Published:Updated:

“ஜாலியானவர் ஷாருக்கான்!” - மணிரத்னம்

Maniratnam's Exclusive Interview
பிரீமியம் ஸ்டோரி
Maniratnam's Exclusive Interview

1998ல் ‘உயிரே’ (இந்தியில் ‘தில்ஸே’) படத்தின்போது மணிரத்னம் விகடனுக்கு அளித்த சுவாரஸ்யப் பேட்டி உங்களுக்காக...

“ஜாலியானவர் ஷாருக்கான்!” - மணிரத்னம்

1998ல் ‘உயிரே’ (இந்தியில் ‘தில்ஸே’) படத்தின்போது மணிரத்னம் விகடனுக்கு அளித்த சுவாரஸ்யப் பேட்டி உங்களுக்காக...

Published:Updated:
Maniratnam's Exclusive Interview
பிரீமியம் ஸ்டோரி
Maniratnam's Exclusive Interview

‘உயிரே’ (இந்தியில் ‘தில்ஸே’) படம் ஃபினிஷிங் டச்சஸ் நடந்துகொண்டிருந்தது.

மும்மை கிளம்பவேண்டிய பரபரப்பு... ரீ.ரிக்கார்டிங், டப்பிங் என்று ஒரு பக்கம் வேலைகள் விறுவிறுவென நடக்க... மணிரத்னம் ரிலாக்ஸ்டாக இருந்தார்! ஆனால், படக்கதை பற்றி மூச்...!

படம் பற்றிப் பேசவில்லையென்றாலும் படத்தின் ஹைலைட்டாக, காதலை ஏழு நிலைகளாகப் பிரித்து உருகி உருகி எழுதிய பாடல் பற்றியும் அது படமெடுக்கப்பட்ட விதத்தையும் பகிர்ந்துகொண்டார் மணிரத்னம். படங்கள் அங்கே.. பாடல் இங்கே!)

Maniratnam's Exclusive Interview
Maniratnam's Exclusive Interview

“‘உயிரே’ படம் எப்படி...? கொஞ்சம் லவ், கொஞ்சம் டெர்ரரிஸம், கொஞ்சம் தேசபக்தினு இன்னொரு படமா...?”

“கிட்டத்தட்ட! ‘ரோஜா’, ‘பம்பாய்’க்கு அப்புறம் இப்போ டெர்ரரிஸம் பார்ட் - III மாதிரிதான் ‘உயிரே’... ட்ரையாலஜியின் கடைசிப் படம்னு சொல்லாம்!”

“டெர்ரரிஸம் உங்கள் மனதைவிட்டு அகல மாட்டேங்குதுங்கறீங்களா-..?”

“இப்போ இந்தியாவின் சூழலை எடுத்துப் பார்த்தீங்கன்னா, டெர்ரரிஸம்ங்கறது ரொம்பப் பயமுறுத்தற விஷயம். நினைச்சா குண்டு போட்டுட்டுப் போயிடுறாங்க. ஆனா, ‘உயிரே’ல ஒரு காதல் பின்னணியோட ரொம்ப பர்சனல் பார்வையோட தான் அதை அணுகியிருக்கேன். வெட் அண்ட் ஸீ!”

“இந்தப் படத்தலு ஷாரூக் எப்படி...?”

“வாவ்.... கிரேட் ஆர்ட்டிஸ்ட்! ரொம்பப் புதுசான, செம ஜாலியான மனிதர் ஷாரூக்கான். அவரோட சுறுசுறுப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெரி இன்டலிஜெண்ட்! ஒரு விஷயத்தை டெவலப் பண்றதுல ஷாரூக் ரொம்ப ஷார்ப். ‘உயிரே’ல அந்த காரெக்டருக்கு அவர் உயிர் கொடுத்திருக்கிற விதம்... படம் பார்த்துட்டுச் சொல்லுங்களேன்..”

“ஆமா... ஷூட்டிங் ஸ்பாட்ல நீங்க எப்படி...? பாரதிராஜா, பாலசந்தர் மாதிரி ‘இதுதான் வேணும்’னு நடிச்சே காட்டுவீங்களா... இல்ல...”

“It depends... சில நேரம் இதுதான் ஸீன்னு சொல்லிட்டு, டயலாக்ஸ் மட்டும் கொடுத்துட்டு வேடிக்கை பார்ப்பேன். சில நேரம் அந்த மூடுக்கு ஆர்ட்டிஸ்ட் வரணும்னு, அது தொடர்பா பொதுவா பேசிட்டிருப்பேன். ரொம்ப அபூர்வமாதான் நானே நடிச்சுக் காட்டற துண்டு. ஆனா, விஷயத்தைச் சொல்லிட்டு அதை அவங்க பெர்ஃபார்ம் பண்றதுல அங்கே, இங்கேனு கொஞ்சம் ஷார்ப் பண்ணித் தேவையானதை எடுத்துக்கறதுதான் என்கிட்டே இருக்கு! ஒரு நடிகர் ரொம்ப க்ரியேட்டிவ் ஆளா இருக்கணும். சும்மா கையைக் காலை ஆட்டிட்டுப் போற வேலையைப் பண்ண ஒரு ரோபாட் போதும். ஒரு ரோலுக்கு லைஃப் அது கிக்கும்...”

“போஸ்டர் டிசைன்ஸ் வரைக்கும் நீங்களே உட்கார்ந்து முடவு கட்டறீங்களே... இவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறதா...?”

“இதுக்கு ரெண்டு பதில் சொல்லலாம். ஒரு டைரக்டருக்குனு தனியா ஒரு வேலைனு இல்லை. எதையும் செய்யணும். அதே சமயம், எல்லா வேலையும் செய்ய நல்ல ஆளுங்களும் இருக்காங்க. இருந்தாலும் நான் தொட்டாதான் வேலையில் கம்ப்ளீட்னெஸ் கிடைக்கிறது!”

“ஒரு படத்தை நேஷனல் லெவல்ல கொண்டுபோறப்போ, அதுல சிரமம் இருக்காததோ...?”

“அது எடுத்துக்கற விஷயத்தைப் பொறுத்தது. ‘ரோஜா’ பார்த்தீங்கன்னா, காஷ்மீர் தீவிரவாதம் பற்றித்தான் எடுத்தோம். ஆனா, அதோட சப்ஜெக்ட்ல இருந்த சீரியஸ்னெஸ் நம்ம எல்லோராலும் அடையாளப்படுத்திக்கிட முடிஞ்ச விஷயம்... அதனால, அது தமிழா.... தெலுங்க... இந்தியானு பிரச்னை இருக்கறதில்லை. ‘உயிரே’வும் அப்படித்தான்.... மாநில எல்லைகளைக் கடந்த சப்ஜெக்ட் அது!”

“மும்பை போய் இந்தி கத்துக்கிட்டீங்களா...?”

“சுட்டுப் போட்டாக்கூட வராது. என் படத்தோட டயலாக்ஸ் மட்டும்தான் தெரியும்!” 

“அடுத்து என்ன படம் பண்ணப்போறீங்க...?”

“நலாஞ்சு விஷயம் மைண்ட்ல இருக்கு, மெள்ள ஒரு ரவுண்ட் யோசிக்க ஆரம்பிக்கணும். எது ‘க்ளிக்’காகும்னு இன்னும் எனக்கே தெரியலை.

- நமது சிறப்பு நிருபர்

(12.07.1998 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism