Published:Updated:

"நிழலுக்கு முத்தம் கொடுத்ததுக்கே..." - செம ரகளை 'சில்லுக் கருப்பட்டி'ஸ்!

சில்லுக் கருப்பட்டி
சில்லுக் கருப்பட்டி

ஹலிதா சொன்ன கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, மூணு குழந்தைகளுக்கு அம்மாவா நடிக்கணும்னு சொன்னவுடன் ஷாக்! காரணம்,

2019-ம் ஆண்டின் இறுதியில் கோலிவுட் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ் 'சில்லுக் கருப்பட்டி.' நகர நெரிசலில் மனிதம் நெய்யும் நான்கு கதைகளின் தொகுப்பாக மக்களின் மனதை இலகுவாக்கித் தித்திப்பூட்டி மகிழ்வித்தது இந்தப் படம். 'அப்படியே எங்க வீட்டுல நடக்குற மாதிரியே இருக்கே' என்று மக்கள் புன்னகைத்துச் சிலாகிக்கும் ஒரு படத்தைக் கொடுத்த 'சில்லுக் கருப்பட்டி'களைச் சந்தித்தோம்.

"முதல்ல இந்த ஆந்தாலஜி படத்துல ஒரு கதையை மட்டும் நான் எழுதி இயக்குறதா இருந்தது. ஆனா, அது அடுத்த கட்டத்துக்கு நகரலை. அதனால, எல்லாக் கதைகளையும் நானே பண்றேன்னு சொல்லி ஆரம்பிச்சதுதான், 'சில்லுக் கருப்பட்டி'. 'டர்ட்டில்ஸ் வாக்', 'பிங்க் பேக்' ரெண்டு கதைகளும் ஏற்கெனவே நான் எழுதிவெச்சிருந்தேன். 'காக்கா கடி'யைப் பொறுத்தவரை மணிகண்டன், நிவேதிதா இவங்க ரெண்டு பேரையும் எனக்கு பர்சனலா நல்லாத் தெரியும். அவங்க கேரக்டர்களை வெச்சு அவங்களுக்காக எழுதின கதை. நான் சமுத்திரக்கனி சார்கிட்ட அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணியிருக்கேன். அவருக்காக மட்டுமே எழுதினது அந்த தனபால் கேரக்டர் வர்ற 'ஹே அம்மு' கதை. இந்தப் படத்துல எனக்கு சர்ப்ரைஸா வந்து அமைஞ்சது சுனைனா மேடம்தான். அதனாலயே எனக்கு அவங்க ஸ்பெஷல்" என்று இயக்குநர் ஹலிதா ஷமீம் படத்தின் கதாபாத்திரங்கள் பற்றிச் சொல்லி முடித்தவுடன் தொடர்ந்தார், சமுத்திரக்கனி.

"நிழலுக்கு முத்தம் கொடுத்ததுக்கே..." - செம ரகளை 'சில்லுக் கருப்பட்டி'ஸ்!

"இதுவரை உடம்பை விறைச்சுக்கிட்டுதானே சுத்திட்டு இருந்திருக்கோம். இதுல என்னை முழுமையா மாத்துனாங்க. தியேட்டர்ல படம் பார்த்துட்டு எனக்குத் தெரிஞ்சவங்களே, 'நீ பேச ஆரம்பிச்சா எவ்ளோ பெரிய வில்லனும் திருந்திடுவான். ஆனா, பொண்டாட்டி பிள்ளைகளை வெச்சுக்கிட்டு நீ சமாளிக்கிறதைப் பார்க்க அவ்ளோ சந்தோஷமா இருக்கு'ன்னு சொல்றாங்க. வழக்கமா நாம பண்றதைவிட இந்த மாதிரி கதைகள்ல நடிக்கிறது நமக்கு வேறொரு முகத்தைக் கொடுக்குது. இதுக்கு ஹலிதாவுக்குத்தான் நன்றி சொல்லணும்" என்றார். முழுமையாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/37Qs8gl

"ஹலிதா சொன்ன கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, மூணு குழந்தைகளுக்கு அம்மாவா நடிக்கணும்னு சொன்னவுடன் ஷாக்! காரணம், இதுக்கு முன்னாடி நான் இந்த மாதிரி ரோல் பண்ணுனதில்லை. ரெண்டு நாள் கழிச்சுதான் ஓகே சொன்னேன். நான் நடிச்ச அமுதினி கேரக்டர் பத்தி எல்லோரும் நல்லாப் பேசுறாங்க. அதுக்குக் காரணம் ஹலிதாதான். அவங்க சொன்னதை அப்படியே பண்ணினேன். ஆர்ட்டிஸ்ட்கிட்ட அவங்களுக்குத் தகுந்த மாதிரி ரொம்ப அழகா தெளிவாச் சொல்லிப் புரியவெச்சு அவங்களுக்கு வேணுங்கிறதை எடுத்துக்குவாங்க. அவங்களோட வசனங்களும் படத்துக்குப் பெரிய பலம்" என உற்சாகமாகச் சொன்னார் சுனைனா.

"நிழலுக்கு முத்தம் கொடுத்ததுக்கே..." - செம ரகளை 'சில்லுக் கருப்பட்டி'ஸ்!

"எல்லாரும் செம ஸ்வீட்டா பேசுறாங்கல்ல. இப்போ என் கதையைக் கேளுங்க'' என உள்ளே வந்தார் 'டர்ட்டிள்ஸ் வாக்' நாயகன் ஸ்ரீராம். ''போலீஸ், காலேஜ் பசங்க, பொண்ணுங்களுக்குத் தற்காப்புக் கலை சொல்லிக்கொடுத்துட்டிருக்கேன். என்னை ஃபேஸ்புக்ல பார்த்துட்டு ஹலிதா கூப்பிட்டாங்க. இந்த அளவுக்குப் பெரிய கேரக்டர் கொடுப்பாங்கன்னு நினைக்கலை. நான் படத்துல ஒரு லவ் போர்ஷன்ல நடிச்சிருக்கேன்னு தெரிஞ்சதும் வீட்ல பெரிய பிரச்னை ஆகிடுச்சு. 'முத்தமெல்லாம் கொடுக்கிறீங்களா? இந்த வயசுல இப்படி ஆட்டம்போடுறது எல்லாம் நல்லா இல்லை'ன்னு சொல்லிட்டாங்க என் மனைவி. நிழலுக்கு முத்தம் கொடுத்ததுக்கே இந்த நிலைமை. படத்தையும் பார்க்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க. என் பொண்ணும் அவ பங்குக்கு அவ அம்மாவை ஏத்திவிடுறா. வீட்ல செம ரகளையா இருக்கு. இப்பக்கூட பாருங்க. எல்லாரும் ஜோடியா வந்திருக்காங்க. என் ஜோடி மட்டும்தான் மிஸ்ஸிங்'' என்றதும், "ஏன் உங்க வீட்ல உங்களைத் திட்டுறாங்கன்னு இப்ப தெரியுது சார்" என சமுத்திரக்கனி கலாய்க்க, சிரிப்பலை.

- இந்தச் சந்திப்பில் பகிர்ந்தவற்றை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் அனுபவிக்க > 'சில்லுக்கருப்பட்டி' சந்திப்பு... தித்திப்பு! https://cinema.vikatan.com/tamil-cinema/meeting-the-team-behind-the-feel-good-sillu-karupatti-movie

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு