நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார். அடுத்த கட்டமாக இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக நீச்சல் போட்டிக்கு அதிக அளவில் பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால், மாதவன் வசிக்கும் மும்பையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அதிகமான நீச்சல் குளங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அதோடு இருக்கும் சில நீச்சல் குளங்களும் மிகவும் சிறியதாக இருக்கின்றன. அவை பயிற்சிக்கு போதுமானதாக இல்லை.
எனவே பெரிய அளவிலான நீச்சல் குளங்களில் பயிற்சி எடுத்துக்கொள்வதற்காக நடிகர் மாதவன் தனது மகன் மற்றும் மனைவி சரிதாவுடன் மும்பையிலிருந்து துபாய்க்குச் சென்றுவிட்டார்.
இது குறித்து மாதவன் கூறுகையில், "வேதாந்த் ஒலிம்பிக் போட்டிக்கு தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறான். எனவே அவனுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம். வேதாந்த் உலக அளவில் நீச்சல் போட்டியில் ஏராளமான பரிசுகளை வென்று இருக்கிறான். அவனை நினைத்து பெருமைப்படுகிறோம். நானோ அல்லது எனது மனைவியோ எங்களது மகன் நடிகனாக வரவேண்டும் என்று விரும்பவில்லை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குழந்தைகளுக்கு அவர்கள் அருகில் இருப்பதை நன்றாகக் கவனித்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள். வீட்டில் தனியாக இருக்கும் பாட்டி, தாத்தாவிற்கு உதவி செய்ய உற்சாகப்படுத்தலாம். வீட்டில் தாவரங்கள் அல்லது விலங்குகள் இருந்தால் அதனைக் கவனித்துக்கொள்ளும்படி குழந்தைகளிடம் கேட்டுக்கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
மாதவனின் மகன் நீச்சல் போட்டியில் சாதனைகள் செய்ய பாலிவுட் நட்சத்திரங்கள் ஆன்லைனில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மாதவன் இயக்கி வரும் இந்திப் படமான 'ராக்கெட்ரி' படத்தின் வேலைகளும் முழு அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டு இப்படம் திரைக்கு வர இருக்கிறது.