Published:Updated:

“யோகிபாபு ஜெராக்ஸ் நான்!”

மனோகர்
பிரீமியம் ஸ்டோரி
மனோகர்

தியேட்டர்ல வாசனையெல்லாம் வர்ற மாதிரி படம் எடுப்பாரே கின்னஸ் பாபு கணேஷ், அவரோட ‘370'ங்கிற படத்துல சின்ன கேரக்டர்ல நடிச்சேன்.

“யோகிபாபு ஜெராக்ஸ் நான்!”

தியேட்டர்ல வாசனையெல்லாம் வர்ற மாதிரி படம் எடுப்பாரே கின்னஸ் பாபு கணேஷ், அவரோட ‘370'ங்கிற படத்துல சின்ன கேரக்டர்ல நடிச்சேன்.

Published:Updated:
மனோகர்
பிரீமியம் ஸ்டோரி
மனோகர்

சும்மா இருந்த ஒருவேளையில் ஃபேஸ்புக்கை மேய்ந்துகொண்டிருந்தபோது (‘நீ என்னைக்கு வேலை செஞ்சே, எப்பவும் ஃப்ரீதானே!'ங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது) போகிபாபு என்ற ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தேன். ஃபேக் ஐ.டி என்று நினைத்தால் போட்டோ இருந்தது. அச்சு அசல் யோகிபாபு போலவே இருந்தார். ஆளைப் பிடித்துப் பேசினால் யோகிபாபுவுக்கு டூப் போட்டுக்கொண்டிருக்கிறாராம்.

‘‘என் பெயர் மனோகர். அரியலூர்க்காரன். அரியலூர்ல அரியரே இல்லாம பி.எஸ்ஸி, பி.எட் படிச்சவங்க நான். ஆனா, வாத்தியார் வேலைக்குப் போகப் பிடிக்கல, எனக்கு இருக்குற திறமைக்கு அரியலூர் சரிப்பட்டு வராதுன்னு நேரா கிளம்பி சென்னை வந்துட்டேன். வந்ததும் தலைமைச் செயலகத்துல ரிப்போர்ட்டிங் அசிஸ்டென்ட்டா வேலைக்குச் சேர்ந்தேன்.

“யோகிபாபு ஜெராக்ஸ் நான்!”

சின்ன வயசுல இருந்தே சினிமாவில நடிக்கணும்னு ஆசை. அதனால வேலை பார்த்துக்கிட்டே சினிமா சான்ஸ் தேடிக்கிட்டு இருந்தேன். வினோத்னு என் ஃப்ரெண்ட் ஒருத்தன் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தான். அப்பப்போ அவன் எடுக்கும் குறும்படங்களில் நடிக்க சான்ஸ் கொடுப்பான். அப்படியே வாழ்க்கை போயிட்டிருந்தது. அடுத்து சினிமாவிலும் சின்னச் சின்ன வேஷம் கிடைச்சது. அடியாளா வில்லனுக்குப் பின்னாடி ரெண்டாவது வரிசையில மூணாவதா நிப்பேன். காமெடியனுக்குப் பக்கத்துல துணை காமெடினா ஒரு ஓரமா இருப்பேன். நானும் சினிமாவுல இருக்கேன்னு ஊரை ஏமாத்திட்டு இருந்தேன். இப்படியே போன என் வாழ்க்கையில திடீர்னு ஒரு திருப்பம் ஏற்பட்டுச்சு.

தியேட்டர்ல வாசனையெல்லாம் வர்ற மாதிரி படம் எடுப்பாரே கின்னஸ் பாபு கணேஷ், அவரோட ‘370'ங்கிற படத்துல சின்ன கேரக்டர்ல நடிச்சேன். செட்ல கணேஷ் சார் என்னைக் கவனிச்சிருக்கார். அது போகிப் பண்டிகை நேரமும்கூட. ‘யோகி பாபு தம்பி மாதிரி இருக்கே, அதனால உனக்கு போகி பாபுனு பேர் வைக்கிறேன்'னு புதுசாப் பேர் வெச்சிட்டார். அன்னைல இருந்து இந்தப் பெயர்ல சுத்திக்கிட்டு இருக்கேன்.

“யோகிபாபு ஜெராக்ஸ் நான்!”

யோகிபாபு மாதிரி இருக்கும் போகிபாபுங்கிறதால் சினிமா வாய்ப்புகள் இப்போ நிறைய வர ஆரம்பிச்சிடுச்சு. கடைசில யோகிபாபு சாருக்கே டூப் போட்டுட்டேன்னா பார்த்துக்கோங்க. ‘டாக்டர்'ல ஆரம்பிச்சு இப்போ ரிலீசான ‘யானை', இனி வரப்போற ‘அயலான்', ‘பிச்சைக்காரன் 2'-ன்னு அவர் நடிக்கிற பல படங்கள்ல சில காட்சிகளுக்கு என்னைத்தான் டூப் போடக் கூப்பிடுறாங்க. முதல் நாள் ஷூட்ல யோகிபாபு சார் என்னைப் பார்த்துட்டு ஷாக் ஆகிட்டார். ‘அடேய், அப்படியே என்னை ஜெராக்ஸ் எடுத்த மாதிரியே இருக்கியேடா’ன்னு ஆச்சரியப்பட்டார். அதே மாதிரி சிவகார்த்திகேயன் சாரும் ‘நல்லா நடிக்கிறீங்க. ஆல் த பெஸ்ட் போகி பாபு'ன்னு பாராட்டினார். ஜெயிச்சவங்க பாராட்டும்போது பூஸ்டர் டோஸ் போட்ட மாதிரி தெம்பா இருக்கு.

இன்னும் எனக்குக் கல்யாணம் ஆகலை. எப்படியாவது சினிமாவுல ஜெயிச்சிட்டு கல்யாணம் பண்ணணும்னு ஒரு முடிவோட வந்திருக்கேன். கண்டிப்பா ஜெயிப்பேன் ப்ரோ’’ என்றவரிடம், ‘‘இந்த ஹேர்ஸ்டைல எப்படிங்க மெயின்டெய்ன் பண்றீங்க?’’ என்றேன்.

“யோகிபாபு ஜெராக்ஸ் நான்!”
“யோகிபாபு ஜெராக்ஸ் நான்!”

‘‘அமேசான் காட்டுல வளர்ந்த எந்த அரியவகை மூலிகையும் தேய்க்கிறதில்லை, நம்மூரு சீயக்காய்தான் தேய்க்கிறேன். ஒருநாள் குளிக்காம விட்டாலும் என் தலை கப்படிக்கும். அதனால தினமும் குளிச்சிடுவேன். நான் குளிக்கப் போனா வீட்ல எல்லாரும் திட்டுவாங்க. ஏன்னா நான் குளிக்க ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகும். ஸ்கூல் படிக்கும்போது பி.டி வாத்தியார் என் முடியைப் பிடிச்சு இழுத்து ‘என்னடா மண்டை இது’ன்னு அடிப்பார். வாகா சிக்கிடுவேன்.

ஒரு முறை ஹெல்மெட் போடாம பைக்ல போகும்போது போலீஸ் புடிச்சிட்டாங்க. என் தலையைத் தடவிப் பார்த்தவங்க ‘ஜெய்ஹிந்த்'ல செந்திலைக் கலாய்க்கிற மாதிரி கலாய்ச்சு அனுப்பினாங்க. இப்படி ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கு. இந்த முடி எனக்குக் கடவுள் கொடுத்த வரம் ப்ரோ.’’

``கடைசியா நடிச்ச படம்?’’

‘‘சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சியோட ‘லெஜெண்ட்'ல நானும் நடிச்சிருக்கேன். படத்துல அண்ணாச்சிகூட பயங்கர சண்டையெல்லாம் போட்டிருக்கேன். அந்தப் படத்தோட ரிலீஸுக்குத்தான் இப்போ வெயிட்டிங். எப்படியோ நான் ஆசைப்பட்ட சினிமாவுக்குள்ளே வந்துட்டேன். அப்படியே டைரக்டர் பாலா படத்துல நடிச்சு பெரிய நடிகராகிடணும். அதுக்காக அவர்கிட்ட எவ்ளோ அடி வாங்கினாலும் பரவால்ல, மிதி வாங்கினாலும் பரவால்ல. இதுதான் என் லட்சியம் ப்ரோ’’ என்கிறார் யோகிபாபுவாக வாழும் ‘போகிபாபு' மனோகர்.

இப்படி இன்னும் எத்தனை பேர் கிளம்பியிருக்காங்கன்னு தெரியலையே!