Published:Updated:

``சீக்கிரமே என்னோட தமிழ் என்ட்ரி இருக்கும்!" - `Kappela' அன்னா பென் சிறப்புப் பேட்டி

அன்னா பென்
அன்னா பென்

அப்பா நிறைய தமிழ்ப்படங்கள் பார்ப்பார். அவரோடு சேர்ந்து நானும் பார்ப்பேன். இந்த இயக்குநர், இந்த நடிகர்னு இல்லாமல் நல்ல டீமோடு வொர்க் பண்ணணும்னு ஆசை இருக்கு: அன்னா பென்

'`சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?''

'`என் அப்பா பென்னி திரைக்கதை எழுத்தாளர். நான் ஃபேஷன் டிசைனிங் படிச்சிட்டு பெங்களூருல ஒரு வருஷம் வேலை பார்த்தேன். லீவுக்குக் கேரளா வந்தப்போ, 'கும்பளாங்கி நைட்ஸ்' படத்துக்கு ஆடிஷன் இருக்குன்னு கேள்விப்பட்டு சும்மா ஒரு ஆசைக்காக போட்டோஸ் அனுப்பினேன்.

காலேஜ் டைம்லயே இப்படி அனுப்பி செலக்ட் ஆகாமப் போனது வேற கதை. ஆனா இவங்க என்னை ஆடிஷனுக்கு வரச் சொன்னாங்க. மூணு, நாலு முறை ஆடிஷன் வெச்சு, ஃபைனலா என்னை செலக்ட் பண்ணினாங்க. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி நாள் வரைக்கும் கடைசி நேரத்தில் ஆளை மாத்திடுவாங்களோன்னு நினைச்சிட்டே இருந்தேன். ஆனா மாத்தலை. நடிச்சிட்டேன்.''

'`சமீபத்தில் வெளியான 'கப்பேலா' படமும் உங்களுக்குப் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்திருக்கே?''

'` 'ஹெலன்' படத்துக்கு அப்புறம் நிறைய ஸ்கிரிப்ட் கேட்டேன்; படிச்சேன். `கப்பேலா' ஸ்கிரிப்ட்தான் ப்ராமிஸ்ஸிங்கா இருந்துச்சு. நான் எந்தக் கேரக்டர் பண்ணினாலும் அது நேச்சுரலா இருக்கணும்கிறது என்னோட எண்ணம். அந்தவகையில், 'கப்பேலா' எனக்கு ரொம்பவே மனநிறைவைக் கொடுத்துச்சு.''

அன்னா பென்
அன்னா பென்

'`தமிழ் சினிமாவை ஃபாலோ பண்ணுறீங்களா, யார் படத்தில் நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க?''

``அப்பா நிறைய தமிழ்ப்படங்கள் பார்ப்பார். அவரோடு சேர்ந்து நானும் பார்ப்பேன். இந்த இயக்குநர், இந்த நடிகர்னு இல்லாமல் நல்ல டீமோடு வொர்க் பண்ணணும்னு ஆசை இருக்கு. தமிழ்ப் படங்களில் நடிக்கிறதுக்காக சில பேர் கேட்டாங்க. ஆனால், எதுவும் உறுதியாகலை. சீக்கிரமே என்னோட தமிழ் என்ட்ரி இருக்கும்.''

- விடிவி ஜெஸ்ஸி பழைய கதை. இன்று 'கப்பேலா' ஜெஸ்ஸிக்காகச் சில்லறைகளைச் சிதறவிடுகிறது சோஷியல் மீடியா.

'கும்பளாங்கி நைட்ஸ்', 'ஹெலன்' படங்களைத் தொடர்ந்து 'கப்பேலா'வும் ஹாட்ரிக் ஹிட். ஓடிடி புண்ணி யத்தில் தமிழ் ரசிகர்களும் இந்த மலையாளப் படங்களைப் பார்த்துவிட, அன்னா பென் புகழ் கேரள எல்லை தாண்டித் தமிழ்நாட்டிலும் பரவ ஆரம்பித்து விட்டது. யார் இந்த அன்னா பென்?

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

"மைனஸ் 10 டிகிரி குளிரில் நடிச்சேன்!"

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு