Published:Updated:

``ஆமாங்க... மியூச்சுவலா டைவர்ஸ் கேட்ருக்கோம்... இது பர்சனல்!'' - மதுவந்தி

மதுவந்தி
மதுவந்தி

விவாகரத்து கிடைத்துவிடும் என்கிற சூழலில்தான் `கொரோனா’ பிரச்னை வந்துவிட, தற்போது விவகாரத்து வழக்கு அப்படியே நிலுவையில் இருக்கிறது.

`` `ஜன்தன்’ அக்கவுன்ட் வைத்திருக்கும் மொத்தப் பேருக்குமாய்ச் சேர்த்து 30,000 கோடி ரூபாய் வழங்கியுள்ளது மத்திய அரசு. இதில் பெண்களுக்கு மட்டுமே 20,000 கோடி சென்றுள்ளது. இது தவிர 8,000 கோடி இந்திய மக்களுக்கு `உஜ்வாலா’ திட்டம் மூலமாக இன்னொரு 5,000 கோடி வழங்கப்பட்டுள்ளது...’’ - இப்படி ஒரு வீடியோவில் பேசியதற்காக (பிறகு மன்னிப்பும் கேட்டார்) சோஷியல் மீடியாக்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வந்தவர் மதுவந்தி. ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தி மேடைநாடக இயக்குநர் மற்றும் நடிகை. சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவரைப் பற்றி சோஷியல் மீடியாக்களில் தனிநபர் தாக்குதல்கள் அதிகமாகியிருக்கின்றன. இவரின் பர்சனல் வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தும் போஸ்ட்டுகளும் அதிகமாகியிருக்கின்றன.

மதுவந்தி
மதுவந்தி

இதுகுறித்து உண்மை என்ன என விசாரித்தோம். மதுவந்தியின் கணவர் அருண். இவர் ஜெமினி கணேசன் - சாவித்ரியின் மகளான விஜயசாமுண்டீஸ்வரியின் மகன். ``ரெண்டு பேருமே பெரிய பின்னணி கொண்ட குடும்பத்துல இருந்து வந்தவங்க. நாடகம், சினிமாங்கிற விஷயம் இவங்களுக்கிடையே ஒரு இணைப்புப் புள்ளியா இருந்தது. குடும்பத்துல பெரியவங்களுக்கிடையே இருந்த நட்பு அப்படியே பசங்களையும் இணைக்க, அருண்- மதுவந்தி இடையே நட்பு மலர்ந்தது. பிறகு அது காதலாகி, கல்யாணத்துக்குப் போச்சு. அப்ப லயோலாவுல படிச்சிட்டிருந்தாங்க மதுவந்தி.

மதுவந்தி – அருண் திருமணம் மிகச் சிறப்பா நடந்தது. அப்போது முதல்வரா இருந்த ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த்னு ஏகப்பட்ட விவிஐபிகள் கலந்துக்கிட்டாங்க. மதுவந்தி குடும்பம் பிரபலமான கல்வி நிறுவனங்களை நடத்திட்டு வர்றது எல்லாருக்கும் தெரியும். கல்யாணத்துக்குப் பிறகு அதே வழியில மதுவும் கணவருடன் சேர்ந்து கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி திறம்பட நடத்திட்டுவந்தாங்க. அதேபோல ஸ்டேஜ் டிராமாவுல விருப்பம் காட்டினவங்க அப்படியே சீரியல், சினிமாப் பக்கமும் வந்தாங்க. அவங்களோட எல்லா முடிவுக்குமே கணவர் அருண் அவ்வளவு சப்போர்ட்டாதான் இருந்துட்டு வந்தார். இப்படி சந்தோஷமா குடும்பம் நடத்திட்டு வந்த தம்பதிக்கு ஒரு பையனும் இருக்கான்.

அப்பா ஒய்.ஜி. மகேந்திரனுடன் மதுவந்தி
அப்பா ஒய்.ஜி. மகேந்திரனுடன் மதுவந்தி

நல்லபடியா போயிட்டிருந்த நிலையில், கணவன் மனைவிக்கிடையே என்ன பிரச்னைனு தெரியல. `இவங்களுக்கிடையில் பிரச்னை’னு நெருங்கிய குடும்ப உறவுகள் மத்தியில் பேச்சுவரத் தொடங்கியது. இரண்டு தரப்புல இருந்தும் சிலர் சமரசப் பேச்சுவார்த்தையில ஈடுபட்டாங்க. ஆனா அந்த முயற்சி பலனளிக்கலைன்னும் தெரிஞ்சிக்கிட்டோம். அதனால ஒருகட்டத்துல ரெண்டு பேருமே பிரிஞ்சு வாழத் தொடங்கினாங்க. கடந்த சில வருஷங்களாவே தனித்தனியா வாழ்ந்துட்டு வந்த சூழல்லதான், முறைப்படி பிரிஞ்சுடறதுன்னு முடிவு செஞ்சிருக்காங்க'' என்றார் அருணுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர்.

மதுவந்தி பற்றிய விக்கிபீடியா பக்கத்தில்கூட இவர் விவாகரத்து பெற்றுவிட்டதாக தகவல் இருக்கிறது. ஆனால், உண்மையில் இருவருக்கும் இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை. விவாகரத்து கிடைத்துவிடும் என்கிற சூழலில்தான் `கொரோனா’ பிரச்னை வந்துவிட, தற்போது விவகாரத்து வழக்கு அப்படியே நிலுவையில் இருக்கிறது. இதுகுறித்து மதுவந்தியிடம் கேட்டேன்.

``இது என்னோட பர்சனல் விஷயம். இதை ஏன் வெளில பேசுறாங்கன்னு புரியல. ஆமாங்க, நாங்க மியூச்சுவலா பிரியறதுக்கு டைவர்ஸ் அப்ளை பண்ணியிருக்கோம். எனக்கு நெருக்கமானவங்க எல்லோருக்கும் இது தெரியும். இதுல என்ன பரபரப்பு இருக்குன்னு தெரியல.'' என்றார் மதுவந்தி.

அடுத்த கட்டுரைக்கு