Published:Updated:

மாறன் - சினிமா விமர்சனம்

தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
தனுஷ்

படத்தை அசட்டையாக அணுகியிருக்கும் இரண்டாவது நபர் இயக்குநர் கார்த்திக் நரேன்.

மாறன் - சினிமா விமர்சனம்

படத்தை அசட்டையாக அணுகியிருக்கும் இரண்டாவது நபர் இயக்குநர் கார்த்திக் நரேன்.

Published:Updated:
தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
தனுஷ்

‘இதை வச்சுக்கூட ஒரு படம் எடுக்கலாமா?’ என ஒரு சின்ன விஷயத்தை விரிவாகச் சித்திரித்து அசத்தும் படங்கள் ஒருவகை. ‘இதை எப்படி படம்னு எடுத்தாங்க?’ என, பார்ப்பவர்களைப் படுத்தும் படங்கள் ஒருவகை. ‘மாறன்’ இதில் இரண்டாவது ரகம்.

ஊர் போற்றும் செலிபிரிட்டி ஜர்னலிஸ்ட்டாக(?) இருக்கிறார் தனுஷ். ‘வாவ்... வாட் எ மேன்’ என மற்ற முன்னணி ஊடகங்கள்கூடக் கொண்டாடும் பெருமைக்குச் சொந்தக்காரர். இவ்வளவு பெயரையும் புகழையும் ஒரே பாட்டில் அடைந்துவிட்டதால் மிச்சமிருக்கும் வாழ்க்கையில் என்ன செய்ய என யோசித்து அரசியல்வாதி சமுத்திரக்கனியின் ஊழலை வெளிக்கொண்டுவருகிறார். மறுபடியும், ‘வாவ், வாட் எ...’ என ஊடகங்கள் புகழ, அதனால் தனுஷின் சொந்த வாழ்க்கையிலும் சிக்கல். அதையும் வெற்றிகரமாக நான்கு காட்சிகளில் எதிர்கொண்டுவிடுவதால் மறுபடியும் எஞ்சியிருக்கும் வாழ்க்கைக்கு என்ன பண்ணுவது என யோசித்து மறுபடியும் ஒரு வில்லன்... சொல்வதற்கே டயர்டாகும் கதைதான் இது.

தனுஷ் - நடிப்பில் உச்சங்கள் தொட்டுவிட்ட அவர் இந்த வேடத்தில் எப்படி நடித்திருப்பார் என்பது கேள்வியே இல்லை; ஏன் நடித்தார் என்பது மட்டுமே கேள்வி. நடிப்புக்கான வெளி கொஞ்சம்கூட இருந்திடாத மிகச்சுமாரான திரைக்கதை அவருக்கான நியாயம் செய்யவில்லை. ஸ்மிருதி வெங்கட்டைப் பார்க்கும்போதும் இதே பரிதாபம்தான் எழுகிறது.

மாறன் - சினிமா விமர்சனம்

படத்தை ரொம்பவே அசட்டையாக அணுகியிருப்பவர்கள் இருவர். அதில் முதல் நபர் மாளவிகா மோகனன். கதையில் கொஞ்சமாக ஒட்டியிருக்கும் சென்டிமென்ட் காட்சிகளின் கனமும் இவரின் ஒப்பேற்றுதலால் காணாமல் போகிறது. அமீர், இளவரசு, சமுத்திரக்கனி, ராம்கி, ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ், போஸ் வெங்கட் எனத் திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள் காட்சிகளில்; இல்லை திரைக்கதையில்.

விவேகானந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவும் ஜி.வி பிரகாஷின் பின்னணி இசையும் மட்டுமே ஓரளவிற்கு படத்தைக் காப்பாற்றுகிறது. ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல், பாதியிலிருந்து தொடங்கும் காட்சிகளில் தொலைந்துபோய்விட்டது ஜி.கே பிரசன்னாவின் படக்கோவை.

படத்தை அசட்டையாக அணுகியிருக்கும் இரண்டாவது நபர் இயக்குநர் கார்த்திக் நரேன். ‘இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம்’ என்கிற ஏரியாவை மையமாய் வைத்து எடுக்கப்படும் படத்தின் அடிப்படையான ‘ஒரு பத்திரிகை அலுவலகம் எப்படிச் செயல்படும்?’ என்பதுகூட இயக்குநருக்குத் தெரியாதா? நேர்காணலுக்கு வருபவரிடம் வைக்கப்படும் போட்டி தொடங்கி மேற்பார்வையே இல்லாமல் செய்தியை பப்ளிஷ் செய்யும் காட்சி வரை அத்தனையிலும் அபத்தம்.

எஸ்.ஏ.சந்திரசேகர் காலத்துப் பழைய கதையை அதைவிடப் பழைய காட்சிகளை வைத்து எடுத்து, தமிழ் சினிமாவைப் பல பத்தாண்டுகள் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் இந்த ‘மாறன்.’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism