Published:Updated:

“இந்தப் படம் ரீமேக் மாதிரியே இருக்காது!”

சந்தானம்
பிரீமியம் ஸ்டோரி
சந்தானம்

நார்மலா ஒரு படம் பார்க்கும்போது, இந்தப் படத்தை நாம டைரக்ட் பண்ணிருந்தால் எப்படியிருக்கும்னு யோசிப்போம்ல.

“இந்தப் படம் ரீமேக் மாதிரியே இருக்காது!”

நார்மலா ஒரு படம் பார்க்கும்போது, இந்தப் படத்தை நாம டைரக்ட் பண்ணிருந்தால் எப்படியிருக்கும்னு யோசிப்போம்ல.

Published:Updated:
சந்தானம்
பிரீமியம் ஸ்டோரி
சந்தானம்

2019-ம் ஆண்டு டோலிவுட்டில் சூப்பர்ஹிட்டான படங்களில் `ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா'வும் ஒன்று. நவீன் பாலிஷெட்டி நாயகனாக நடித்த முதல் படம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி டோலிவுட்டைக் கலக்கியது. இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார், இயக்குநர் மனோஜ் பீதா. `வஞ்சகர் உலகம்' படத்தின் மூலம் கவனிக்க வைத்தவர். சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் பெயர், ‘ஏஜென்ட் கண்ணாயிரம்.'

மனோஜ் பீதா
மனோஜ் பீதா

‘‘ ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா' படத்துடைய அடிப்படையை மட்டும் எடுத்துக்கிட்டு அதை வேற மாதிரி அணுகியிருக்கோம். அந்தப் படத்தை அப்படியே ரீமேக் பண்ணலை. க்ரைம் த்ரில்லரா மட்டும் அணுகாமல் ஒரு எமோஷனுக்குள்ளாற க்ரைம் த்ரில்லரைப் பொருத்தியிருக்கோம். வழக்கமான சந்தானம் சார் படம் மாதிரியோ, யுவன் படம் மாதிரியோ இருக்காது. ஒரிஜினல் வெர்ஷன் மாதிரியும் இருக்காது. இது எல்லாம் கலந்த வித்தியாசமான பேக்கேஜா இருக்கும்.

நாம நிறைய ரீமேக் படங்களைப் பார்த்திருக்கோம். நம்மூர்ப் படங்களும் நிறைய ரீமேக் ஆகியிருக்கு. ஒரு படத்தை ரீமேக் பண்ணும்போது, ஒரிஜினல் வெர்ஷன்ல என்ன இருக்கோ அதை அப்படியே இங்கேயும் எடுக்கணும், அப்போதான் இங்கேயும் சக்சஸ் ஆகும்னு நினைப்பாங்க. அதை நான் உடைக்கணும்னு நினைச்சேன். ரீமேக் பண்ணணும்னா, ஒரிஜினல் வெர்ஷன்ல இருக்கிற அடிப்படையை மட்டும் எடுத்துக்கிட்டு அதுக்கு வேறொரு குரல் கொடுத்து, வித்தியாசமா அணுகி, புதுப்படமா மக்களுக்குக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். இதை நான் அப்படித்தான் பண்ணியிருக்கேன். படம் பார்த்த பிறகு, இது ரீமேக் இல்லையேன்னு உங்களுக்குப் புரியும். அந்தப் படத்தின் தழுவல்னு வெச்சுக்கலாம்'' என்று உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார், இயக்குநர் மனோஜ் பீதா.

“இந்தப் படம் ரீமேக் மாதிரியே இருக்காது!”
“இந்தப் படம் ரீமேக் மாதிரியே இருக்காது!”

``இந்தப் படத்தை ரீமேக் பண்ணணும்னு எப்போ தோணுச்சு? எப்படி ஆரம்பமானது?’’

