Published:Updated:

“விஜய் பினாமின்னு சொல்லும்போது வருத்தமா இருக்கும்!”

 குடும்பத்துடன் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்துடன் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

என் மனைவி விமலாவைக் கல்யாணம் பண்ணுனதுக்கு அப்புறம்தான் எனக்கு சினிமாவோடு ஒரு தொடர்பு கிடைச்சது. எஸ்.ஏ.சந்திரசேகர் சாரின் தங்கை மகள்தான் என் மனைவி.

“விஜய் பினாமின்னு சொல்லும்போது வருத்தமா இருக்கும்!”

என் மனைவி விமலாவைக் கல்யாணம் பண்ணுனதுக்கு அப்புறம்தான் எனக்கு சினிமாவோடு ஒரு தொடர்பு கிடைச்சது. எஸ்.ஏ.சந்திரசேகர் சாரின் தங்கை மகள்தான் என் மனைவி.

Published:Updated:
 குடும்பத்துடன் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்துடன் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ
லாக்டெளனால் முடங்கியிருக்கும் பல தொழில்களில் முக்கியமானது திரையரங்குகள். தயாரிப்பாளர்கள் சிலர்கூட ஓடிடி தயவால் மீண்டுகொண்டிருக்க, என்ன செய்வதென்றே புரியாமல் குழம்பியிருப்பது திரையரங்க உரிமையாளர்கள்தான். கொரோனாவுக்குப் பிறகு மக்களை தியேட்டர் பக்கம் திருப்ப அவர்களுக்கு ஒரு பிரமாஸ்த்திரம் தேவைப்படுகிறது. அதுதான் ‘மாஸ்டர்’ என்கிறது கோடம்பாக்கம். இன்றைய சூழலில் ‘மாஸ்டர்’ படக் குழுவினரின் எண்ணவோட்டங்கள் என்ன, படம் எப்போது ரிலீஸ் என்பதையெல்லாம் யாரிடம் கேட்க முடியும்? ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுடன் மிக நீண்ட உரையாடல் நடத்தினேன்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘` `மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவின்போதுதான் உங்கள் பெயர் வைரல் ஆனது. இந்தத் தலைமுறைக்கு உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள முடியுமா?’’

விஜய்
விஜய்

‘‘தேவகோட்டையில் மிடில் கிளாஸ் குடும்பத்தில் 12 பேரில் ஒருவனாகப் பிறந்தவன் நான். அம்மா ஸ்கூல் டீச்சர், அப்பா கோர்ட்டில் க்ளர்க். பசங்களைப் படிக்க வெச்சு, ஒரு நல்ல வேலை வாங்கிக்கொடுத்திடணும்னு அம்மா ரொம்ப ஆசைப்பட்டாங்க. ஆனால், நான் சரியா படிக்காம பிரச்னை கொடுத்திட்டு இருந்தேன். அதனால, என்னை திண்டுக்கல்ல ஒரு ஸ்கூலுக்கு மாத்திட்டாங்க. அங்க இருந்த ஒரு ஃபாதர் எனக்குள்ள இருந்த திறமைகளைச் சரியா கண்டுபிடிச்சி, மோட்டிவேட் பண்ணிப் படிக்க வெச்சார். அடுத்து திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரில சேர்ந்தேன். ஸ்கூல்ல நான் ஃபுட்பால் ப்ளேயர். அதை காலேஜிலும் விளையாடியிருந்தால் ஃபுட்பால்ல ஒரு நல்ல இடம் கிடைச்சிருக்கும். ஆனா, நான் ஆங்கிலம் கத்துக்கணும்னு முடிவு பண்ணி, தினமும் ஆங்கில புத்தகம் படிக்கிறது, செய்திகள் கேட்கிறதுன்னு என் கவனத்தை முழுக்க படிப்பில் செலுத்துனேன். பி.காம் முடிச்சதுக்கு அப்புறம் எம்.காம் படிக்க சென்னைக்கு வந்தேன். லயோலாவில் எம்.காம் நல்லபடியா படிச்சு முடிச்சேன். கோல்டு மெடலும் வாங்கினேன். சென்னைல என் வாழ்க்கையே மாறுச்சு.’’

