Published:Updated:

விஜய்க்கு டிப்ரஷன்?! - `மாஸ்டர்' போஸ்டர்கள் சொல்லும் சீக்ரெட்ஸ் என்ன?

`மாஸ்டர்' போஸ்டர்கள்
`மாஸ்டர்' போஸ்டர்கள்

கூலர்ஸை கொஞ்சமாக இறக்கிவிட்டு, SWAG லுக்குடன் படுத்திருக்கும் விஜய்யின் கீழ், பல குறியீடுகளையும் இட்டு நிரப்பியிருக்கிறார்கள். அவற்றைக் கொஞ்சம் ஆராய்வோம்...

விஜய்யை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ் என்றவுடன் எதிர்பார்ப்பு எக்கசக்கமாய் எகிறியது. மாஸ் அதிகம், க்ளாஸ் கொஞ்சம் என்பது விஜய் ஃபார்மூலா. க்ளாஸ் அதிகம், மாஸ் கொஞ்சம் என்பது லோகேஷ் ஃபார்மூலா. இருவரும் இணையும் படத்தில் க்ளாஸும், மாஸும் தூக்கலாக இருக்குமே எனத் தூக்கத்தைத் தொலைத்தனர் விஜய் ரசிகர்கள்.

மாஸ்டர் போஸ்டர்
மாஸ்டர் போஸ்டர்

அதற்கு ஏற்றாற்போல் `மாஸ்டர்' என படத்தின் பெயரில் தொடங்கி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இரண்டாவது போஸ்டர், விஜய் - விஜய் சேதுபதி காம்பினேஷன் போஸ்டர், குட்டி ஸ்டோரி பாடல், அதன் லிரிக் வீடியோ என ஒவ்வொரு விஷயத்திலும் வழக்கமான விஜய் படங்களிலிருந்து வித்தியாசம் காட்டிவருகிறது படக்குழு. சமீபத்தில் வெளியான, `இசை வெளியீடு அறிவிப்பு' போஸ்டரிலும் ரகளையான வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். கூலர்ஸைக் கொஞ்சமாக இறக்கிவிட்டு, SWAG லுக்குடன் படுத்திருக்கும் விஜய்யின் கீழ், பல குறியீடுகளையும் இட்டு நிரப்பியிருக்கிறார்கள். அவற்றைக் கொஞ்சம் ஆராய்வோம்...

ஜார்ஜ் லீவிஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஜாஸ் இசைக் கலைஞர். கறுப்பினத்தைச் சேர்ந்தவரான ஜார்ஜ் லீவிஸ், க்ளாரினட் இசைப்பதில் ஜாம்பவான். அவரின் இசைத்துணுக்குகளைக் கொண்ட இசைத்தட்டு ஒன்றின் கவரும், அவரின் கான்செர்ட் பற்றிய பழைய போஸ்டர் ஒன்றும் `மாஸ்டர்' போஸ்டரில் இடம்பெற்றிருக்கின்றன. அதேபோல், ஹொரேஸ் சில்வர் எனப்படும் ஜாஸ் கலைஞருடைய ஆல்பத்தின் கவரையும் இதில் காணலாம். பியானிஸ்டான ஹொரேஸ் சில்வரின் புகழ்பெற்ற ஆல்பமான, `ஹொரேஸ் சில்வர் அண்ட் தி ஜாஸ் மெசஞ்சர்ஸ்' ஆல்பத்தின் கவர்தான் அது.

ஜாஸ் ஆல்பம்கள்
ஜாஸ் ஆல்பம்கள்
``கிஸ் மிஸ்னு விஜய் சார் சொல்ல... திரும்பிப் பார்த்தா..!" - `முத்தம் ஸ்டோரி' பகிரும் சதீஷ்

கென்னி தார்ஹம் எனும் மற்றொரு அமெரிக்க ஜாஸ் இசைக்கலைஞரின் லைவ் ஆல்பமான, `ரவுண்ட் அபவுட் மிட்நைட் அட் தி கஃபே பொஹிமியா'வின் கவரும் போஸ்டரில் இருக்கிறது. கென்னி தார்ஹம், புகழ்பெற்ற ட்ரம்பட் கலைஞரும் பாடகரும் ஆவார். இன்னொரு அமெரிக்க ஜாஸ் இசைக் கலைஞரான கென்னி பரலின் முதல் ஆல்பமான, `இன்ட்ரடியூசிங் கென்னி பரல்' ஆல்பத்தின் கவரும் இந்தப் போஸ்டரில் உள்ளது. இவர் ஓர் அற்புதமான கிடாரிஸ்ட்!

இப்படியாக, இந்தப் போஸ்டரில் வெவ்வேறு ஜாஸ் இசைக்கலைஞர்களின் புகழ்பெற்ற ஆல்பங்களின் கவர்கள் காணப்பெறுகின்றன. அறிவியல் ஆய்வுப்படி, இசையானது நம் உடலிலுள்ள ஹார்மோன்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியன. அதில், ஜாஸ் இசையானது மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்றும் மனதைக் கிளர்ச்சியடையச் செய்கிறது என்றும் சில ஆய்வாளர்கள் சொல்வதுண்டு. மன அழுத்தத்தில் இருந்து தம்மை தற்காத்துக்கொள்ளவே, அந்த வெள்ளை கலர் ஹெட்செட்டில் ஜாஸ் இசைத்துணுக்குகளை விஜய்யின் கதாபாத்திரம் கேட்டுக்கொண்டே இருக்கிறதோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

ஜாஸ் ஆல்பம்கள்
ஜாஸ் ஆல்பம்கள்

சிங்கிளாக வெளியான `குட்டி ஸ்டோரி' பாடல் கூட, மனஅழுத்தத்தில் இருந்து வெளியேறி, பாஸிட்டிவிட்டியை உருவாக்கிக்கொள்ளுங்கள் என்றே பேசியது. விஜய் போதையில் இருப்பதுபோன்ற உணர்வைத் தந்த முதல் போஸ்டரையும், ஜாக் டேனியல்ஸ் விஸ்கியுடன் இருந்த போஸ்டரையும், அதே ஜாக் டேனியல்ஸ் விஸ்கியும் சில பல சைடிஸ்களுமாக இருக்கும் இந்த போஸ்டரையும் இணைத்துப் பார்க்கையில், விஜய் கதாபாத்திரம் கடுமையான மன அழுத்தம் கொண்ட, குடிக்கு அடிமையான கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருப்பதுபோல தெரிகிறது. அந்த மன அழுத்தத்துக்கான காரணம்தான் மொத்த கதையுமாகவே இருக்கலாம்!

அதேபோல், ஜாக் டேனியல்ஸ், குட்டி ஸ்டோரியில் வந்த கன்டஸா கார், கூலர்ஸ் எல்லாம் பார்க்கையில், விஜய் கதாபாத்திரம் ஒரு வின்டேஜ் விரும்பியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. போஸ்டரின் ஓரத்தில் டைரக்ட், டேக்ஸ் போன்ற வார்த்தைகளைப் பெயராகக் கொண்ட புத்தகம் ஒன்று இருக்கிறது. கூகுள் செய்து பார்த்ததில் அது `டைரக்ட் டாக்ஸ் வித் டாக்ஸ் ப்ளானிங்' எனும் புத்தகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. வருமான வரி பற்றிய புத்தகம் இது. இதுதான் குறியீடு குசும்பு என்பது! அதேபோல், `தி ஆல்டர்ட் ஈகோ' மற்றும் `16 பெர்சனாலிட்டி டைப்ஸ்' எனும் புத்தகங்களும் போஸ்டரில் காணக் கிடைக்கின்றன.

விஜய்
விஜய்
`அடுத்த நயன்தாரா'தான் விஜய் பட ஹீரோயின்... வெல்கம் ஆன் போர்டு ஸ்வீட்டி! #Vijay65

தன் ஒட்டுமொத்த வாழ்க்கையுமே தோல்வியில் புரண்டாலும், தன்னைத் தானே உணர்ந்து, தான் விரும்பியது போன்றே ஒரு சூப்பர் ஹீரோவைப் போல் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக எடுத்துச்செல்லும் வழியைச் சொல்கிறது இந்த `ஆல்டர்ட் ஈகோ' புத்தகம். ஒருவர் இன்ட்ரோவர்டா அல்லது எக்ஸ்ட்ரோவர்டா அல்லது வேறு ஏதாவதா என மனிதர்கள் மனோபாவத்தின் அடிப்படையில் 16 வகை மைக்குள் பிரிப்பதைப் பற்றிச் சொல்கிறது `16 டைப்ஸ் பெர்சனாலிட்டி டைப்ஸ்'. ஆக, எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கையில் ஒன்று புரிகிறது, `மாஸ்டர்' விஜய் கதாபாத்திரம் மன அழுத்தத்தில் சிக்கித்தவிக்கும் ஒரு பாத்திரம்!

அடுத்த கட்டுரைக்கு