Published:Updated:

`` `மாநாடு'ம் வரும்; `மஹாமாநாடு'ம் வரும்னு சிரிச்சார் சிம்பு..!'' - மஹத்

மஹத்
மஹத்

`கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' மற்றும் `இவன்தான் உத்தமன்' படங்கள் குறித்து நடிகர் மஹத் பேட்டி!

``பிக்பாஸ் வீட்ல இருந்து வெளியே வந்தவுடன் ஒரே நேரத்துல ரெண்டு படங்களையும் பண்ணிட்டு இருந்தேன். அதுக்கு முன்னாடி பெரிய படங்களில் சின்ன கேரக்டர் பண்ணியிருந்தாலும் ஹீரோவா நடிக்கிறது ரொம்பவே சந்தோசமா இருக்கு.

`` `பகவதி' படம் பண்றதுல விஜய்க்கு உடன்பாடே இல்லை..!'' - எஸ்.ஏ.சந்திரசேகர்

ஐஸ்வர்யா தத்தாகூட `கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' படம் பண்ணிட்டு இருக்கேன். 70% ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு. யாஷிகா கூட நடிச்ச படம் `இவன்தான் உத்தமன்'. இந்தப் படத்துடைய முழு ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு. இந்தப் படம்தான் முதல்ல ரிலீஸாகும்" என பேசத் தொடங்குகிறார் நடிகர் மஹத்.

`கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' அனுபவம் எப்படி இருந்தது?

``ரொமான்டிக் காமெடி ஜானர்ல இருக்கும். ராயபுரத்துல இருக்கிற லோக்கல் பையனா நடிச்சிருக்கேன். `நான் கடவுள்’ ராஜேந்திரன் அண்ணன் என் ஃப்ரெண்டா நடிச்சிருக்கார். யோகிபாபு வித்தியாசமான ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கார்."

"ஐஸ்வர்யா சூப்பரான பெர்ஃபார்மர். அவங்கக்கிட்ட இருக்கிற ஒரே பிரச்னை, நம்ம சொல்ல வர்றதை முழுமையா கேட்கமாட்டாங்க. நீங்களே அந்த டிவி ஷோ மூலமா இதை உணர்ந்திருப்பீங்க. நம்ம சொல்லி முடிக்கிறதுக்குள்ள, `எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும்'னு சொல்வாங்க. `நான் கடவுள்’ ராஜேந்திரன் அண்ணன் ஸ்பாட்ல வேற லெவல். `இந்த டைட்டில் உனக்கு ஏத்த டைட்டில்தான்டா'னு சொன்னார்."
மஹத்

`இவன்தான் உத்தமன்' எப்படி வந்திருக்கு?

மஹத் - யாஷிகா
மஹத் - யாஷிகா

``இந்தப் படம் ரொமான்டிக் த்ரில்லர் ஜானர்ல இருக்கும். வேலை தேடிக்கிட்டு இருக்கிற மிடில் கிளாஸ் பையனா நடிச்சிருக்கேன். மா.கா.பாவும் மனோபாலாவும் படம் முழுக்க என்கூடவே வருவாங்க. மகேஷ் - வெங்கடேஷ் (MagVen) ரெண்டு பேரும் சேர்ந்து இந்தப் படத்தை இயக்கியிருக்காங்க. இந்தக் கதையை மூணு வருஷத்துக்கு முன்னாடியே என்கிட்ட சொல்லியிருந்தாங்க. அப்போ என்னை வெச்சு தயாரிக்க யாரும் முன்வரலை. இப்ப அந்தக் கதையில நான் நடிக்கிறேன்னு சந்தோசமா இருக்கு. ஏற்கெனவே யாஷிகாவும் நானும் நல்ல நண்பர்களா இருந்ததுனால எங்களுக்கான கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட்டாச்சு. இந்தச் சின்ன வயசுல அவ்ளோ ஹார்ட் வொர்க் பண்றாங்க. வளர்ந்துவரும் ஹீரோயின்களில் யாஷிகாதான் படங்கள், ஈவென்ட்ஸ்னு ரொம்ப பிஸி. இன்னும் திருந்தாம, அப்பப்போ மொக்கை ஜோக் டார்ச்சர் வேற. தமன் மியூசிக் பண்ணியிருக்கார். நான் கேட்டதுக்காக சிம்பு ஒரு பாட்டும் அனிருத் ரெண்டு பாட்டும் பாடியிருக்காங்க. இப்பொல்லாம் சிம்பு என்னை, `சொல்லுங்க உத்தமன்'னு கூப்பிடுறார்." சிம்பு

உங்க படங்கள் பத்தி சிம்பு என்ன சொன்னார்?

