Published:Updated:

`கல்லீரல் பாதிப்பு; உடல் நலக்குறைவு’ - மல்லுவுட்டை உலுக்கிய நடிகர் அனில் முரளியின் மரணம்!

அனில் முரளி
அனில் முரளி

பிரபல மலையாள நடிகர் அனில் முரளி, உடல் நலக்குறைவு காரணமாகத் தன் 56 வது வயதில் உயிரிழந்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் பிறந்தவர், 56 வயதான பிரபல மலையாள நடிகர் அனில் முரளி. 1993-ம் ஆண்டு `கன்னியாகுமரியில் ஒரு கவிதா’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகர் முரளி. இவர், தன் மனைவி சுமா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கேரளாவில் வசித்து வந்துள்ளார். சமீபகாலமாகக் கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட இவர் அதற்காகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நடிகர் அனில் முரளி
நடிகர் அனில் முரளி

இந்நிலையில், திடீர் உடல்நல குறைவால் கொச்சியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு மலையாளம், தமிழ், தெலுங்கு என மொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்து வருகிறது. மறைந்த நடிகர் அனில் முரளி தொலைக்காட்சி தொடர்கள் மூலம் திரையுலகத்துக்கு அறிமுகமானவர். அதற்குப் பிறகு வெள்ளித் திரையில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் அதிக கவனம் பெற்றவர்.

`சினிமா கோடிகளில் புரளும் தொழில்தான்; ஆனால்..!’ - அனுபவம் பகிரும் தஞ்சை `போஸ்டர் காடி’

தமிழில் வெளியான நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, 6 மெழுகுவர்த்திகள், தொண்டன், மிஸ்டர் லோக்கல், ஜீவி, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களில் இவர் நடித்துள்ளார். மேலும், தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் அனில் முரளி. இவரின் மறைவுக்கு மலையாள முன்னணி நடிகர்களான மம்மூட்டி, பிரித்விராஜ், நிவின் பாலி, துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் போன்ற பலரும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அனில் முரளி
நடிகர் அனில் முரளி

கொச்சியிலிருந்து இவரது உடல் திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ``அனில் முரளியின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் வில்லம் கதாபாத்திரங்களில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இவரது கதாபாத்திரங்கள் எப்போதும் மறக்க முடியாதவை” எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு