Published:Updated:

``கமல் மட்டும் இல்லேன்னா நாங்க மீண்டிருக்கவே முடியாது!'' - கலங்கும் மாது பாலாஜி #LetsRelieveStress

மாது பாலாஜி
News
மாது பாலாஜி

"எல்லாருமே ரொம்ப அப்செட்டாயிட்டோம். அடுத்து என்ன செய்றதுன்னே புரியல. முக்கியமா நாடகக்குழு இனிமே என்னாகும்கிற கவலை எல்லோருக்கும் இருந்துச்சு. அந்த நேரத்துலதான் கமல் சார் என்னைக் கூப்பிட்டார். போய்ப் பார்த்தேன்."

ராமனுக்கு ஒரு லட்சுமணன் என்றால், கிரேஸி மோகனுக்கு மாது பாலாஜி. கிரேஸி மோகனின் நாடகங்களில் அவரின் தம்பி மாது பாலாஜிதான் எப்போதும் ஹீரோ. கடந்த மாதம் கிரேஸி மோகன் காலமாகிவிட்ட நிலையில், மீளமுடியாத அழுத்தத்தில் இருந்தார். அவரிடம் பேசினோம்.

மாது பாலாஜி
மாது பாலாஜி

''சின்ன வயசிலிருந்தே நான், மோகன் (கிரேஸி மோகன்), எங்க அப்பா, பெரியப்பான்னு 14 பேர் கூட்டுக் குடும்பமா இருந்ததால மனஅழுத்தம், மனஇறுக்கம் எதுவும் எங்களை நெருங்கினதில்லை. தொடக்கத்துல தாத்தா, பாட்டிதான் எங்களைப் பார்த்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் அப்பா, அம்மா பார்த்துக்கிட்டாங்க. நாங்க படிப்பு, வேலைனு இருந்தோம். எந்தக் கவலையும் இல்லாம இருந்ததால மோகனுக்கு ரொம்ப ஈஸியா ஹியூமர் வந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எங்க வீட்டுல எப்பவுமே ஒரு கூட்டம் இருக்கும். அதனால எங்களை, 'ஸ்கூலுக்குப் போனியா, காலேஜுக்குப் போனியா'னுகூட கேட்க மாட்டாங்க. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருக்கும். நான் காலேஜ் படிக்கிறப்போ கிளாஸை கட் பண்ணிட்டு படத்துக்குப் போய்டுவேன். அப்படிதான், 'ஷோலே', 'யாதோங்கி பாரத்' படங்களையெல்லாம் பார்த்தேன். படத்துக்குப் போன அன்னிக்கு வீட்டுல யாருக்கும் தெரியாது, நாலஞ்சு நாள் கழிச்சுத்தான் தெரியும். அதுக்கப்புறம்தான் விசாரிப்பாங்க. அந்த அளவுக்கு ஜாலியா ஊர் சுத்துவோம்.

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

எங்க அம்மா 46 வயசுலயே இறந்துட்டாங்க. அப்போ எனக்கு 25 வயசு. அம்மாவுக்கு அப்புறம் எங்க பெரியம்மா எங்களைப் பார்த்துக்கிட்டதால, அந்த சோகத்துல இருந்து ஈஸியா வெளிய வந்துட்டோம். எங்களுக்கு கஷ்டம் தெரியலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1989-ல எங்க தாத்தா இறந்துபோனார். அதையும் கடந்து போயிட்டோம். ஆனா, மோகனோட மரணத்தை அவ்வளவு ஈஸியா எடுத்துக்க முடியலை. 66 வயசுதான் அவனுக்கு... காலையில ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து காபி குடிச்சுட்டுப் பேசிட்டிருந்தோம். 10.30 மணி இருக்கும், 'லேசா நெஞ்சுவலிக்குது'னு சொன்னான். உடனே அவனை அழைச்சிட்டு ஹாஸ்பிட்டல் போனோம். 12 மணிக்குப் போய்ட்டான். எப்படி தாங்கிக்க முடியும்?

மாது பாலாஜி
மாது பாலாஜி

உடம்பு முடியாம படுக்கையில இருந்து கஷ்டப்பட்டு போயிருந்தாகூட மனசு ஏத்துக்கும். இப்படி 'திடீர்'னு இறந்துபோனதைத் தாங்கிக்க முடியல. அதனால குடும்பத்தினர், நாடகக் குழுவினர், நான் எல்லாருமே ரொம்ப அப்செட்டாயிட்டோம். அடுத்து என்ன செய்றதுனே புரியல. முக்கியமா நாடகக்குழு இனிமே என்னாகும்கிற கவலை எல்லோருக்கும் இருந்துச்சு.

அந்த நேரத்துலதான் கமல்சார் என்னைக் கூப்பிட்டார். போய்ப் பார்த்தேன். 'என்ன பண்ணப்போறீங்க?'னு கேட்டார். 'என்ன பண்றதுனு தெரியலை சார். இதிலிருந்து மீள ரெண்டு மாசமாவது எங்களுக்கு ஆகும்னு நினைக்கிறேன் சார்'னு சொன்னேன்.

'நோ... நோ... உங்களோட சோகத்துக்கு 13 நாள் டைம் எடுத்துக்கோங்க. உங்க வருத்தத்தைத் தீர்த்துக்கோங்க. அதுக்குமேல சோகமா இருந்தா, அது உங்களை சோம்பேறியா மாத்திடும். உங்க அண்ணன், எவ்வளவு டிராமா ஸ்கிரிப்ட்செய்து வெச்சிட்டுப் போயிருக்கார். அதை எடுத்து நடத்துங்க. அதுதான் அவருக்கு நீங்க செய்ற கௌரவம். அவருடைய லட்சியத்தை நீங்கதான் அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போகணும்.

மாது பாலாஜி
மாது பாலாஜி

'கிரேஸி ப்ரீமியர் லீக்' நாடகத்தின் 100-வது ஷோவுக்கு என்னைத்தான் தலைமைதாங்க கேட்டிருந்தார். அந்த நேரம் அரசியல்ல கொஞ்சம் பிஸியா இருந்ததால 'வர முடியலை'னு சொல்லிட்டேன். இப்ப எல்லாம் முடிஞ்சிடுச்சு. உடனே நாரதகான சபாவுல தேதி வாங்குங்க. நானே வந்து தலைமை தாங்கி நடத்தித் தர்றேன். உங்க டிரஸ்ட்டுக்கு இனி நான்தான் தலைவர்'னு சொல்லி அனுப்பினார்.

நாங்களும் அந்த மாசக் கடைசியில ஒரு தேதியை வாங்கி நாடகத்தை நடத்தினோம். சொன்னமாதிரியே கமல்சாரும் வந்து நடத்திக்கொடுத்தார். கவலையிலும் மன இறுக்கத்திலும் இருந்த எங்களோட மனசை மடை மாத்தி, எங்க பொறுப்பை கமல் சார் நல்லாவே எங்களுக்கு உணர்த்திட்டார்.

மாது பாலாஜி
மாது பாலாஜி

மோகன் நிறைய வெண்பாக்கள், பக்தி பாடல்கள் எழுதியிருக்கான். வடமொழிக் கவிஞர் காளிதாசனின் குமார சம்பவத்தை அப்படியே தமிழ்ல பாடல்களாகப் பாடி வெச்சிருக்கான். அது அவனோட இன்னொரு முகம். அவற்றையெல்லாம் அருமையான பக்திப்பாடல்களா தொகுத்து வெளியிடலாம்னு இருக்கோம். மோகன் எழுதி வெளிவராமலிருக்குற நாடகங்களையும் வரிசையா நடத்தலாம்னு இருக்கோம். அவன் போன ரணம் ஆறாது. ஆனா, அவன் படைப்புகளோட பயணிக்கிறதுதான் இப்போ எங்க மனஅழுத்தத்தைப் போக்குறதுக்கு மாமருந்தா இருக்குது!'' என்றார் மாது பாலாஜி.