Published:Updated:

``ஓடிடி ரிலீஸ்... விஜய் பினாமி... ஐடி ரெய்டு... மதப் பிரசாரம்?" - `மாஸ்டர்' எக்ஸ்க்ளூசிவ்!

விஜய், மாஸ்டர்
விஜய், மாஸ்டர்

'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் ஸ்பெஷல் பேட்டி... நாளைய ஆனந்த விகடனில்!

லாக்டெளனால் முடங்கியிருக்கும் தமிழ் சினிமாவை மீண்டும் மலரவைக்கும் மந்திரமாக ஒட்டுமொத்த திரையுலமே 'மாஸ்டர்' ரிலீஸூக்கு காத்திருக்கிறது. லாக்டெளன் முடிந்ததும், தியேட்டருக்கு மக்கள் வருவார்களா, மாட்டார்களா என்கிற குழப்பத்தையெல்லாம் 'மாஸ்டர்' ரிலீஸ் அடித்துநொறுக்கிவிடும் என்பதுதான் திரையுலகின் எதிர்பார்ப்பு. இன்றைய சூழலில் 'மாஸ்டர்' படத்துக்குப் பின்னால் என்ன நடந்துகொண்டிருக்கிறது, படம் எப்போது ரிலீஸ் என்பதையெல்லாம் யாரால் சரியாகச் சொல்ல முடியும்?

'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ ஆனந்த விகடனுக்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்திருக்கிறார்.
Vijay, Xavier Britto
Vijay, Xavier Britto

மார்ச் 15-ம் தேதி நடந்த 'மாஸ்டர்' இசைவெளியீட்டு விழாவின்போதுதான் இன்றைய தலைமுறைக்கு அறிமுகமானார் சேவியர் பிரிட்டோ. ஆனால், இவர் தமிழ்நாட்டில் 1990-களில் இருந்து வெற்றிகரமாகத் தொழில்நடத்திவரும் தமிழ்நாட்டின் முக்கிய தொழிலதிபர். இன்டெவ் லாஜிஸ்டிக்ஸ் என்கிற பெயரில் மிகப்பெரிய நிறுவனத்தை நடத்திவருவதோடு, பிரிட்டோ'ஸ் என்கிற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரிகளையும் நடத்திவருகிறார்.

  • தேவகோட்டையில் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர், எப்படி தமிழ்நாட்டின் முக்கிய தொழிலதிபர் ஆனார் என்கிற கேள்விக்குப் பின்னால் இன்றைய தலைமுறைக்கு ஊக்கம் தரும் மிகப்பெரிய கதையிருக்கிறது. அது அப்படியே விகடன் பேட்டியில் இடம்பெற்றிருக்கிறது.

  • ஐபிஎல் போன்றே கால்பந்து விளையாட்டின் மினியேச்சரான பிரிமியர் ஃபுட்ஸால் (Futsal) போட்டிகளை இந்தியாவில் நடத்தியவர் சேவியர் பிரிட்டோ. 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்த பிரிமியர் ஃபுட்ஸாலின் பிராண்ட் அம்பாஸிடர் விராட் கோலி. இதற்கான தீம்பாடலை உருவாக்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த ஃபுட்ஸால் அனுபவம்தான் 'மாஸ்டர்' படத்தை சேவியர் தயாரிப்பதற்கான ஆரம்பம்... எப்படி?

Virat Kohli, AR Rahman, Xavier Britto
Virat Kohli, AR Rahman, Xavier Britto
  • விஜய்யின் முதல் படம் 'நாளைய தீர்ப்பு'. இந்தப் படத்துக்கு அடுத்து தொடர்ந்து படங்கள் நடிக்க விஜய்யின் அப்பா சந்திரசேகருக்குப் பண நெருக்கடி. அப்போது உள்ளே வந்து 'செந்தூரப்பாண்டி', 'ரசிகன்', 'தேவா' என அடுத்தடுத்து மூன்று படங்களைத் தயாரித்தவர் சேவியர் பிரிட்டோதான். அந்த நாள்களின் நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

  • ''விஜய்தான் தன்னுடைய பணத்தை சேவியர் பிரிட்டோவிடம் கொடுத்து 'மாஸ்டர்' படத்தை எடுக்கச் சொல்லியிருக்கிறார்'', ''விஜய்யின் பினாமிதான் சேவியர் பிரிட்டோ''... இந்த விமர்சனங்களுக்கு பிரிட்டோவின் பதில் என்ன?

  • ''அடுத்த படமும் நீங்க விஜய்யை வெச்சு தயாரிக்கப்போறீங்கன்னு ஒரு பேச்சிருக்கே?''

    ''என் மகள் சினேகாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம். மணமகன் ஆகாஷ், முரளி சாரோட இரண்டாவது மகன். அதர்வா தம்பி. அவருக்கும் சினிமாவில் நடிக்கணும்கிற ஆசை இருக்கு. அவர் நடிக்கிற படத்தை தயாரிக்க... எனக்கு பிடித்தப் படங்களை தயாரிக்க...’’ அடுத்த விஜய் படத்தை தயாரிப்பாரா என்கிற கேள்விக்கு பிரிட்டோவின் முழு பதில் நாளைய ஆனந்த விகடனில்...

  • விஜய் மற்றும் இவரது வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது ஏன், ஐடி ரெய்டின்போது அதிகாரிகள் என்ன சொன்னார்கள்?

மாஸ்டர் படத்தில் விஜய்
மாஸ்டர் படத்தில் விஜய்
  • மாஸ்டர் படம் எப்போது ரிலீஸ், ஓடிடி நேரடி ரிலீஸுக்குப் பேச்சுவார்த்தை நடந்ததா, விஜய்யின் முடிவு என்ன?

  • மதம் பற்றிய சர்ச்சைக்கு விஜய்யின் பதில் என்ன? விஜய்யின் மகன் சஞ்சய் எங்கேயிருக்கிறார், எப்படியிருக்கிறார், அவர் ஹீரோவாக எப்போது சினிமாவுக்குள் நுழைய இருக்கிறார்?

'மாஸ்டர்' படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் பேட்டி நாளை வெளிவரும் ஆனந்த விகடனில் இடம்பெற்றிருக்கிறது. வாங்கிப் படிக்கத்தவறாதீர்கள்.

ஆனந்த விகடன் பேட்டியில் இடம்பெறாத சேவியர் பிரிட்டோவுடனான சுவாரஸ்யமான கேள்வி பதில்கள் இன்னும் சில நாள்களில் விகடன் இணையதளத்திலும் வெளியாகும்.

சேவியர் பிரிட்டோவின் வீடியோ பேட்டியும் விரைவில் சினிமா விகடன் சேனலில் வெளியாகும்.

அடுத்த கட்டுரைக்கு