‘`தொழில் முனைவோரா எப்படி மாறினீங்க?’’

‘`லயோலா காலேஜ் பிரின்ஸ்பால், `அடுத்து என்ன பண்ணப் போறே?’ன்னு கேட்ட துக்கு, `என் அப்பா என்னை கலெக்ட ராக்கணும்னு ஆசைப் படுறார். அதுக்குத் தயாராகப் போறேன்’னு சொன்னேன். அப்போ அவர், ‘ஈவ்னிங் காலேஜ்ல லெக்சரரா வேலை பார்த்திட்டே படி’ன்னு சொன்னார். அப்பதான் லயோலாவில் ‘லிபா’ன்னு மேனேஜ்மென்ட் பாடங் களுக்காகவே தனி இன்ஸ்ட்யூட்டை ஆரம்பிச்சாங்க. எனக்கும் எம்.பி.ஏ படிக்கணும்னு ஆசை வந்தது. லிபா-ல எனக்கு க்ளாஸ் எடுத்த பாஸ்கரன் சார் ஷிப்பிங் துறையில் இருந்தார். அவர் கம்பெனியிலேயே மேனேஜராவும் வேலைக்குச் சேர்த்துக்கிட்டார். அப்பதான் துறைமுகத்தில் இருந்த பல பேர் எனக்குப் பழக்கமானாங்க. நாமளே ஒரு ஷிப்பிங் கம்பெனியைச் சின்ன லெவல்ல ஆரம்பிக்கலாமேன்னு யோசிச்சேன். அப்பாகிட்ட கலெக்டர் தேர்வுக்குப் படிக்கிறதை ஆறு மாசம் தள்ளிப்போட்டுக்கிறேன்னு அவகாசம் வாங்கி, கம்பெனியை ரன் பண்ணினேன். சின்ன சின்ன ஆர்டர்களில் ஆரம்பிச்ச என் பிசினஸ் பல போராட்டங்களுக்குப் பிறகு இப்ப இன்டர்நேஷனல் கம்பெனியா இருக்கு. 5 பணியாளர்களோடு தொடங்கின என் கம்பெனியில் நேரடியாவும் மறைமுகமாவும் இப்போ 6,000 பேர் வேலை பார்க்கிறாங்க.’’

“விஜய் பினாமின்னு சொல்லும்போது வருத்தமா இருக்கும்!”

‘`விராத் கோலியை பிராண்ட் அம்பாஸிடரா வெச்சு ஐபிஎல் மாதிரியே பிரீமியர் ஃபுட்சால் ஆரம்பிச்சீங்களே?’’

``ஃபுட்பால் என்னோட பேஸன். உலககோப்பைப் போட்டிகளை நேரில் போய்ப் பார்த்திடுவேன். தென் அமெரிக்காவில் ஃபுட்சால் போட்டிகளைப் பார்த்ததுக்கு அப்புறம், இந்த கான்செப்ட்டை இந்தியாவுக்குக் கொண்டு வரணும்னு ஆசைப்பட்டேன். இப்போ டெல்லி, மும்பை, சென்னைல மாடியில் ஃபுட்பால் விளையாடுறாங்கன்னா, அதுக்கு ஃபுட்சால்தான் காரணம்னு சொல்லுவேன். ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைச்சாலும் தொடர முடியாமல் போச்சு. ரெண்டு சீசன் கைக்காசைப் போட்டு நடத்தினேன். அடுத்தடுத்த சீசனுக்கு ஸ்பான்சர்ஸ் கிடைக்கலை. இந்த ஃபுட்சால் பயணத்தில்தான் விராட் கோலி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானோடு பயணிக்கும் வாய்ப்பு கிடைச்சது. விராட் கோலிதான் விளம்பரத்தூதரா இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான்தான் தீம் சாங் பண்ணிக்கொடுத்தார். இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து நடிக்க வெச்சு அந்த சாங்கை ஷூட் பண்ணினோம். அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்.’’

