சினிமா
தொடர்கள்
Published:Updated:

மின்னல் முரளி 2 சர்ப்ரைஸாக வருவான்!

இயக்குநர் பசில் ஜோசப்
பிரீமியம் ஸ்டோரி
News
இயக்குநர் பசில் ஜோசப்

நம்பும்படியான காஸ்ட்யூமை தத்ரூபமாக கிராஃபிக்ஸ் டிசைனர் பவி சங்கரும், மும்பையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் தீபாலி நூரும் உருவாக்கினார்கள்.

மலையாள சினிமாவின் இளம் இயக்குநர் பசில் ஜோசப். ‘மின்னல் முரளி' என்ற மலையாள சினிமாவின் சூப்பர் ஹீரோ படத்தை இயக்கியவர். நடிகராகவும் ஜொலிக்கும் நட்சத்திரம். சமீபத்தில் ‘பால்து ஜான்வர்' படத்தில் கதைநாயகனாக ஒரு கால்நடை ஆய்வாளராகவே நடிப்பில் மிளிர்கிறார். கேரள மக்களின் பிரியத்துக்குரிய பசில் ஜோசப்புடன் ஒரு சிட்-சாட்...

‘‘மலையாளத்தில் பிஸியான நம்பிக்கைக்குரிய இளம் தலைமுறை இயக்குநர் நீங்கள். உங்களுக்குள் இருந்த நடிகரை எப்போது அடையாளம் கண்டீர்கள்?’’

‘‘நடிப்பு என்பது நண்பர்கள் என்மீது வைத்த நம்பிக்கை. சின்னச் சின்னதாய் காமெடி பாத்திரங்களில் நடிக்க வைத்து மெல்ல எனக்குள் ஒரு நடிகனை உருவாக்கியது என் இயக்குநர்கள்தான். ‘ஜோஜி' படத்தில் வித்தியாசமான பாதிரி ரோலில் நடித்தபிறகு எனக்குள் இருக்கும் நடிகனைப் பலர் கண்டுகொண்டார்கள். ‘ஜோஜி’யை உருவாக்கிய திலீஷ் போத்தன், ஷியாம் புஷ்கரனுக்கு நன்றி. ‘ஜோஜி’க்குப் பிறகு சவாலான பாத்திரங்கள் வர ஆரம்பித்துவிட்டன. இயக்கத்தைவிட நடிப்பு எளிதுதான். இயக்குநரின் கதையை உள்வாங்கிக்கொண்டு நீங்கள் நடிக்கும் பாத்திரமாகப் பிரதிபலித்தால் போதும். ஆனால் என் சாய்ஸ் எப்போதும் இயக்கம்தான். இதுவரை மூன்று படங்களை இயக்கியிருக்கிறேன். நடுவில் நடிக்கக் கேட்டுவந்த வாய்ப்புகளை மறுக்காமல் 24 படங்களில் நடித்துவிட்டேன். ‘ஜான்.இ.மன்' போன்ற படங்களில் பிரதான கேரக்டரில் நடித்து, அந்தப் படங்கள் பாக்ஸ் ஆபீஸிலும் இடம் பிடித்தது என் நடிப்புக் கரியரை விரிவாக்கியிருக்கிறது. நான் சிரிக்காமல் ஆடியன்ஸைச் சிரிக்க வைக்கும் பாத்திரத்தில் நடித்த அனுபவம் அலாதியானது. ‘பால்து ஜான்வ’ரும் அப்படித்தான். எனக்கு வரும் சிக்கலைப் பார்த்து உங்களுக்குச் சிரிப்பு வருகிறது. இதுபோன்ற சவாலான பாத்திரங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்! நிறைய படங்கள் இயக்குவதைவிட நல்ல தரமான படங்களை இயக்குவதையே விரும்புகிறேன்!’’

மின்னல் முரளி 2 சர்ப்ரைஸாக வருவான்!

