Published:Updated:

``கூலாக பேசிய மணிரத்னம்; 'வைரஸ்' மாதிரி ஒரு தமிழ்ப்படம்..!" - மடோனா ஷேரிங்ஸ்

மடோனா செபாஸ்டியன்

'பிரேமம்' படத்தின் மூலமாகத் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். தற்போது இவர் மணிரத்னத்தின் உதவி இயக்குநர் தனா எடுத்துக்கொண்டிருக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

``கூலாக பேசிய மணிரத்னம்; 'வைரஸ்' மாதிரி ஒரு தமிழ்ப்படம்..!" - மடோனா ஷேரிங்ஸ்

'பிரேமம்' படத்தின் மூலமாகத் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். தற்போது இவர் மணிரத்னத்தின் உதவி இயக்குநர் தனா எடுத்துக்கொண்டிருக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

Published:Updated:
மடோனா செபாஸ்டியன்

தமிழ்ப் படங்களில் நடிப்பது எனக்குப் பிடிக்கும். தமிழ் பேசுறதும் பிடிக்கும். ஏன்னா, மலையாளமும் தமிழும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதனால, மற்ற மொழிகளைவிட தமிழை ஈஸியா கத்துக்கிட்டேன். தமிழில் நாலு படங்கள் பண்ணிட்டதால இப்போ தமிழ் வார்த்தைகளைப் புரிஞ்சிக்க முடியுது. வசனங்களையும் புரிஞ்சிக்கிட்டு பேசுறேன். இதுக்கு படத்தோட யூனிட்ல இருக்கிறவங்களும் எனக்கு உதவி பண்றாங்க'' என்கிறார் நடிகை மடோனா செபாஸ்டியன். மணிரத்னம் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் மடோனாவிடம் படம் பற்றி பேசினேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'வானம் கொட்டட்டும்' படத்தில் எப்படி கமிட்டானீங்க?

மடோனா
மடோனா

’’இயக்குநர் தனா என்கிட்ட கதை சொன்னப்போ ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. பக்கா ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படம். படத்தோட ஷூட்டிங் இப்போ போயிட்டு இருக்கிறதால என்னோட கேரக்டர் பற்றி அதிகம் சொல்ல முடியாது. ஆனா, என்னோட சினிமா கேரியருக்கு முக்கியமான படமா இது இருக்கும். குறிப்பா, படத்தை மணிரத்னம் சாரின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' தயாரிக்குறாங்க. இவையெல்லாம்தான் படத்துக்கு சம்மதம் சொல்ல வைத்தது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மணிரத்னம் கதையில் நடிக்குறது எப்படியிருக்கு?

ராதிகா, சரத்குமார்,சுஹாஷினி,மணிரத்னம்
ராதிகா, சரத்குமார்,சுஹாஷினி,மணிரத்னம்

``ஆசீர்வதிக்கப்பட்ட ஒண்ணா நினைக்குறேன். மணிரத்னம் சார்கூட வேலை பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது. முதன்முதலாக அவருடைய ஆபீஸில் 15 நிமிடங்கள் அவரிடம் பேசினேன். அந்த நிமிடங்கள் ரொம்ப பொக்கிஷமானது. மணி சார் படங்களில் அவரது டயலாக்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்துல அவர் எழுதுன டயலாக்ஸ், மற்றப் படங்களைக் காட்டிலும் வித்தியாசமா இருக்கேனு ஃபீல் பண்ண முடியுது. இயக்குநர் தனாவும் எனக்குப் புரியுற மாதிரி காட்சிகள் மற்றும் வசனங்களை சொல்லிக் கொடுத்தார். தனாவுக்கு என்ன வேணும்ங்கிறதுல அவர் தெளிவா இருப்பார். காட்சிகளை அழகாக வடிவமைக்ககூடிய இயக்குநர்.’’

விக்ரம் பிரபுகூட நடிக்கிற அனுபவம்?

’’விக்ரம் பிரபுகூட இப்போதான் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். நல்ல கோ-ஆக்டர். நிறைய டயலாக்ஸ் பேசி பெரிய ஷாட்ல நடிக்க வேண்டியது இருந்தாலும் பொறுமையா வெயிட் பண்ணுவார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சில டயலாக்ஸ் மறந்துட்டாலும் சொல்லிக் கொடுத்து உதவி செய்வார். எனக்குப் புரியாத வசனங்களுக்கு அர்த்தமும் சொல்லிக்கொடுப்பார்.’’

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மணிரத்னம் வந்தப்போ உங்க ரியாக்‌ஷன் எப்படியிருந்தது?

’’இந்தப் படத்தோட முதல்நாள் ஷூட்டிங்கின்போது மணி சார் வந்தார். எனக்குக் கொஞ்சம் பதற்றமா இருந்தது. அவர் ரொம்ப கூலா 'ஆல் தி பெஸ்ட் மடோனா'னு சொன்னார். குடைக்குள் மழை வந்த மாதிரி இருந்தது.’’

தமிழ் சினிமாவில் உங்களை அடிக்கடி பார்க்க முடியலையே?

மடோனா, மணிரத்னம்
மடோனா, மணிரத்னம்

``தமிழில் எனக்கு நிறைய கதைகள் வந்தது. ஆனா, என்னை ஈர்க்கிற மாதிரியான கதைகள் வரட்டும்னு வெயிட் பண்ணுனேன். இந்தப் படத்தோட கதை எனக்கு முக்கியத்துவம் கொடுத்தது. தனா, கதையை சொன்ன விதமும் பிடிச்சிருந்தது. நிறைய பேர், ’கோலிவுட்டில் முழுநேர நடிகையா உங்களை எப்போ பார்க்கலாம்’னு கேட்குறாங்க. எனக்கு சினிமா எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு என்னோட குடும்பமும் முக்கியம். அதனாலதான் நான் நிறைய நேரம் எடுத்துக்குறேன். ரொம்ப செலெக்ட்டிவ்வான படம்தான் பண்ணணும்னு விரும்புறேன். நிறைய கதைகளில் நடிக்கணும்னு நான் ஆசைப்படவே இல்லை.’’

ஐஸ்வர்யா ராஜேஷ்கூட நடிக்கிற அனுபவம்?

’’முதல்நாள் ஷூட்டிங் வந்தப்போ ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்தாங்க. 'ரம்மி' படத்துல வர்ற 'கூடமேல' பாட்டு பார்த்ததிலிருந்து எனக்கு ஐஸ்வர்யா ராஜேஷைப் பார்க்கணும்னு நினைச்சேன். கடைசியா பார்த்துட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு ரொம்ப பிடிச்ச நபரும் அவங்கதான்.’’

பார்வதி, மடோனா
பார்வதி, மடோனா

மலையாளத்தில் 'வைரஸ்' படத்தில் வித்தியாசமான ரோலில் நடிச்சிருந்தீங்க. தமிழில் எப்போ உங்களை அந்த மாதிரி வித்தியாசமான ரோலில் எதிர்பார்க்கலாம்?

’’நான் பண்ணின படங்களிலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச ரோல் அதுதான். தமிழில் அதுமாதிரியான ஸ்க்ரிப்ட் என்னைத் தேடி வரல. வந்தா கண்டிப்பா பண்ணுவேன். அப்படி ஒரு கதைகாகத்தான் வெயிட் பண்ணுறேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism