Published:Updated:

`` `மாஸ்டர்' லுக் பார்த்துட்டு விஜய் சார் ஒரே ஒரு கேள்வி கேட்டார்!'' - போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா

மாஸ்டர் 3rd look
மாஸ்டர் 3rd look

'மாஸ்டர்' படம் குறித்தும் போஸ்டர் டிசைனிங் அனுபவம் குறித்தும் பேசுகிறார் போஸ்டர் டிசைனர் கோபி பிரன்னா.

ஒரு புத்தகத்தின் அட்டைதான் அதன் ஒட்டுமொத்த சாராம்சத்தையும் உணர்த்தும். அதேபோல படத்தின் ஒன்லைனை வைத்து, வேற லெவல் குறியீடுகளைக்கொண்டு, அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை டிசைன் செய்கிறார்கள் சில போஸ்டர் டிசைனர்ஸ்.

கோபி பிரசன்னா
கோபி பிரசன்னா

அந்த வகையில், `ஆரண்ய காண்டம்', `கத்தி', `ஓகே கண்மணி', `சீதக்காதி', `96' எனப் பல கோலிவுட் படங்களின் போஸ்டர்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர், கோபி பிரசன்னா. இந்த வரிசையில் சமீபத்தில் வெளியான, `மாஸ்டர்' படத்தின் மூன்று லுக்குகளும் வெளியான மறு நொடியே செம வைரலாயின. அந்தப் படம் குறித்தும் போஸ்டர் டிசைனிங் அனுபவம் குறித்தும் அவரிடம் பேசினோம்.

"சினிமாக்குள்ள பப்ளிசிட்டி டிசைனராதான் உள்ளே நுழைஞ்சேன். நான் ஃபீல்டுக்குள்ள வந்தப்போ, படத்தோட போஸ்டர்களுக்கு இந்த அளவு கவனம் இல்லை. கடந்த 10 வருஷத்துலதான் அந்த நிலை தலைகீழா மாறிடுச்சு. இப்போ, போஸ்டர் டிசைனிங்னா என்ன... அந்த போஸ்டருக்குப் பின்னாடி யார் இருக்காங்க... இந்தத் துறை எப்படி இயங்குதுன்னு மக்கள் கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

முன்னாடி, மாசக் கணக்குல தியேட்டர்ல ஓடிய படங்கள்லாம் இருக்கு. ஆனா, இப்போ அப்படிக் கிடையாது. ஒரு படத்தோட லைஃப்டைம், தியேட்டர்கள்ல ரொம்பவே கம்மி. ஃபர்ஸ்ட் லுக்லயே படத்தோட கதை தொடங்கிருது. அதனால போஸ்டர் டிசைனிங்கை முக்கியமான விஷயமா நினைக்கிறேன்" என்று போஸ்டரைப் பத்தி ஒரு இன்ட்ரோ கொடுத்தார் கோபி பிரசன்னா. அதன்பிறகு, `மாஸ்டர்' பட அனுபவங்களைப் பற்றி கேட்டோம்.

மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக்
மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக்

"படத்தோட ஃபர்ஸ்ட் லுக்கைப் பார்த்து கதை என்னவா இருக்கும்னு ரசிகர்களுடைய ஆர்வத்தைத் தூண்டுறதுதான் ஒரு போஸ்டர் டிசைனருடைய முக்கியமான வேலை. இதை மனசுல வெச்சுதான் ஒவ்வொரு படத்துக்கும் நான் வேலை பார்ப்பேன். படத்தோட முழுக் கதையையும் கேட்டுட்டு, இயக்குநரோட கலந்து பேசிட்டுதான் முடிவு எடுப்போம். அந்த வகையில, `மாஸ்டர்' படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக்கை ரெடி பண்ணிட்டு, விஜய் சார்கிட்ட காட்டினோம். அவர் பார்த்துட்டு, ரொம்பவே சர்ப்ரைஸ் ஆகிட்டார். ஒரு கேள்வி கேட்டார். `இப்படி ஒரு அவுட்புட் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்படிலாம்கூட யோசிக்க முடியுமா... எப்படி ஐடியா புடிச்சீங்க'ன்னு கேட்டார்.''

"குறிப்பா, படத்தோட 3-வது லுக் போஸ்டருடைய போட்டோஷூட் சமயம். எல்லோரும் பிஸியா, டென்ஷனா சுத்திட்டிருந்தாங்க. டிசைனிங்க்கு கம்மியான நேரம்தான் இருந்தது. அந்தக் குறைவான நேரத்துல டிசைன் பண்றது ரொம்பவே சவாலான விஷயம். எதிர்பார்க்கிற மாதிரி ஸ்டில் வரணும்ங்கிறதால நிறைய முறை டேக் போயிடுச்சு. போஸ்டர்ல நீங்க பார்த்த இன்டென்ஸ், ஷூட்ல நடந்த மேஜிக்னுதான் சொல்லணும். அதை நடத்திக் காட்டினதுல வெங்கட்ராம் சாருடைய பங்கு அதிகம்."

மாஸ்டர் இரண்டாவது லுக்
மாஸ்டர் இரண்டாவது லுக்
``நதிக்கு  பொன்னி, பிரபாஸுக்கு  செல்வன்னு பொன்னியின் செல்வனா எடுக்கலாம்னு இருந்தோம்!"- மதன் கார்க்கி

"அதே மாதிரி, `மாஸ்டர்' படத்தோட போஸ்டர்ல இல்லுமினாட்டி, அது இதுன்னு நிறைய குறியீடுகள் சொல்லிட்டிருக்காங்க. அதெல்லாம் எதுவும் கிடையாது. இதுவரைக்கும் இல்லாத ஃபான்டைக் கொண்டு வரணும்னுதான் அப்படிப் பண்ணேன். வேற எதுவும் அதுல ஸ்பெஷல் இல்லை'' என்றார் சிரித்துக்கொண்டே. இதைத் தொடர்ந்து, விஜய் - விஜய் சேதுபதியோடு பணியாற்றிய அனுபவம் பற்றிக் கேட்டோம்.

"கொஞ்ச நாளா விஜய் - விஜய் சேதுபதி படங்களோட போஸ்டர்களை நான்தான் டிசைன் பண்ணிட்டிருக்கேன். இது எனக்கு ரொம்பவே சந்தோஷமான விஷயம். ரெண்டு பேர்கூட 6 படங்களுக்கு மேல வேலை பார்த்திருக்கேன். இப்போ, அவங்க ரெண்டு பேரும் சேர்ந்த படத்துக்கும் வேலை பார்த்திட்டிருக்கேன். ஒவ்வொரு படத்துக்கும் அவங்களுடைய கருத்துகளைச் சொல்வாங்க. விஜய் சேதுபதி சார் நடிச்சு, நான் வொர்க் பண்ணதுல பர்சனலா எனக்குப் பிடிச்ச படம், `சீதக்காதி'. விஜய் சாருக்கு `கத்தி' படத்தைச் சொல்வேன்."

மாஸ்டர் மூன்றாவது போஸ்டர்
மாஸ்டர் மூன்றாவது போஸ்டர்
வடிவேலு, விஜய், மோடி...வைரல் `LinkedIn, Facebook, Instagram, Tinder' ஆல்பம்!

"'கத்தி'தான் இந்த ஃபர்ஸ்ட் லுக் டிரெண்டை உருவாக்கிய படம். அந்தப் படத்தோட போஸ்டர்ல விஜய் சாரின் உருவத்துக்குள்ள இருக்கிற நியூஸ் பேப்பர்ல நிறைய செய்திகள் இருக்கும். அதை வெச்சு அந்தப் படம் எதைப் பத்தி பேசப்போகுதுனு விவாதம்லாம் நடத்தினாங்க. `நேர்கொண்ட பார்வை' பாலியல் துன்புறுத்தல் ஆக்ட்டுடைய லா, அந்த ஃபான்ட் உள்ள இருக்கும். `சர்கார்' பெயரே வலிமையா இருந்ததால, அதுல எதையும் சேர்க்காம இயல்பா கொடுத்துட்டோம். அந்த மாதிரி கதைக்குத் தேவையான குறியீடுகள் மட்டும்தான் போஸ்டர்ல தேவை. வலுக்கட்டாயமா சேர்க்கிறதுல எனக்கு உடன்பாடில்லை" என்றார் பாசிட்டிவிட்டியோடு.

அடுத்த கட்டுரைக்கு