‘‘நார்மலா ஒரு படம் பார்க்கும்போது, இந்தப் படத்தை நாம டைரக்ட் பண்ணிருந்தால் எப்படியிருக்கும்னு யோசிப்போம்ல. அப்படிதான், ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா' பார்க்கும்போது, அதுல வர்ற அம்மா - பையன் சென்டிமென்டை இன்னும் கொஞ்சம் அழகா சொல்லிருக்கலாமோன்னு தோணுச்சு. நான் இந்தப் படத்தை எடுத்து என்னுடைய ஸ்டைல்ல பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன். அந்தச் சமயத்துல சந்தானம் சார் கதை கேட்குறார்னு நண்பர் ஒருவர் மூலமா கேள்விப்பட்டேன். இந்தக் கதை அவருக்கு சூப்பரா செட்டாகும்னு நினைச்சு அவர்கிட்ட சொன்னேன். அவரும் ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா' படத்தைப் பார்த்திருந்தார். அந்தப் படத்துடைய கதையும், நான் அதை எப்படிப் பண்ணப்போறேங்கிற விதமும் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்படித்தான் ஆரம்பமாச்சு.''

``சந்தானம் இந்தக் கதைக்கு எப்படி செட் ஆனார்?’’

‘‘சந்தானம் ரசிகர்கள் அவர்கிட்ட சில விஷயங்கள் எதிர்பார்ப்பாங்க. ஆனா, அவரை ஒரு கேரக்டருக்குள்ள எடுத்துட்டு வந்து குறிப்பிட்ட மீட்டர்லதான் படம் முழுக்கவே இருக்க வெச்சிருக்கேன். எங்கேயுமே பழைய சந்தானம் சாருக்கான ஃப்ளேவர் இருக்காது. அதை அவர்கிட்ட முன்னாடியே சொல்லி, கொஞ்சம் புதுசா உங்களைக் காட்டலாம்னு இருக்கேன்னு சொல்லிட்டேன். ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா'ல நவீன் பாலிஷெட்டி பண்ணின மாதிரியான மேனரிசம், பாடி லேங்குவேஜ் இதுல இருக்காது. சந்தானம் சாரை இதுல வேற மாதிரி பார்க்கலாம். அவருடைய கலாய், கவுன்டர்ஸ் எதுவும் இதுல இருக்காது. ஹியூமர் இருக்கும். ஆனா, வேற மாதிரி இருக்கும். அந்தப் படத்துல நிறைய காமெடி, கொஞ்ச எமோஷன் இருக்கும். இதுல காமெடியும் எமோஷனும் சரி சமமா இருக்கும். சந்தானம் சார்கிட்ட இதுவரை யாரும் சில விஷயங்களைக் கேட்கலை. அதனால, அவரும் அதைப் பண்றதுக்கான அவசியமும் வரலை. இதுல எமோஷன் காட்சிகள்ல சூப்பரா பண்ணியிருக்கார். அதுக்குன்னு ஓவரா எமோஷனாகி அழ வைக்கிற மாதிரி இருக்காது. சரியான மீட்டர்ல இருக்கும். ஹீரோயின் ரியா சுமன் டாக்குமென்ட்ரி பிலிம் மேக்கரா படம் முழுக்க சந்தானம் சார் கூடவே பயணிப்பாங்க. முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ் இவங்க மூணு பேரும் முக்கியமான கேரக்டர்கள்ல நடிச்சிருக்காங்க.''

“இந்தப் படம் ரீமேக் மாதிரியே இருக்காது!”
“இந்தப் படம் ரீமேக் மாதிரியே இருக்காது!”

`` ‘வஞ்சகர் உலகம்' மியூசிக்கலா பேசப்பட்டது . இதுல யுவன் ஷங்கர் ராஜா கூட வேலை செஞ்சிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படியிருந்தது?’’

‘‘ ‘வஞ்சகர் உலகம்' படத்துக்கு சாம் சி.எஸ்ஸின் இசை பெரிய ப்ளஸ்ஸா இருந்தது. எனக்கு சின்ன வயசுல இருந்தே யுவன் இசை ரொம்பப் பிடிக்கும். யுவன் கூட ஒரு முறையாவது வொர்க் பண்ணணும்னு ஆசை இருந்துக்கிட்டே இருந்தது. ‘வஞ்சகர் உலகம்' படத்துல ஒரு பாடல் பாடிக் கொடுத்தார். இந்தப் படத்துக்கு அவரை அணுகியபோது, உடனே ஓகே சொல்லிட்டார். காரணம், ‘வஞ்சகர் உலகம்' படத்துடைய மியூசிக்கல் ட்ரீட்மென்ட். இந்தப் படமும் மியூசிக்கலா வேற மாதிரி இருக்கும். வழக்கமான யுவனுடைய ஆல்பம் மாதிரி இருக்காது. அதுதான் இதனுடைய ஸ்பெஷல். மூணு பாடல்கள் இருக்கு. இளையராஜா சாருடைய ஒரு பாடலை ரீமிக்ஸ் பண்ணலாமான்னு ப்ளான் பண்ணிக்கிட்டிருக்கோம்.''

``தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு?’’

‘‘இது ஒரு வில்லேஜ் சப்ஜெக்ட். அதனால, ரொம்ப யதார்த்தமா இருக்கணும்னு நினைச்சேன். ஈஸ்வர் சாருடைய விஷுவல்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கதை நடக்கும் இடத்தையும் அங்கிருக்கும் சின்னச் சின்ன விஷயங்களையும் கவனிச்சு ஹைலைட் பண்ணி செமயா காட்டியிருக்கார். தவிர, சரவணன் ராமசாமி சாரும் கொஞ்ச போர்ஷன் வொர்க் பண்ணியிருக்கார்.''

“இந்தப் படம் ரீமேக் மாதிரியே இருக்காது!”
“இந்தப் படம் ரீமேக் மாதிரியே இருக்காது!”

``டீசர் பார்த்துட்டு, மலையாள சினிமா சாயல்ல இருக்குன்னு கமென்ட்ஸ் வந்ததை கவனிச்சீங்களா?’’

‘‘என்கிட்டயும் சிலர் இதைச் சொன்னாங்க. எனக்கு சந்தோஷம்தான். மலையாள சினிமாவுல ரியாலிட்டியை அப்படியே காட்டுவாங்க. என்னைப் பொறுத்தவரை ரியலிசத்துல இருந்துதான் உண்மையான டிராமா வருதுன்னு நினைக்கிறேன். நாம டிராமா பண்ணணும்னு நினைச்சா, அதுக்குள்ள சினிமாத்தனம் வந்திடும். எனக்கு, யதார்த்தம்தான் வேணும். என் படங்களும் அப்படித்தான் இருக்கணும்னு நினைச்சு எடுக்கிறேன்.''

“இந்தப் படம் ரீமேக் மாதிரியே இருக்காது!”
“இந்தப் படம் ரீமேக் மாதிரியே இருக்காது!”

``ஓ.டி.டி தளங்கள் மூலமா மக்கள் மத்த ஊர்ப் படங்களையும் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால, ரீமேக்ங்கிற ஜானரே இனி இருக்காதோன்னு ஒரு கேள்வி வருது. நீங்க என்ன நினைக்கிறீங்க?’’

‘‘ ‘மொமன்டோ'வுடைய ரீமேக்தான் ‘கஜினி.' ஆனா, அதுமாதிரி இருக்காது. நானும் ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா' படத்தை இங்க அப்படித்தான் மாத்தி எடுத்திருக்கேன். உணர்வு ஒண்ணு; கதை சொல்லல் வேற. ரெண்டு வெர்ஷன்னு வெச்சுக்கலாம். நீங்க சொல்ற மாதிரி ரீமேக் செய்கிற படங்கள் அதிகம் வராமல்கூடப் போகலாம். இப்போ மார்க்கெட் பெருசாகிட்டதனால, டப் பண்ணியே பக்கத்து மாநிலங்கள்லயும் வெளியிடுறாங்க. ‘ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்தையே தெலுங்குல டப் பண்ணி ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கோம். அவங்க ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா' பார்த்திருந்தாலும் இந்த வெர்ஷன் எப்படியிருக்குன்னு பார்க்கட்டும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism