பப்ளி பியூட்டி மஞ்சிமா மோகன். ‘துக்ளக் தர்பார்’, ‘FIR’, ‘களத்தில் சந்திப்போம்’ என ஹாட்ரிக் படங்களோடு ரிலீஸுக்குக் காத்திருக்கிறார் மஞ்சிமா. இ-பாஸ் கிடைக்காததால் கேரளாவுக்குப் போகமுடியாமல் சென்னையிலேயே தங்கிவிட்ட மஞ்சிமாவிடம் பேசினேன்.

‘` `துக்ளக் தர்பார்’ படத்தில் விஜய்சேதுபதியின் தங்கையாக நடிக்கிறீர்களாமே?’’

“எனக்கு, தங்கச்சி கேரக்டர்னு சொன்னதும் ஒரே ஷாக். ‘எப்படி என்னத் தங்கச்சி ரோலுக்கு நடிக்கக் கூப்பிடலாம்?’ங்கிற மனநிலையிலதான் இருந்தேன். என் மேனேஜர்தான் ‘ஒருமுறை கதை கேளுங்க. அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்’னு சொன்னார். கதை கேட்டேன். அடுத்த நிமிஷமே ஓகே சொல்லிட்டேன். ஏன்னா, அது வழக்கமான தங்கச்சி ரோல் கிடையாது. நடிக்கிறதுக்கு நிறைய ஸ்கோப் இருக்கிற கேரக்டர். கொஞ்சம் கஷ்டமான ரோலும்கூட. டயலாக் பேசி நடிக்கிறது ஈஸி. ஆனா, டயலாக் குறைவா இருக்கும்போது முகபாவனைகளிலும், உடல் மொழியிலும் மட்டுமே நடிக்கிறது கஷ்டம். அப்படியொரு சவாலான கேரக்டர் இது.”

‘`விஷ்ணு விஷாலுடன் ‘FIR’ படத்துல என்ன ரோல்?’’

“இந்தப் படத்துல வழக்கறிஞரா நடிக்கிறேன். இந்தப் பட இயக்குநர் மனு ஆனந்த் எனக்கு நல்ல நண்பர். ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துல இவர் கெளதம் மேனனோட அசோஸியேட் டைரக்டர். அப்போவே என்கிட்ட அவர், ‘நான் எப்போ படமெடுத்தாலும் நீங்கதான் நடிக்கணும்’னு சொல்லுவார். ‘இது மாதிரி நிறைய பேர் சும்மா பேச்சுக்குச் சொல்லுவாங்க. இவரும் அப்படித்தான் சொல்றார்’னு நினைச்சேன். ஆனா, கதையை எழுதி முடிச்சவுடன் என்கிட்ட சொல்லி எப்படியிருக்குன்னு கேட்டார். இதுல நான் நடிக்கணும்னு அவரும் சொல்லலை; நானும் கேட்கலை. அவர் முதல் படத்துக்கான கதையை ரெடி பண்ணிட்டார்னு எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு வாரம் கழிச்சு, எனக்கு போன் பண்ணி அந்த லாயர் கேரக்டர் நீங்கதான் பண்ணணும்னு சொன்னார். ரொம்பத் துணிச்சலான கேரக்டர்.”

‘` ‘களத்தில் சந்திப்போம்’ படத்துல ஜீவா, அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர்... இவங்ககூட நடிச்ச அனுபவம் சொல்லுங்க”

“ஒவ்வொரு நாளும் செம ஜாலியா இருந்தது. ஜீவா எல்லோரையும் கலாய்ச்சிட்டு, ப்ராங்க் பண்ணிட்டு இருப்பார். அருள்நிதி ரொம்ப கூல். அந்த ஷூட்டிங் ஸ்பாட் சீரியஸாவே இருக்காது. நமக்கு ஏதாவது சீரியஸான சீன் இருந்தா ரெண்டு நாளுக்கு முன்னாடியே அதுக்குத் தயாராக ஆரம்பிச்சுடணும். இல்லைன்னா, நடிக்கும்போது ஏதாவது காமெடி பண்ணிட்டே இருப்பாங்க. ப்ரியாவுக்கும் எனக்கும் ஒரு சில நாள்தான் காம்பினேஷன் ஷூட் இருந்தது.”

‘`கேரளாவில் பிரபல ஒளிப்பதிவாளர் உங்க அப்பா மோகன். அவரோடு சேர்ந்து நீங்க ஒரு படம் இயக்கப்போறதா ஒரு பேச்சிருக்கே?’’

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் அப்பா எழுதின கதை அது. அந்தக் கதையை என்கிட்ட சொல்லிட்டு ‘இன்னும் அதுக்கு க்ளைமாக்ஸ் கிடைக்கலை. உனக்கு ஏதாவது தோணுச்சுன்னா சொல்லு’ன்னு சொல்லி யிருக்கார். இன்னும் அதுக்கான சரியான க்ளைமாக்ஸை யோசிச்சிட்டு இருக்கேன். கிடைச்சவுடன் அவர் அதை இயக்கணும்னு நான் ஆசைப்படுறேன். அப்படி அவர் பண்ணலைன்னா நான் அந்தக் கதையை எடுத்து இயக்குவேன்.

நான் ஏற்கெனவே ‘ஒரு வடக்கன் செல்ஃபி’, ‘அச்சம் என்பது மடமையடா’ இந்த ரெண்டு படத்துலயும் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை செஞ்சிருக்கேன். ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ என்னுடைய முதல் படம். சின்ன வயசுல நடிச்சதுக்குப் பிறகு, ரொம்ப வருஷம் கழிச்சு நடிக்கிறதனால, எனக்கு ஒரு மாதிரி இருந்தது. அதனால, செட் எல்லாம் பழகட்டும்னு என்னை அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பாருங்கன்னு சொன்னாங்க. அப்படி 10 நாள் அசிஸ்டென்டா வேலை செஞ்ச பிறகுதான், எனக்கான முதல் ஷாட்டே எடுத்தாங்க.”