‘‘சமீபத்திய ‘பால்து ஜான்வ’ரில் நகரத்திலிருந்து கிராமத்துக்குக் கால்நடை ஆய்வாளர் வேலைக்கு விருப்பமே இல்லாமல் வரும் நீங்கள், கொஞ்சம் கொஞ்சமாகக் கால்நடைகள்மீது ஈடுபாடு வருபவராக நடித்திருக்கிறீர்கள். நிஜத்தில் கால்நடை விஷயத்தில் நீங்கள் எப்படி?’’

‘‘நாய், பூனைகளிடமிருந்தே ஒதுங்கியிருக்கும் ஆள் நான். இரண்டுமுறை நாய்கள் என்னைத் துரத்தியிருக்கின்றன. படம் முழுவதும் விலங்குகளோடு நடிக்கும் சூழல். படத்தின் ஆரம்ப நாள்களிலே எனக்கு ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயோடுதான் காட்சிகளை ஷூட் செய்தார்கள். அது என் கண்களை நேருக்கு நேராகப் பார்க்க... ஆர்வத்தில் நாயின் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். டாக் இன்ஸ்ட்ரக்டர், ‘அப்படி அதைப் பார்க்காதீங்க... உங்ககிட்ட ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தால் கடிச்சுவெச்சிடும்' என்றார். அதன்பிறகு டேக் ஓகே ஆகும்வரை கவனமாக நடித்தேன். படம் ஆரம்பிக்கும்போது விலங்குகள்மீது பெரிய ஈடுபாடு இல்லை. கதையைப் போலவே படம் முடியும்போது நிஜமாகவே விலங்குகளை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஸ்கிரிப்ட்டின் வெற்றி அது! கதையை எழுதிய அனீஸ் அஞ்சலி - வினய் தாமஸுக்கும், இயக்குநர் சங்கீத்துக்கும் நன்றி.’’

மின்னல் முரளி 2 சர்ப்ரைஸாக வருவான்!

‘‘இந்திய சினிமாச் சூழலில் மின்னல் முரளியை சாதித்தது எப்படி?''

‘‘1984-ல் வந்த ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ எனக்கு ரொம்பப் பிடிக்கும். சூப்பர் ஹீரோ பவர் ரொம்பவே இயல்பாக வந்ததாக இருக்க வேண்டும் என ஸ்கிரிப்ட் லெவலிலேயே முடிவு செய்தோம். அதனால்தான் குறுக்கன்மூலா என்ற கிராமத்தில் இருக்கும் ஜெய்சன் என்ற டெய்லருக்கு மின்னல் தாக்கி அப்படியொரு சக்தி கிடைத்தது என எழுதியிருந்தோம். நிச்சயம் ஓ.டி.டி-யின் உபாயத்தால் நம் மக்கள் மார்வல் - டிசி பாத்திரங்களோடு ஒப்பீடு செய்வார்கள் என்பதால் ஒரு வருடம் நேட்டிவிட்டியோடு திரைக்கதை எழுதினோம். சூப்பர் ஹீரோ உடுப்பில் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதால் டொவினோ தாமஸைக் கொண்டு வந்தோம். ஸ்கின் டைட் காஸ்ட்யூமில் செம ஃபிட்டாய் இருந்தார் டொவினோ.

மின்னல் முரளி 2 சர்ப்ரைஸாக வருவான்!
மின்னல் முரளி 2 சர்ப்ரைஸாக வருவான்!
மின்னல் முரளி 2 சர்ப்ரைஸாக வருவான்!

நம்பும்படியான காஸ்ட்யூமை தத்ரூபமாக கிராஃபிக்ஸ் டிசைனர் பவி சங்கரும், மும்பையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் தீபாலி நூரும் உருவாக்கினார்கள். எல்லாம் பக்காவாய்ப் போய்க்கொண்டிருந்தபோது கொரோனா வந்து எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. ‘இவ்வளவு செலவு செய்து எடுக்கிறோம். இனி ஆடியன்ஸை தியேட்டரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா?’ என்ற சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. கொரோனா உச்சத்தில் இருந்ததால் செட் போட்டு எடுத்த இடத்தில் படமாக்க முடியவில்லை. ஷூட்டிங்கைக் கிட்டத்தட்ட இதே லொக்கேஷன் சாயல் கொண்ட கர்நாடகாவின் ஹாசனுக்கு மாற்றினோம். அங்கும் ஏக கெடுபிடிகள். போதாக்குறைக்கு யூனிட்டில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று வந்தது. காட்சிகளைப் போராடி எடுத்துக்கொண்டிருந்தபோது அப்புறம் எனக்கு, ஹீரோ, ஹீரோயின் எல்லோருக்கும் கொரோனா பாசிட்டிவ். பேக்கப் பண்ணி வந்து குணமாகி மீண்டும் லொக்கேஷன் போவதற்குள் நடிகர்களில் பலர் தோற்றத்தில் ஒல்லியாகவும் சிலர் குண்டாகவும் மாறிப்போயிருந்தார்கள். பல் விழுந்த குழந்தைகள்கூட பல்முளைத்துப் பெரியவர்களாக மாறியிருந்தார்கள். 2019-ல் முடிய வேண்டிய படம் 2020 ஜூலையில் முடிந்தது. ஆனால், அடுத்த கவலை தியேட்டர் ரிலீஸ் சாத்தியமா என்பதுதான். தியேட்டர் கொண்டாட்டத்துக்கான சினிமாவை கனத்த இதயத்துடன் நெட்ப்ளிக்ஸில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்தபோது வருத்தப்பட்டேன். ஆனால், ரிலீஸாகி பலமொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. மூன்று வருடங்கள் எமோஷனலாக ஒட்டுமொத்த டீமும் உழைத்த சினிமா இது! என் உறவினர்கள் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸுக்காக அவர்களின் வீடுகளில் பெரிய ஸ்க்ரீன் டி.வி வாங்கி நல்ல சவுண்ட் சிஸ்டத்தோடு எனக்காகப் பார்த்தார்கள்!’’

மின்னல் முரளி 2 சர்ப்ரைஸாக வருவான்!
மின்னல் முரளி 2 சர்ப்ரைஸாக வருவான்!
மின்னல் முரளி 2 சர்ப்ரைஸாக வருவான்!

‘‘சினிமாவுக்குள் எப்படி வந்தீர்கள்?’’

‘‘நான் பிறந்தது வயநாடு. மிடில் கிளாஸ் பையன்தான். திருவனந்தபுரத்தில் இன்ஜினீயரிங் படித்தேன். சின்னவயதிலிருந்தே சினிமாமீது தீராத காதல் உண்டு. இன்ஜினீயரிங் படித்தபோதே குறும்படங்களில் நடிப்பது, இயக்குவது என பிஸியாகவே இருந்தேன். இன்ஃபோசிஸில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்தேன். சினிமா ஆர்வத்தோடு வினீத் னிவாசன் சாரிடம் சேர்ந்து, ‘திரா' படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்தேன். அவர் செய்த அறிமுகத்தால், `குஞ்சிராமாயணம்' படத்தின் மூலம் இயக்குநர் ஆனேன். டொவினோ தாமஸை வைத்து ‘கோதா' என் இரண்டாவது படம். இரண்டுமே நல்ல ஹிட். இப்போதும் நாங்கள் நல்ல நண்பர்கள். டொவினோவின் நட்புதான் சூப்பர் ஹீரோ படத்திற்கான விதை. ஜாலியாக மின்னல் முரளி பிறந்தான்.’’

‘‘ ‘மின்னல் முரளி 2’ திட்டம் வைத்திருக்கிறீர்களா?’’

‘‘மின்னலைப்போலத் தோன்றிய யோசனையில் விளைந்த படம். குளோபலாக ரீச் ஆகியிருக்கிறது. அதனால் 2-ம் பாகத்தில் பெரிய லெவலில் சர்ப்ரைஸாக வருவான்!’’