‘`சினிமாத் தயாரிப்புக்குள்ள எப்படி வந்தீங்க?’’

‘`என் மனைவி விமலாவைக் கல்யாணம் பண்ணுனதுக்கு அப்புறம்தான் எனக்கு சினிமாவோடு ஒரு தொடர்பு கிடைச்சது. எஸ்.ஏ.சந்திரசேகர் சாரின் தங்கை மகள்தான் என் மனைவி. 1992-ல விஜய்யை ஹீரோவா வெச்சு ‘நாளைய தீர்ப்பு’ படத்தை எடுத்தார். அப்போ நான் அவர்கிட்ட, ‘விஜய்யை வெச்சு ஒரு படம் எடுக்கணும்னா எவ்வளவு செலவாகும்’னு கேட்டேன். அவர் ஒரு தொகை சொன்னார். என் கையில் அப்போ காசும் கிடையாது. லோன் வாங்கித்தான் சந்திரசேகர் அங்கிள்கிட்ட காசைக் கொடுத்தேன். அப்படித்தான் `செந்தூரப்பாண்டி’ படத்தை எடுத்தார். அதுக்கப்புறம் `ரசிகன்’, `தேவா’ படங்களைத் தயாரிச்சேன். அந்தப் படங்களும் 100 நாள் ஓடுச்சு. அதுக்கப்புறம் நான் படங்கள் தயாரிக்கலை. என் மகள் சினேகா, விஸ்காம் படிக்கும்போது ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தை ரீகிரியேட் பண்ணினாங்க. அப்போ மறுபடியும் அதைத் தயாரிக்கிறதுக்காக சினிமாவுக்கு வந்தேன். அப்புறம் மறுபடியும் ஒரு பிரேக். ஃபுட்சால் போட்டிகளால எனக்கு நஷ்டம் வந்ததைப் பத்தி விஜய்கிட்ட ஒரு நாள் சொல்லிட்டிருந்தேன். `உங்களோடு சேர்ந்து வேலை பார்க்கிற மாதிரி வாய்ப்பு ஏதாவது இருந்தா சொல்லுங்க விஜய்... பண்ணலாம்’னு சொன்னேன். நான் சொன்னதை ஞாபகம் வெச்சுக்கிட்டு ரெண்டரை வருஷம் கழிச்சு ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். எனக்கு சினிமா அனுபவம் அதிகமா இல்லாததாலும், நேரம் இல்லாததாலும் எனக்கு உதவியா ரெண்டு பேரையும் கொடுத்தார். ஒரு நல்ல டீம் கிடைச்சதனால, படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. கொரோனாவால படத்தை ரிலீஸ் பண்ணுறதுல தாமதம் ஏற்பட்டிருக்கு. படம் எப்ப ரிலீஸ்னுதான் எல்லோரும் கேட்டுட்டே இருக்காங்க. கொரோனா பிரச்னைகள் முடிஞ்சு எப்ப தியேட்டர்கள் திறந்தாலும் மாஸ்டர் ரிலீஸாகிடும். அது தீபாவளியாகவும் இருக்கலாம்; பொங்கலாகவும் இருக்கலாம்.’’

“விஜய் பினாமின்னு சொல்லும்போது வருத்தமா இருக்கும்!”

‘`அடுத்த படமும் நீங்க விஜய்யை வெச்சுத் தயாரிக்கப்போறீங்கன்னு ஒரு பேச்சிருக்கே?’’

‘`அதெல்லாம் வதந்திகள்தான். சினிமா எனக்கு செகண்டரி பிசினஸ்தான். படங்கள் தயாரிக்கிற எண்ணம் இருக்கு. ஆனா, உடனடியா எதுவும் பண்ணுற மாதிரியில்ல. என் மகள் சினேகாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம். மணமகன் ஆகாஷ், முரளி சாரோட இரண்டாவது மகன்; அதர்வா தம்பி. அவருக்கும் சினிமாவில் நடிக்கணும்கிற ஆசை இருக்கு. அவர் நடிக்கிற படத்தைத் தயாரிக்கவோ, எனக்குப் பிடித்த படங்களைத் தயாரிக்கவோ நான் சினிமாவில் தொடர்ந்து இருப்பேன்.’’

‘` ‘செந்தூரப்பாண்டி’ விஜய்யையும், ‘மாஸ்டர்’ விஜய்யையும் எப்படிப் பார்க்குறீங்க?’’

‘`அப்பவும் சரி, இப்பவும் சரி, விஜய் கடின உழைப்பாளி. ‘நான் விஜய்யோட பினாமி. அவர் பணத்தில்தான் இந்தப் படத்தையே எடுக்கிறேன்’னு சிலர் பேசுறதையெல்லாம் பார்த்தேன். இப்ப நான் என் வாழ்க்கையையே உங்ககிட்ட முழுசா சொல்லியிருக்கேன். கஷ்டப்பட்டு, உழைச்சு முன்னேறிவந்தவன் நான். எந்த சட்டதிட்டங்களையும் மீறிடக்கூடாதுன்னு கவனமா இருப்பேன். இந்த மாதிரிப் பேச்சுகளெல்லாம் கேட்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கும். விஜய் இந்தப் படத்துக்காக ஒரு ரூபாய்கூடக் கொடுக்கலை. அவர் ஹீரோவா அறிமுகமான காலகட்டத்தில் நான் உதவி பண்ணுனதாலயும், இப்ப எனக்கு ஒரு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதனாலயும்தான் அவர் எனக்கு கால்ஷீட் தந்து உதவி பண்ணியிருக்கார். மத்தபடி, சொந்தக்காரர் என்பதற்காக எந்தச் சலுகையும் அவர் கொடுக்க மாட்டார். தொழில்வேற, உறவு வேறன்ற புரிதல் எங்க ரெண்டு பேருக்குமே உண்டு. நான் எப்போ ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனாலும், அவரோட ஈடுபாட்டைப் பார்த்து ஆச்சரியப்படுவேன். ஒரு ஷாட் முடிஞ்சதும் ‘அங்கிள் நீங்க ஹேப்பியா, உங்களுக்கு ஓகேவா’ன்னு என்கிட்ட கேட்டுட்டே இருப்பார். இந்தப்படம் உண்மையிலேயே விஜய்யோட மற்ற படங்களிலிருந்து வேறுபட்ட படமா இருக்கும்.’’

 குடும்பத்துடன் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ
குடும்பத்துடன் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

‘` `மாஸ்டர்’ படம் நேரடியா ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆகும்னு சில தகவல்கள் வந்துச்சே?’’

‘`ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆகாது. இது ரொம்பப் பெரிய பட்ஜெட் படம். விஜய் ரசிகர்கள் அவர் படங்களை தியேட்டரில் கொண்டாட்டத் தோடுதான் பார்த்திருக்காங்க. எவ்வளவு லேட்டானாலும் படம் தியேட்டரில்தான் வரும்.’’

‘` ‘மாஸ்டர்’ பட ஷூட்டிங்கின்போது உங்க வீட்லயும், விஜய் வீட்லயும் ஐ.டி ரெய்டு நடந்ததே?’’

