Election bannerElection banner
Published:Updated:

`பொன்னியின் செல்வன்’ 2021 ரிலீஸ்... மணிரத்னத்தின் பிளான் என்ன?

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

கொரோனா பரவல் காரணமாக ஆட்களின் எண்ணிக்கையில் சில வரைமுறைகள் இருந்ததால் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படாமலேயே இருந்தது.

’பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்க வேண்டும் என்கிற கனவை, இயக்குநர் மணிரத்னம் பெரிய எதிர்பார்ப்போடு ஆரம்பித்தார். விக்ரம், ’ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிகர்கள் பட்டாளமும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் என பக்காவான டெக்னிக்கல் டீமோடும் ஆரம்பிக்கப்பட்ட படம், தாய்லாந்தில் முதல் ஷெட்யூல் முடிவடைந்த நிலையில் கொரோனா அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.
inbox
inbox
inbox

’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பதற்காக தேதி கொடுத்திருந்த நடிகர்கள் எல்லாரும் அந்தந்த கதாபாத்திரத்திற்காக நீளமாக தலைமுடியை வளர்த்துவிட்டு, இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டிருந்தனர். பெரிய டீமின் உதவியோடுதான், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பை நடத்த முடியும் என்பதால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்காமலேயே இருந்தது.

தற்போது சூழல் மெல்ல சரியாகி வருவதால் பெரிய படங்களின் படப்பிடிப்பையும் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில், ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பும் வருகிற 6-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கயிருக்கிறது.

மணிரத்னம்
மணிரத்னம்

ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஆரம்பிக்கவுள்ள படப்பிடிப்பு, இடைவெளியே இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேல் நடக்கவிருக்கிறது. இந்த ஷெட்யூலில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் ஆகியோர் கலந்துக்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களாக எடுக்கப்படவிருக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தை, இந்த வருடத்திற்குள் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாராம் மணிரதனம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு