Published:Updated:

"என்னது, என் யூடியூப் சேனல் வருமானம் மூணு லட்ச ரூபாயா?!"- மனோபாலாவுடன் ஒரு ஜாலி கேலி மீட்!

மனோபாலா
மனோபாலா

இப்போதைய தலைமுறையினருக்கு அவரை ஒரு காமெடி பீஸாகத்தான் தெரியும். ஆனால், ஸ்க்ரிப்ட் எழுதுவதில் அவர் மாஸ்டர் பீஸ்!

ஆனந்த விகடன் காணொளி நேயர்களுக்கு இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செம ஃபன் ஃப்ரைடே தான்.

Out of Topic with Saran & Cibi என்ற டாபிக்கில் வாரம் ஒரு பிரபலம் ஜாலிகேலி கேள்விகளும் பதில்களுமாக சந்திக்கவிருக்கிறார்கள். இன்று வெளியாகியிருக்கும் அவுட் ஆஃப் டாபிக்கில் மனோபாலா மகிழ்விக்கிறார்.

இப்போதைய தலைமுறையினருக்கு அவரை ஒரு காமெடி பீஸாகத்தான் தெரியும். ஆனால், ஸ்க்ரிப்ட் எழுதுவதில் அவர் மாஸ்டர் பீஸ்! ரஜினியின் 'ஊர்க்காவலன்', விஜயகாந்தின் 'என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்', வெள்ளிவிழா நாயகன் மோகனின் 'பிள்ளை நிலா' என பல படங்களை இயக்கியவர். 'சதுரங்க வேட்டை', 'பாம்பு சட்டை' படங்களின் தயாரிப்பாளரும் கூட! அவரது ஜாலி பதில்களில் சில இங்கே...

ஹேர் ஸ்டைல் ரொம்ப வருஷமா ஒரே மாதிரி மெயின்டேயின் பண்றீங்களே... இயற்கையான முடிதானா?

மனோபாலா
மனோபாலா

வேணா இழுத்துப் பாரு. சமீபத்துல எனக்கும் கொரோனா அட்டாக் வந்ததுல, நிறைய முடி கொட்டிடுச்சு.

உங்க வீட்ல உங்கள ஒரு எம்.பி.ஆகவோ, எம்.எல்.ஏ.வாகவோ பார்க்கணும்னு விரும்பினதுண்டா?

"எங்க வீட்ல அவங்க படமே பார்க்க மாட்டாங்க. என் பையன்தான் படம் பார்த்துட்டு கமெண்ட் சொல்வார். நான் அரசியல்ல பிரசாரத்துக்கு போகும்போது கூட 'நீ நடிக்கறதே பெரிய விஷயம்.. இதுல அரசியலா வேறா'னு ஓட்டியிருக்கார்."

உங்க யூடியூப் சேனலின் மாத வருமானமே மூணு லட்ச ரூபாய்க்கு மேல வருதுனு சொல்றாங்களே..?

"வந்திறகிந்தறப் போகுது. யூடியூப் நடத்துறவங்களுக்குத்தான் நிலைமை தெரியும். கரெண்ட் பில்லே கட்டமுடியாம ஒட்காந்திருக்கோம்."

இன்னும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் அவரின் ஜாலியான பதில்களுக்கும் கீழே உள்ள வீடியோவை க்ளிக்கவும்.
அடுத்த கட்டுரைக்கு