Published:Updated:

உதயநிதிக்கு முன்னுரிமை கொடுத்த மாரி செல்வராஜ்... வெயிட்டிங்கில் துருவ் விக்ரம்!

உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கி முடித்த பிறகு, துருவ் விக்ரமை இயக்குகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'கர்ணன்' திரைப்படத்துக்குப் பிறகு, நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் படம் இயக்குவதாக ஒப்பந்தமானது. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'நீலம்' சார்பில் பா.இரஞ்சித்தும் வெளியிட்டார். அந்தப் படம் இந்திய அணிக்காக விளையாடிய ஒரு கபடி வீரரின் பயோபிக் என்ற செய்திகளும் வந்தன.

இதற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் ஆரம்பமான நேரத்தில், ''மீண்டும் நானும் மாரி செல்வராஜும் இணையவிருக்கிறோம்'' என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ப்ரைஸ் கொடுத்தார். இதற்கிடையே கார்த்திக் சுப்புராஜின் 'மஹான்' படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் படத்துக்கு துருவ் விக்ரம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. 'மஹான்' படமும் முடிந்தது. துருவும் ரெடி. இதற்கிடையில் உதயநிதி ஸ்டாலின் தனக்கு ஒரு படம் பண்ணச் சொல்லி இயக்குநர் மாரி செல்வராஜிடம் கேட்க, எந்தப் படத்தை மாரி செல்வராஜ் முதலில் தொடங்குவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. இறுதியில் வெற்றி உதயநிதிக்கே!

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் நவம்பர், டிசம்பரில் இந்தப் படம் ஆரம்பமாக இருக்கிறது. 40 நாள்கள் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர். இந்தப் படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுவே, உதயநிதி நடிக்கும் கடைசி படம் என்கிறார்கள். இதனை நடித்து முடித்துவிட்டு, முழுக்க முழுக்க அரசியலில் மட்டும் கவனம் செலுத்த இருக்கிறாராம் எம்எல்ஏ உதயநிதி.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து முடித்த உதயநிதிக்கு, அருண்ராஜா காமராஜ் இயக்கும் 'ஆர்டிகள் 15' ரீமேக் படமும் மு.மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கண்ணை நம்பாதே' படத்தின் 15 நாள் ஷூட்டிங்கும் மீதம் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்குள் இதனை முடித்துவிட இருக்கிறார்.

உதயநிதி படத்தை முடித்துவிட்டு அடுத்த வருடம் மார்ச் மாதம் துருவ் விக்ரமை இயக்கவிருக்கிறார் மாரி செல்வராஜ்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு