Published:Updated:

“கமலின் ‘முக’வரி என் கையில்!”

கமல் மற்றும் விக்ரமுடன் சீமா தபஸ்
பிரீமியம் ஸ்டோரி
கமல் மற்றும் விக்ரமுடன் சீமா தபஸ்

சின்ன வயசுல இருந்தே பியூட்டி, மேக்கப் தொடர்பான விஷயங்கள் ரொம்பப் பிடிக்கும். ஏவியேஷன் துறையில வேலை பார்த்திட்டிருந்தேன்.

“கமலின் ‘முக’வரி என் கையில்!”

சின்ன வயசுல இருந்தே பியூட்டி, மேக்கப் தொடர்பான விஷயங்கள் ரொம்பப் பிடிக்கும். ஏவியேஷன் துறையில வேலை பார்த்திட்டிருந்தேன்.

Published:Updated:
கமல் மற்றும் விக்ரமுடன் சீமா தபஸ்
பிரீமியம் ஸ்டோரி
கமல் மற்றும் விக்ரமுடன் சீமா தபஸ்

ஒவ்வொரு படத்திலும் கேரக்டருக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்வதில் வல்லவர் கமல்ஹாசன். பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் ‘இந்தியன் 2’ மற்றும் ‘விக்ரம்’ என இரண்டு படங்களிலும் இருவேறு கெட்டப்புகளில் மிரட்டக் காத்திருக்கிறார். இந்த இரண்டு கெட்டப்பின் பின்னணியிலும், இன்னும் கமலின் அரிதார முகங்கள் பலவற்றின் பின்னணியிலும் இருப்பவர் சீமா தபஸ். திரையுலகில் வளர்ந்துவரும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்.

‘`சினிமா ஆணாதிக்கம் நிறைஞ்ச துறை, அங்கே பெண்களால தாக்குப்பிடிக்க முடியாதுன்னு சொல்றதையெல்லாம் நான் ஏத்துக்க மாட்டேன். திறமை இருக்குறவங்களுக்கு சினிமாவின் கதவுகள் திறந்தே இருக்குங்கிறதுக்கு நானே உதாரணம்’’ - பாசிட்டிவ் நோட்டுடன் பேசுபவரிடம் இறுதிவரை அதே வைப்ரேஷன்.

 “கமலின் ‘முக’வரி என் கையில்!”

‘`சின்ன வயசுல இருந்தே பியூட்டி, மேக்கப் தொடர்பான விஷயங்கள் ரொம்பப் பிடிக்கும். ஏவியேஷன் துறையில வேலை பார்த்திட்டிருந்தேன். ஒரு கட்டத்துல அது எனக்கான வேலையில்லைன்னு தோணவே, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக முடிவெடுத்தேன். ரஷ்யாவைச் சேர்ந்த கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு ஹோல்டரும் ஆஸ்கார், எம்மி அவார்டுகள் வாங்கினவருமான ஜார்ஜி கோட்கிட்ட ஹேர்ஸ்டைலிங் பயிற்சி எடுத்துக்கிட்டேன். லாஸ் ஏஞ்சல்ஸ்ல உள்ள ஹாலிவுட் ஸ்கூல் ஆஃப் மேக்கப்ல ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் புராஸ்தெடிக்ஸ் மேக்கப்ல பயிற்சி எடுத்துக்கிட்டேன். மாக்ஸிம், ஃபெமினா, வோக், பிலிம்பேர், கிரேஸியா, எல் உள்ளிட்ட பிரபல பத்திரிகைகளுக்கும் வேன் ஹூசைன், ஆலன் சோலி, ஐசிசி, லெவிஸ், சொனாட்டா உட்பட பெரிய பிராண்டுகளோடும் வொர்க் பண்ணியிருக்கேன். பெங்களூருல ஃப்ரீலான்ஸ் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டா வொர்க் பண்ணிட்டிருந்தேன். இன்னிக்கு மும்பை சினி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் இந்தியன் பிலிம் ஹேர் அண்ட் மேக்கப் யூனியன்ல நானும் ஓர் உறுப்பினர்’’ படபட பயோடேட்டா சொல்பவர், கடந்த ஐந்து வருடங்களாக கமலுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 “கமலின் ‘முக’வரி என் கையில்!”

‘`ஃப்ரீலான்ஸ் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டா வொர்க் பண்ணிட்டிருந்தபோது ஐபிஎல்-ல வொர்க் பண்ற வாய்ப்பு வந்தது. அப்போ ஷாருக் கான், ப்ரீத்தி ஜிந்தா மற்றும் சில கிரிக்கெட்டர்களை சந்திச்சேன். அதுதான் பாலிவுட்ல என் முதல் என்ட்ரி. அந்த ஒரு அனுபவமே என்னை மும்பையை நோக்கிப் போக வெச்சது. மேக்கப்ல எனக்கிருந்த கனவை நனவாக்க முழுநேர மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகும் முயற்சியோடு மும்பைக்குப் போனேன். பட புரமோஷன்கள், பிராண்டு புரமோஷன், வேர்ல்டு கப்னு நிறைய நிகழ்ச்சிகளுக்கு வொர்க் பண்ணிட்டிருந்தேன். ‘விஸ்வரூபம்’ பட புரமோஷன் சம்பந்தமா கமல் சாரை மீட் பண்ணினேன். அப்போ அவர் மேக்கப்ல எனக்கிருக்கும் ஆர்வத்தைப் பார்த்துட்டுப் பாராட்டினார். அப்பதான் அவர் தயாரிப்புல விக்ரம் நடிப்புல வெளிவந்த ‘கடாரம் கொண்டான்’ படத்துல மேக்கப் டிப்பார்ட்மென்ட் ஹெட்டா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதுதான் ஆரம்பம். அப்படியே ‘பிக்பாஸ்’ முதல் சீசன்ல கமல் சாருக்கு மேக்கப் பண்ற வாய்ப்பைக் கொடுத்தார். இப்போவரை பிக்பாஸின் எல்லா சீசன்கள்லயும் நான்தான் சாருக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்’’ பெருமை பகிர்கிறார் சீமா.

 “கமலின் ‘முக’வரி என் கையில்!”

சீமாவின் பேச்சில் முதலும் முடிவுமாக இருக்கிறார் கமல்.

‘`இதுவரை நான் எத்தனையோ பிரபலங்களோடு வொர்க் பண்ணியிருக்கேன். அவங்கள்ல கமல் சார் ரொம்பவே ஸ்பெஷல். தன் சக நடிகர்களையோ, டெக்னீஷியன்களையோ தொந்தரவு பண்ண விரும்பாதவர். என்கிட்ட நம்பி தன்னை முழுமையா ஒப்படைச்சிடுவார். அந்த நம்பிக்கையே பெஸ்ட்டைக் கொடுக்கணும்ங்கிற உத்வேகத்தை எனக்குக் கொடுக்கும். காலையில 9 மணிக்கு அவருக்கு ஹேர் செட் பண்ணிவிட்டேன்னா, ராத்திரி 9 மணி வரைக்கும் அது அப்படியே இருக்கும். மேக்கப்பையோ, ஹேர் ஸ்டைலையோ கொஞ்சம்கூட டிஸ்டர்ப் பண்ணாம குட்டித்தூக்கமும் போட்டு எழுந்திருவார். அவரால எப்படி அவ்வளவு பர்ஃபெக்‌ஷனாடு இருக்க முடியுதுங்கிறது மிகப் பெரிய ஆச்சர்யம்’’ சிலிர்ப்பவரின் அடுத்த எதிர்பார்ப்பு, ‘இந்தியன் 2’ மற்றும் ‘விக்ரம்.’

‘`ஒருநாள் விக்ரம் யூனிட்லேருந்து அழைப்பு வந்தது. எந்த ஐடியாவும் இல்லாம டைரக்டர் லோகேஷ் கனகராஜை சந்திச்சேன். படத்தைப் பத்திச் சுருக்கமா விவரிச்சார். படத்துல கமல் சாரோட லுக் எப்படியிருக்கணும்னு உடனடியா ஒரு ஐடியாவுக்கு வர வேண்டியிருந்தது. மறுபடியும் கமல்சார்கூட வொர்க் பண்ற பிரமிப்பு அகலாம படத்துல அவருடைய அந்த லுக்கை டிசைன் பண்ணினோம். டீஸர் பார்த்திருப்பீங்க... கமல் சார் எப்படி மிரட்டியிருக்கார்னு தெரிஞ்சிருக்கும். உங்களை மாதிரியே மெயின் பிக்சருக்கு நானும் வெயிட்டிங்’’ ஆர்வம் கூட்டுபவர், ‘இந்தியன் 2’விலும் கமல், காஜல் அகர்வால் மேக்கப்பில் மிகப்பெரிய சஸ்பென்ஸ் வைத்திருக்கிறாராம்.

 “கமலின் ‘முக’வரி என் கையில்!”

‘`மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டின் வேலை சாதாரணமானதில்லை. படத்தைப் பொறுத்தவரை கதைப்படி அந்த கேரக்டருக்கு என்ன தேவையோ அதுக்கேத்தபடியான லுக்கை, டைரக்டரின் எதிர்பார்ப்புக்கேத்தபடி பண்றதுதான் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டின் வேலை. இதுல ஸ்பெஷல் எஃபெக்ட்ஸும் புராஸ்தெட்டிக் மேக்கப்பும் வரும்போதுதான் சவாலா மாறும். உலகம் முழுக்க வேற வேற வானிலை நிலவுற சூழல்ல, இண்டோர், அவுட்டோர்னு வொர்க் பண்ணும்போது புராஸ்தெட்டிக் மேக்கப்பை சமாளிக்குறதுதான் பெரிய சவால்.

தினம் தினம் இப்படி சவால்களை சந்திச்சபடி சிறந்த இயக்குநர்களின் படங்கள்ல வொர்க் பண்ணணும். திறமைங்கிறது ஒருமுறை நிரூபிக்கிற விஷயமில்லை. தினம் தினம் நிரூபிச்சிட்டே இருக்கணும். தொடர்ந்து என்னை நிரூபிச்சிட்டே இருக்கிறது மட்டும்தான் இப்போதைய இலக்கு’’ பன்ச்சுடன் ‘பை’ சொல்கிறார் சீமா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism