Election bannerElection banner
Published:Updated:

``ஏழே கேரக்டர்ஸ்... கொடைக்கானலில் 32 நாள்... பென்ச்மார்க் கீர்த்தி!’’ - `பெண்குயின்’ அப்டேட்ஸ்

மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் `பெண்குயின்' படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்!

கோவையில் கேட்டரிங் தொழிலில் பிஸியாக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ், ராஜுமுருகன் கதை, வசனத்தில் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான `மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் கோலிவுட்டுக்குள் நாயகனாக என்ட்ரி கொடுத்தார். இப்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் `பெண்குயின்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரிடம் பேசினேன்.

`` `பெண்குயின்' வாய்ப்பு எப்படி வந்தது?''

``இந்தப் படத்துடைய இயக்குநர் ஈஸ்வர் `மெஹந்தி சர்க்கஸ்' படத்தைப் பார்த்திருக்கார். அவருக்கு படம் ரொம்பப் பிடிச்சிருந்திருக்கு. அப்புறம், நான் கோட் சூட் எல்லாம் போட்டு புரொஃபெஷனலா ஒரு போட்டோ ஷூட் பண்ண போட்டோவை என் இன்ஸ்டாகிராம் பக்கத்துல போட்டிருந்தேன். அதைப் பார்த்தவர், இந்த லுக் இந்தப் படத்துக்குச் சரியா இருக்கும்னு நினைச்சு என்னை ஆடிஷனுக்கு வரச் சொன்னார். அங்க நான் நடிச்சது அவங்களுக்குப் பிடிச்சுப்போக, நான் `பெண்குயின்' படத்துக்குள்ள வந்துட்டேன்"

``இது என்ன மாதிரியான படம்? உங்களுக்கு என்ன கேரக்டர்?''

மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ்

``இது ஹீரோயின் சென்ட்ரிக் த்ரில்லர் படம். கீர்த்தி சுரேஷை மையப்படுத்தின கதை. அவங்களோடவே பயணிக்கிற முக்கியமான கேரக்டர் என்னுடையது. இதுல நான் இன்டீரியர் ஆர்க்கிடெக்ட்டா வருவேன். `மெஹந்தி சர்க்கஸ்'ல நான் பண்ண ஜீவா கேரக்டருக்கும் இந்தப் படத்துல நான் நடிக்கிற கேரக்டருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். நிச்சயமா மக்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்."

``கீர்த்தி சுரேஷ் கூட நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?''

``அவங்க சினிமா பின்புலம் உள்ள குடும்பத்திலிருந்து வந்தவங்க, தேசிய விருது வாங்கினவங்க, இந்த மாதிரி எதையும் காட்டிக்கமாட்டாங்க. எல்லோர் கூடவும் ரொம்ப ஃப்ரெண்ட்லி. ரொம்ப ரொம்ப டெடிகேட்டடான நபர். வசனத்தையும் எமோஷனையும் ஒரு சேர கொண்டுவந்து எப்படி நடிக்கிறதுனு அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன். நிறைய டிப்ஸ் கொடுப்பாங்க. நானே சில சந்தேகங்கள் எல்லாம் அவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். டேக்குக்குப் போறதுக்கு முன்னாடி என்ன பண்ணப்போறோம்னு ஒருமுறை எங்களுக்குள்ள நடிச்சுப் பார்த்துக்குவோம். அப்போ சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாம் இம்ப்ரூவ் பண்ணுவாங்க.

`நடிகையர் திலகம்' படத்துக்குப் பிறகு, கீர்த்தி சுரேஷுக்கு இந்தப் படம் அடுத்த பென்ச் மார்க்கா இருக்கும். அவங்களை சுத்தித்தான் கதை நகரும். அதுக்கு நாங்க எல்லோரும் சப்போர்ட்டா இருப்போம். மொத்தம் 32 நாள்கள் கொடைக்கானல் பகுதிகள்ல எடுத்தோம். ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா கத்துக்கிட்டே இருந்தேன். படத்துல மொத்தமே ஏழு கேரக்டர்கள்தான். கீர்த்தி, நான், லிங்கா என எங்க மூணு பேர் தவிர மத்தவங்க எல்லோரும் புதுமுகங்கள்தான்."

`` 'மெஹந்தி சர்க்கஸ்'ல கத்துக்கிட்ட எந்த விஷயம் இங்கே ரொம்ப உதவியா இருந்தது?''

மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ்

`` `மெஹந்தி சர்க்கஸ்' படம் பண்ணும்போது எனக்கு சினிமா புதுசு. அந்தப் படத்துல டயலாக் டெலிவரியில கொஞ்சம் தடங்கல் இருந்தது. சரியான எமோஷனை வெளிக்காட்ட முடியலை. இந்தப் படத்துல அதைக் கடந்து வந்திருக்கேன்னு நினைக்கிறேன். பர்ஃபாமென்ஸும் கொஞ்சம் முன்னேறி இருக்கேன்னு நம்புறேன்.''

``வீட்ல என்ன ரெஸ்பான்ஸ்? கேட்டரிங் பிசினஸ் எப்படி போய்க்கிட்டிருக்கு?"

``கீர்த்தி சுரேஷ்கூட நடிக்கிறது எங்க வீட்ல எல்லோருக்கும் சந்தோஷம்தான். நல்லா சப்போர்ட் பண்றாங்க. புரட்டாசி மாசம் கல்யாணம் பண்ணமாட்டாங்க. எந்த முகூர்த்தமும் வராத சமயத்துல இந்தப் படத்துக்கான ஷூட்டிங்கை முடிச்சுட்டேன். செப்டம்பர் 12 ஆரம்பிச்சு அக்டோபர் 31 வரை ரெண்டு ஷெட்யூலா ஷூட்டிங் நடந்தது. `மெஹந்தி சர்க்கஸ்' நடிச்சுட்டு இருக்கும்போது நடுவுல ரெண்டு கல்யாணம் வந்துட்டதுனால நைட் அங்கே போயிட்டு காலையில நடிக்க வந்திடுவேன். ஆனா, இந்த முறை ஆஃப் சீசன்ல படம் ஆரம்பிச்சதுனால எந்த பிரஷரும் இல்லை. பிசினஸும் நல்லபடியா போய்க்கிட்டிருக்கு."

புகைப்படக்கலை: வெயிட்லாஸ் கீர்த்தி... ஸ்பீடு சமந்தா... ஸ்வீட் காஜல்!

``அடுத்து என்ன பிளான்?"

பெண்குயின் டீம்
பெண்குயின் டீம்

``கதைகள் கேட்குறதுக்குக் கோயம்புத்தூர்ல எனக்கு ஒரு டீம் இருக்காங்க. எல்லோரும் என் நண்பர்கள்தான். ஒவ்வொரு வாரமும் கதைகள் கேட்போம். அதுல அவங்களுக்கு எது திருப்தியா இருக்கோ அதைப் படமா பண்ண பிளான் இருக்கு. அது மாதிரி ரெண்டு கதைகள் ஓகே பண்ணி வெச்சிருக்கேன். அதுக்கான அறிவிப்பு வரும். என் கேட்டரிங் பிசினஸைப் பாதிக்காதளவுக்கு வருஷத்துக்கு ரெண்டு அல்லது மூணு படம் பண்ணலாம்னு இருக்கேன். இன்னொரு விஷயத்தையும் சொல்றேன், `பெண்குயின்' படத்துல இருந்து என் திரைப்பெயரை மாத்திக்கலாம்னு இருக்கேன். `மெஹந்தி சர்க்கஸ்'ல 'மாதம்பட்டி ரங்கராஜ்'னு வரும். இனிமே நான் நடிக்கிற எல்லாப் படங்களிலும் `அதிதேவ்'ங்கிற பெயர்தான் வரும். சுருக்கமா கொஞ்சம் ஸ்டைலிஷ்ஷா பெயர் இருந்தா நல்லாயிருக்கும்னு என் நலம் விரும்பிகள் எல்லோரும் நினைச்சாங்க. ஹீரோவா நடிக்கும்போது பெயர் ரொம்ப முக்கியம்னு எனக்கும் தோணுச்சு. அதனால நியூமராலஜிஸ்ட்கிட்ட கேட்டுப் பெயரை மாத்திட்டேன்"

`முன்னாள் கால்பந்து வீரரின் பயோபிக்!’ - கீர்த்தி சுரேஷின் பாலிவுட் பட அப்டேட்ஸ்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு