Published:Updated:

``கற்பனைலகூட ஹீரோயின் அங்கதான் இருக்கணுமா?’’ விஜய்யின் `மாஸ்டர்' க்ரியேட்டிவிட்டி... கடுப்பான மாளவிகா!

மாளவிகா மோகனன்

பிரபலங்களின் சோஷியல் மீடியா ரவுண்ட்தான் இந்தக் கட்டுரை... #SocialMediaTalks

``கற்பனைலகூட ஹீரோயின் அங்கதான் இருக்கணுமா?’’ விஜய்யின் `மாஸ்டர்' க்ரியேட்டிவிட்டி... கடுப்பான மாளவிகா!

பிரபலங்களின் சோஷியல் மீடியா ரவுண்ட்தான் இந்தக் கட்டுரை... #SocialMediaTalks

Published:Updated:
மாளவிகா மோகனன்

இந்தியா முழுவதும் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (Personal Protective Equipment) அடங்கிய கிட் வழங்க இருப்பதாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை வித்யாபாலன். அதில், “கொரோனாவுக்கு எதிரான போரில் நம்மைக் காக்கும் மருத்துவப்பணியாளர்கள்கள் போர் வீரர்களைப் போன்றவர்கள். நம்மைக் காக்கும் போரில், அவர்களுக்குத் தேவையான உதவிகளை நாம் செய்ய வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோருக்கு, கொரோனாவுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலை என்னால் முடிந்த அளவுக்கு சரிசெய்ய தற்போது 1000 PPE 'கிட்'டுகளை வழங்குகிறேன். மேலும், 1000 கிட்டுகளை வழங்க நிதி திரட்ட உள்ளேன்” எனவும் தெரிவித்துள்ளார். கிட்டுகளை வாங்கத் தேவையான நிதி வழங்குபவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கும் வீடியோ அல்லது வித்யாபாலனுடன் வீடியோவில் உரையாட வாய்ப்பும் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனாவால் அறிவிக்கப்பட்ட லாக்டௌன் சூழலில், தனது அனுபவத்தை வீடியோவாக யூடியூபில் பகிர்ந்துள்ளார், விஜய் தேவரகொண்டா. மனரீதியாகவும், பணரீதியாகவும் இப்போது எதிர்கொள்ளும் சூழல்தான் எதிர்பாராதது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், இளைஞர்களுக்கான மேலாண்மைத் திறன் பயிற்சிக்காக உள்ள தனது அமைப்பு குறித்தும், கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவுவது குறித்தான தனது திட்டம் குறித்தும் பேசியுள்ளார் தேவரகொண்டா.

சமீபத்தில் OTT-யில் வெளியான ‘வரன் அவஷ்யமுண்டு’ திரைப் படத்தில், பாடி ஷேமிங் குறித்தான காட்சியில், பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படத்தை அவரது அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக சர்ச்சையில் சிக்கியது. இந்நிலையில், மீண்டும் அந்தப் படத்திற்கு சர்ச்சை எழுந்துள்ளது.

படத்தில் நடித்துள்ள நடிகர் சுரேஷ் கோபி, தான் வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் எனப் பெயர் சொல்லி அழைப்பதைப் போல காட்சிகள் இருக்கும். இது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை இழிவு படுத்துவது போல இருக்கிறது எனவும், இதற்கு படக்குழு மன்னிப்பு கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கண்டனக்குரல்கள் எழுந்தன. இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் வகையில், துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எந்தவிதமான உள்நோக்கத்துடனும் இந்த காட்சி எடுக்கப்படவில்லை. ’பட்டணப் பிரவேஷம்’ என்ற பிரபலமான பழைய மலையாளப் படத்தின் காட்சியே அது. வேறு யாரையும் குறிப்பிடும் உள்நோக்கத்துடன் இந்த காட்சி வைக்கப்படவில்லை. இந்தக் காட்சியால் காயம்பட்ட தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்’ என ட்வீட் செய்துள்ளார்.

கொரோனா குறித்த தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்புவதாகவும், அதனால் அவரது வாட்ஸ்அப் கணக்கை முடக்க வேண்டும் என 1000-க்கும் அதிகமான ஆன்லைன் பெட்டிஷன்கள், மூத்த நடிகரான அமிதாப் பச்சனுக்கு எதிராக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் #Uninstall Whatsapp என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் இன்று டிரெண்டிங்கில் இருந்தது. இவரைப்போலவே மஹிந்திரா குழுமத்தலைவரான ஆனந்த் மஹிந்திராவின் வாட்ஸ்அப் கணக்கும் முடக்க ஆன்லைன் பெட்டிஷன் மூலம் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதுபோலவே, கடந்த மாதத்தில் முதல் ஊரங்கு அறிவிக்கப்பட்டபோதும், கைதட்டுதல், அமாவாசை உள்ளிட்டவற்றை கொரோனா சூழலோடு மதநம்பிக்கைகளைத் தவறாக ஒப்பிட்டு ட்வீட் செய்ததற்காக, அமிதாப்பச்சன் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட, பிறகு அந்த ட்வீட்டை டெலிட் செய்தார் அமிதாப்.

‘மாஸ்டர்’ படக்குழு, இந்த குவாரன்டீன் நாள்களில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என ரசிகர் ஒருவர் கற்பனை ஓவியம் ஒன்றை வரைந்து, ‘மாஸ்டர்’ படக்குழுவை ட்விட்டரில் டேக் செய்திருந்தார். அதில் விஜய், ஹெட்ஃபோனில் பாடல் கேட்டபடி இருக்க, அனிருத் பியோனா வாசிக்க, இப்படி ஒவ்வொருவரும் அவர்களுக்கான பிடித்த வேலையைச் செய்வதுபோல வரையப்பட்டிருந்தது.

மாளவிகா ட்வீட்
மாளவிகா ட்வீட்

அதில், மாளவிகா மோகனன் சமையல் செய்வது போல இருக்க, ‘கற்பனையான ஒரு சூழலில்கூட பெண்கள் சமையலறையில்தான் இருக்க வேண்டுமா? பாலினப் பாகுபாடு எப்போதுதான் ஒழியுமோ?’ என ட்வீட் செய்திருந்தார், மாளவிகா. ட்வீட் செய்த சிறிது நேரத்திலேயே அவர் அதை டெலிட் செய்துவிட, அவரது ட்வீட் ஸ்கிரீன்ஷாட் இப்போது வைரலாகிவருகிறது. வழக்கம் போலவே, பலரும் இதற்கு ட்ரோல் செய்ய, அதே நேரத்தில் ஆதரவும் இவரது ட்வீட்டிற்கு பெருகிவருகிறது. ஆனால், நியாயமான கேள்விதானே... ஏன் டெலீட் செய்தார் மாளவிகா?! 'மாஸ்டர்' டீமில் இருந்து ரசிகர்களை ஹர்ட் செய்ய வேண்டாம் என்று போன கோரிக்கைதான் காரணமாம்.