Published:Updated:

#Vijay65 - இது விஜய்க்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..!

விஜய்

அட்லி இயக்கத்தில் 'பிகில்' படத்தை முடித்துவிட்டு தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் நடிகர் விஜய். இதற்கு அடுத்து மகிழ் திருமேனி படத்தில் விஜய் நடிக்கப்போகிறார் எனத் தகவல்கள் பரவிவருகின்றன. இது உண்மையா?

#Vijay65 - இது விஜய்க்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..!

அட்லி இயக்கத்தில் 'பிகில்' படத்தை முடித்துவிட்டு தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் நடிகர் விஜய். இதற்கு அடுத்து மகிழ் திருமேனி படத்தில் விஜய் நடிக்கப்போகிறார் எனத் தகவல்கள் பரவிவருகின்றன. இது உண்மையா?

Published:Updated:
விஜய்

`பிகில்' படத்துக்குப் பிறகு விஜய்யை இயக்கப்போவது இவர்தான் எனப் பல இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டன. அருண்ராஜா காமராஜ், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் நரேன் என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே சென்றதில் விஜய் டிக் செய்த பெயர்தான் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லோகேஷின் முதல் படம் `மாநகரம்' கொடுத்த வெற்றியும் நல்ல விமர்சனங்களும் இவரின் இரண்டாவது படமான `கைதி' மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. `பிகில்' படத்துக்குப் போட்டியாக கார்த்தி நடிப்பில் வெளியான `கைதி'யும் ஹிட் அடிக்க லோகேஷ்-விஜய் படத்துக்கான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியிருக்கிறது. தற்போது டெல்லியில் விஜய் 64 படத்துக்கான ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. டெல்லி ஶ்ரீராம் கல்லூரியில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதில் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறார் விஜய். யூடியூப் ஸ்டார்கள் முதல் டிவி விஜே-க்கள் வரை பலரையும் இதில் நடிக்கவைத்திருக்கிறார்கள். படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

விஜய்
விஜய்

இந்தப் படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இது கிட்டத்தட்ட விஜய்யின் சொந்தப்படம் என்பதால் இந்தப் படத்துக்காக அதிக சம்பளம் விஜய் சேதுபதிக்கே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு மற்றும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்தில் நெகட்டிவ் ரோலில் ஆண்ட்ரியா நடிக்கவிருக்கிறார். அவருக்கு சண்டைக் காட்சிகள் இருக்கிறது எனவும் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், இந்தப் படத்துக்கான பட்ஜெட்டே மிகவும் குறைவுதானாம். அதனால் முடிந்தளவுக்கு லைவ் லொகேஷன்களில் படத்தின் ஷூட்டிங்கை நடத்தலாம் என முடிவு செய்திருக்கிறதாம் படக்குழு. இந்தப் படத்துக்குப் பிறகு விஜய்யின் 65-வது படத்தை எடுக்கப் போவது யார் என்ற விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. `தடம்' படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக தகவல் வருகிறது. ஆனால், இதற்கு முன்பிருந்தே `விஜய் எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லியிருக்கிறார்' என இயக்குநர் பேரரசு சொல்லிக்கொண்டிருந்தார். இதனால் இருவரில் யார் என்ற குழப்பம் நீண்டுகொண்டே போகிறது. இதற்கிடையே, மகிழ்திருமேனிதான் இயக்குநர் என்று அடித்துச் சொல்கிறார்கள் கோலிவுட்டில் சிலர்... உண்மை என்ன? விசாரணையில் இறங்கினோம்.

மகிழ்திருமேனி
மகிழ்திருமேனி

யார் இந்த மகிழ்திருமேனி?

செல்வராகவனின் `துள்ளுவதோ இளமை' படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் மகிழ்திருமேனி. அதன்பிறகு கெளதம் மேனனின் `காக்க காக்க', `வேட்டையாடு விளையாடு' படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 2010-ல் `முன்தினம் பார்த்தேனே' என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மகிழ். தொடர்ந்து `தடையறத் தாக்க', `மீகாமன்', `தடம்' என நான்குப் படங்களை இயக்கியிருக்கிறார். இந்த ஆண்டு ரிலீஸான `தடம்' விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மகிழ்திருமேனிக்கு நல்ல வெற்றியைக் கொடுத்தது.

விஜய் 65 படத்தை இயக்குபவர் யார் என விசாரித்தோம். "லோகேஷ் கனகராஜுக்கு முன்பாகவே மகிழ்திருமேனியிடம் கதை கேட்டு படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் விஜய். ஆனால், மகிழ்திருமேனியின் `தடம்' படத்துக்கு முன்பாகவே அவர் உதயநிதியை இயக்க கமிட்டானதால் அவரால் உடனே விஜய்யின் படத்தை இயக்க முடியவில்லை. `விஜய், கதைக்கு ஓகே சொல்லியிருக்கிறார். அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது' என மகிழ் திருமேனி டீம் உதயநிதி டீமிடம் சொன்னபோது `நம் ஒப்பந்தப்படி இந்தப் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு நீங்கள் அடுத்த படத்துக்குப் போங்கள்' என சொல்லியிருக்கிறார்கள். இதனால் தனது கால்ஷீட்டை லோகேஷ் கனகராஜுக்கு கொடுத்திருக்கிறார் விஜய். `நீங்க உதயநிதி படம் முடிச்சிட்டு வாங்க... நான் வெயிட் பண்றேன்' என்றும் விஜய் சொல்லியிருக்கிறார். இதனால் விஜய்யின் அடுத்த படத்தை மகிழ்திருமேனி இயக்குவது சந்தேகமே'' என்கிறார்கள் அவர்கள்.

விஜய்யின் 65-வது படமும் அவரது சொந்தத் தயாரிப்புதான். படத்தின் தயாரிப்பாளர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். இந்தப் படத்தை பேரரசுதான் இயக்க வேண்டும் என்பது எஸ்.ஏ.சி-யின் விருப்பமாம். இதற்கு விஜய்யின் பதிலென்ன என்பது இன்னும் சஸ்பென்ஸாகவே இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism