்திருக்கும் மாதவனைவிட அதிகம் ஈர்ப்பது ‘பார்வதி’ ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் ‘வெள்ளையன்’ மௌலியும்தான்.

ஆச்சர்யம், காதல், நெகிழ்வு என வெவ்வேறு உணர்வுத்தடங்களில் பயணிக்கும் பாத்திரத்தை அனுபவித்து ஈர்ப்புடன் நடித்திருக்கிறார் ஷ்ரத்தா. பருவ வயதில் தன் காதலிக்கு எழுதிய கடிதத்தின் எழுத்துகள் அழியாதபடி பாதுகாத்து, அவளின் வருகைக்காக இன்னமும் காத்திருக்கும் கனமான பாத்திரம் மௌலிக்கு! சொல்லவா வேண்டும்? கலக்கியிருக்கிறார் மனிதர்.

தான் அடிக்கடி காணாமல்போகும் காரணத்தை ஷிவதாவிடம் விளக்கும் காட்சியில் மட்டும் மாதவனிடம் உருக்கம். ஆனால் படத்தின் பெரும்பாதியில் இருப்பே இல்லாததால் அவர் பார்த்திரம் பெரிதாகப் பதியவில்லை.

ஷிவதா, அலெக்ஸாண்டர் பாபு, ஆர்.எஸ்.சிவாஜி, ஜூனியர் பாலையா, கிஷோர், குரு சோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கர், அபிராமி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளம். ஆனால் ஒருவரும் எதையும் வீணாக்கிவிடாமல் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மாறா - சினிமா விமர்சனம்

இசை பிரதானமாக ஒலிக்கும் பயணக்கதைக்கு அற்புதமாக வலுச்சேர்த்திருக்கிறார் ஜிப்ரான். ‘ஒரு அறை உனது’, ‘ஓ அழகே’ போன்ற பாடல்களில் தாமரையின் வரிகளுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார். அஜயன் சல்லிசேரியின் அற்புதமான கலை இயக்கமும் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் முத்துகுமாரின் ஒளிப்பதிவும் படத்துக்கு ஒருவித ஃபேன்டஸி வண்ணத்தைப் பூசிவிடுகிறது.

‘சார்லி’யின் கதை மாந்தர்களையும் ஒரு சில கிளைக்கதைகளையும் மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு முன்னும் பின்னும் மாற்றங்கள் செய்து முடிந்த அளவு புதியதான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், முதல் பாதி ஒருகட்டத்துக்கு மேல் ‘என்னதான் சொல்ல வர்றீங்க?’ என்ற அலுப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இரண்டே காட்சிகளில் வந்து முழுமையடையாத கிஷோர் கதை, திடீரென்று கடலில் குதித்துத் தற்கொலை செய்யும் அபிராமியின் கதை வெறும் அதிர்ச்சிக்காகத்தானா என்ற சந்தேகம் போன்றவை ‘மாறா’வின் பலவீனங்கள்.