Published:Updated:

Mickey Mouse: `மிக்கி எனும் மாயக்காரன்' சில சுவாரஸ்யத் தகவல்கள்!

மிக்கி மவுஸ்

இன்று, மிக்கி மவுஸ் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்ட நாள். மிக்கி மவுஸ் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள் இதோ!

Mickey Mouse: `மிக்கி எனும் மாயக்காரன்' சில சுவாரஸ்யத் தகவல்கள்!

இன்று, மிக்கி மவுஸ் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்ட நாள். மிக்கி மவுஸ் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள் இதோ!

Published:Updated:
மிக்கி மவுஸ்

இன்று, மிக்கி மவுஸ் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்ட நாள். மிக்கி மவுஸ் 18-11-1928 ல் ஒளிபரப்பானது. எனவே, நவம்பர் 18 மிக்கி மவுஸ் பிறந்தநாள் மற்றும் `மிக்கி தினம்' ஆக கொண்டாடப்படுகிறது. அதன் படி பார்த்தால் தற்போது மிக்கி மவுஸ் வயது 94. மிக்கி மவுஸ்-க்கு வால்ட் டிஸ்னி, முதலில் வைத்த பெயர் மார்டிமர்! இருப்பினும், அவரது மனைவி லில்லியன் டிஸ்னி, வால்ட் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை எனக்கூறி அவரே, 'மிக்கி' என்ற பெயரை பரிந்துரைத்தார். மிக்கி மவுஸ்ஸின் முழுப் பெயர் மைக்கேல் தியோடர் மவுஸ் (Michael Theodore Mouse). மிக்கிக்கு இத்தாலியில் டோபோலினோ, சீனாவில் மி லாவோ ஷு மற்றும் ஸ்வீடனில் முஸ்ஸே பிக் போன்ற பல பெயர்கள் உள்ளன.

மிக்கி மவுஸ்
மிக்கி மவுஸ்

மிக்கி மவுஸ், ஆஸ்கர் விருது உட்பட, பல விருதுகளையும் வென்றுள்ளது. மிக்கி மவுஸ் தான் முதன் முதலில் ஆஸ்கர் விருது வென்ற ஓர் உயிரற்ற காதபாத்திரம். மிக்கி மவுஸின் கைக்களில், நான்கு விரல் மட்டுமே இருக்கும் காரணம் என்னவென்றால், ஐந்து விரல் இருந்தால் அது வாழைப்பழ டஜன் போல வித்தியாசமாகக் காட்சி அளிக்கும் என்று அவ்வாறு வரையப்பட்டது. மிக்கியின், ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் (Hollywood Walk of Fame) ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்றது. இதன்மூலம், ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் இடம் பெற்ற முதல் கார்ட்டூன் கதாபாத்திரமாக மிக்கி ஆனார் .

2005 ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் ரோசஸ் அணிவகுப்பு போட்டியின் கிராண்ட் மார்ஷலாக (Grand Marshal of the Tournament of Roses Parade)  மிக்கி இருந்தார். இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் கார்ட்டூன் கதாபாத்திரம் இவர்தான். மிக்கி பேசிய முதல் வார்த்தைகள் `ஹாட் டாக்ஸ்'. அனிமேஷன் வரலாற்றில் `தி கார்னிவல் கிட்' இந்த எபிசோட் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். ஏனெனில் ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம் பேசுவது இதுவே முதல் முறை. மிக்கி & மின்னிக்கு குரல் கொடுத்த கலைஞர்கள் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் வெய்ன் ஆல்வைன் - ரஸ்ஸி டெய்லர். 2008ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மிக்கி மவுஸின் பெயர் பல முறை மோசடியாக வாக்காளர் பதிவுப் பட்டியலில் இடம்பெற்று இருந்தன. அமெரிக்கக் கருத்து கணிப்பு படி கிறிஸ்துமஸ் தாத்தா கதாபாத்திரத்தை விட மிக்கி மவுஸ் பிரபலமான மற்றும் குழந்தைகள் அதிகம் அறிந்துள்ளனர் எனக் கூறப்பட்டது.