Published:Updated:

‘’சாட்சியாக பட்டாம்பூச்சி'’... கொடியன்குளம் சர்ச்சை... 'கர்ணன்' மாரி செல்வராஜின் மாற்றம் என்ன?

கர்ணன் படப்பிடிப்பில் மாரி செல்வராஜ், த னுஷ், லால்

கொடியன்குளம் கலவரம் 1995-ம் ஆண்டில், ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் நடந்தபோது, திமுக ஆட்சிகாலமான 1997-ன் முன்பகுதியில் இருந்து என படத்தில் ஏன் மாரி செல்வராஜ் குறிப்பிடவேண்டும் என்கிற விமர்சனங்கள் எழுந்தன.

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது ‘கர்ணன்' திரைப்படம். எளிய மக்களின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கொடியன்குளம் கலவரம் மற்றும் 1990-களில் பேருந்தை அடிப்படையாகக் கொண்டு நடந்த கலவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

''1997-ன் முன்பகுதியில் இருந்து'' என கதை தொடங்குவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தை ஆரம்பித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. குறிப்பாக திமுக சார்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. கொடியன்குளம் கலவரம் 1995-ம் ஆண்டில், ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் நடந்தபோது, கருணாநிதி ஆட்சிகாலமான 1997-ன் முன்பகுதியில் இருந்து என ஏன் மாரி செல்வராஜ் குறிப்பிடவேண்டும் என்கிற விமர்சனங்கள் எழுந்தன.

புதிய 'கர்ணன்' கார்டு
புதிய 'கர்ணன்' கார்டு

இதனைத்தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் ''1990-களின் பின்பகுதியில் இருந்து'' என படத்தின் தொடக்க கார்டை மாற்றிக் குறிப்பிட்டார். பின்னர் இதுவும் சர்ச்சையாக இப்போது ஆண்டையே குறிப்பிடாமல் படத்தின் தொடக்கத்தை சில வரிகளோடு ஆரம்பித்திருக்கிறார்.

‘’அடிப்படைத் தேவைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் சாமானிய மக்கள் உயிர்ப்போடு போராடத் தொடங்கிய காலகட்டம். சாட்சியாக பட்டாம்பூச்சி'’ என்கிற கார்டோடு இப்போது படம் தொடங்குகிறது.

தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கே அனுமதி என்கிற கட்டுப்பாடுகளோடு ஏப்ரல் 9-ம் தேதி வெளியான 'கர்ணன்' திரைப்படம் இப்போது வெற்றிகரமான இரண்டாம் வாரம் கண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!