‘`விஜய்கிட்ட நான் அடிக்கடி, ’நீங்க மிஸ்டர் கூல்’னு சொல்லுவேன். பல பேர் பிரச்னை காலங்களில் பதற்றப்பட்டுத் தப்பா முடிவெடுப்பாங்க. ஆனால், விஜய் அப்படி கிடையாது. ஐ.டி ரெய்டு வந்தப்பவும் நிதானமா கையாண்டார். ஏன்னா, அவர் சைடுல எந்தத் தப்பும் இல்லை. அவர் வீட்டுக்கு ரெய்ட் வந்ததும், என் வீட்டுக்கும் ரெய்டுக்கு வந்தாங்க. நானும் ஆரம்பத்தில் இருந்து ஐ.டி சம்பந்தமான விஷயங்களைச் சரியா பண்ணிட்டு இருந்ததனால வந்தவங்க பாராட்டிட்டுத்தான் போனாங்க. அதுல ஒரு ஆபீஸர், ‘நான்கூட மத்தவங்க சொல்ற மாதிரி நீங்க விஜய்யோட பினாமின்னு நினைச்சேன். உண்மையிலேயே உங்களுக்கும் விஜய்க்கும் எந்தவிதமான ஃபினான்ஷியல் லிங்க்குமே இல்லையே சார்’னு சொன்னார். ‘அதைத்தான் சார் நானும் சொல்றேன். ஆனா, உங்களுக்குப் புரிஞ்சிக்கிறதுக்கு இவ்வளவு தாமதமாகியிருக்கு’ன்னு சொன்னேன்.’’

‘` ‘மெர்சல்’ சமயத்திலும் சரி, இப்போ ‘மாஸ்டர்’ சமயத்திலும் சரி, விஜய்மீது மதரீதியா விமர்சனங்கள் வைக்கப்படுது. இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசியதைக்கூட சுவிசேஷக் கூட்டம்னு சிலர் மீம்ஸ் போட்டாங்க. இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?’’

‘`கஷ்டமா இருக்கு. ஏன்னா, எங்க குடும்பத்திலேயும் சரி அவங்க குடும்பத்திலேயும் சரி, மதம் பார்த்து யார்கிட்டயும் பழக மாட்டோம். என் செகரெட்டரி உட்பட என் கம்பெனியில வேலை செய்ற 98 சதவிகிதம் பேர் என் மதத்தைச் சார்ந்தவங்க இல்ல. விஜய்யும், விஜய் அப்பாவும் இந்துப் பெண்ணைத்தானே கல்யாணம் பண்ணியிருக்காங்க. இப்ப என் பொண்ணும் ஒரு இந்துப் பையனைத்தான் கல்யாணம் பண்ணப்போறாங்க.

மதம் எங்களோட தனிப்பட்ட நம்பிக்கை. சர்ச்சுக்குக் கொடுக்குற மாதிரியே நான் பல கோயில்களுக்கும் நன்கொடை கொடுக்குறேன். மசூதிகளுக்கும் உதவி பண்ணுறேன். நாகூர் தர்கா எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம். அவங்க பயன்படுத்தும் பாத்திரங்களில் `பிரிட்டோ அண்ட் ஃபேமிலி’ன்னு எழுதியிருக்கும். எங்களுக்கு எல்லா மதமுமே ஒண்ணுதான். நான் என்னைக்கும் என்னை வளர்த்துவிட்டவங்களை மறக்க மாட்டேன். அப்படி என்னை வளர்த்துவிட்ட சில ஃபாதர்கள் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தாங்க. அவங்களுக்கு அந்த மேடையில் நன்றி சொன்னேன், அவ்ளோதான்.’’

‘`நிறைய விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கீங்க. கடைசியா ஒரு கேள்வி. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவா நடிக்கப்போறதாவும், அந்தப் படத்தை நீங்க தயாரிக்கப்போறதாவும் ஒரு பேச்சிருக்கே?’’

‘`இதுவரைக்கும் அந்த மாதிரி எந்தப் பேச்சும் எங்களுக்குள்ள இல்லை. சஞ்சய் டைரக்‌ஷன் பண்ணுறதுலதான் அதிக ஆர்வம் கொண்டவர். அவருக்கு ஹீரோவா நடிக்கிற ஆர்வம் இருக்கான்னுகூட எனக்கு சரியாத் தெரியாது. கனடாவில படிச்சிட்டிருக்கார். படிப்பு முடிஞ்சு வந்ததுக்குப்பிறகுதான் இதுபற்றியெல்லாம் பேசணும். விஜய்யும், நானும் இதுபற்றியெல்லாம் இதுவரைக்கும் பேசினதேயில்லை!’’