`` 'எது பண்ணாலும் அதுக்கு உண்மையா இரு. இது நீ வளர்ந்துட்டு இருக்கிற சமயம். எல்லோரும் வாய்ப்பு கிடைக்காமல் சுத்திக்கிட்டு இருக்காங்க. உனக்குக் கிடைக்கிற வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கோ' - இதைதான் அவர் எப்போவும் சொல்லுவார். எப்போ பேசினாலும் நான் நடிக்கிற படங்கள் அப்டேட் பத்தி கேட்டு தெரிஞ்சுக்குவார். நான் பிக்பாஸ்ல இருக்கும்போது ஊரே என்னைத் திட்டுச்சு. ஆனா, சிம்பு மட்டும்தான் என்னை விட்டுக்கொடுக்கலை. நானும் அவரை விட்டுக் கொடுக்கமாட்டேன். எங்க வாழ்நாள் முழுக்க எங்க நட்பு இப்படிதான் இருக்கும்."

'மாநாடு' இல்லேன்னா 'மகா மாநாடு!' - சிம்பு அதிரடி

சின்ன கேரக்டர்கள் பண்ணிட்டு இருந்த நீங்க இப்போ ஹீரோவாகிட்டிங்க. எப்படி இருக்கு?

சிம்பு - மஹத்
சிம்பு - மஹத்

``2006ல சினிமா வாய்ப்பு தேடி அலைஞ்சுக்கிட்டு இருந்தேன். 2009ல `மங்காத்தா' வாய்ப்பு கிடைச்சு, 2011ல ரிலீஸாச்சு. அப்புறமே லீட் ரோல்ல நடிக்கலாம்னு இருந்தேன். ஆனா, வாய்ப்பு கிடைக்கலை. அப்போதான் `ஜில்லா' வாய்ப்பு வந்தது. விஜய் அண்ணன், மோகன்லால் சார்கூட நடிக்க இனி வாய்ப்பு கிடைக்காதுனு அந்தப் படத்துல நடிச்சேன். அப்புறம் `சென்னை 28 - 2', `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'னு சின்ன சின்ன கேரக்டர் பண்ணேன். இந்த இடத்துக்கு வரணும்னு பத்து வருஷம் கஷ்டப்பட்டிருக்கேன்."

"என்னதான் நம்முடைய நண்பர்கள்கூட இருந்தாலும் நம்ம சம்பாதிக்கணும். அதுக்கு நான் வேலை செய்யணும். கடவுள் புண்ணியத்துல எனக்கு வாய்ப்பு கிடைச்சது. இத்தனை வருடமா எனக்கு ஆதரவா இருக்கிற நண்பர்களுக்கு நன்றி."
மஹத்

சிம்பு தயாரிப்புல அவரே இயக்கி நடிக்கிற `மஹாமாநாடு' படம் பத்தி எதாவது சொன்னாரா?

`உங்களால கஷ்டம் மட்டும்தான் இருக்கு..!' - `மாநாடு' சர்ச்சையும் சிம்பு ரசிகரின் வீடியோ பதிவும்

`` `மாநாடு' பத்தியும் `மஹாமாநாடு' பத்தியும் எல்லோரும் கேட்குறாங்க’னு நான் கேட்டதுக்கு, `` `மாநாடு', `மஹாமாநாடு' ரெண்டுமே நடக்குது'னு சொல்லி சிரிச்சார். சுரேஷ் காமாட்சிக்கு ஒரு படம் பண்ணி தரேன்னு நான்தான் சொல்லியிருந்தேன். அப்போ வெங்கட் பிரபு சார் சொன்ன லைன் பிடிச்சிருந்தது. அதனால இந்தப் படத்தையே அவர் பேனர்ல பண்ண பிளான் பண்ணோம். அவர் படம் நடக்குதுனு சொன்னார். `மாநாடு' ட்ராப் ஆனதுக்கு உன் ஃபேன்ஸ் எல்லாரும் டென்ஷனாகி உன் வாய்ஸ்லேயே பேச ஆரம்பிச்சுட்டாங்க'னு சொன்னதுக்கு, `என் வாய்ஸ்ல பேசுறவங்க என் ஃபேன் இல்லை. எனக்காக வாய்ஸ் கொடுக்கிறவங்கதான் என் ஃபேன். உண்மையான ரசிகன் என்னைவிட்டுப் போகமாட்டான். அந்த ரசிகனுக்காக எப்போவும் நான் கூடவே இருப்பேன். அவங்களை சந்தோஷப்படுத்திக்கிட்டே இருப்பேன்'னு சொன்னார்.’’

அடுத்த கட்டுரைக்கு