Published:Updated:

``படம் நடிக்கிறேன். மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள்!'' - மிமிக்ரி நவீன்

வே.கிருஷ்ணவேணி

''பிரச்னைகள், மன உளைச்சல் என இருந்த நான் இப்போதுதான் கொஞ்சம் இளைப்பாறி இருக்கிறேன்'' என்கிறார் மிமிக்ரி நவீன்

நவீன்
நவீன்

`கலக்கப்போவது யாரு' மிமிக்ரி நவீனை அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் மறந்திருக்க முடியாது. திவ்யலட்சுமி `தன்னை நவீன் திருமணம் செய்துள்ள நிலையில், கிருஷ்ணகுமாரியை மீண்டும் திருமணம் செய்துள்ளார்' எனப் புகார் அளித்திருந்தார். அதன் பிறகு, அந்தப் பிரச்னை அப்படியே அடங்கிப் போனது. டாப் கியர் போட்டு ஆரம்பித்த நவீனின் வாழ்க்கை சடன் பிரேக் எடுத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஓட ஆரம்பித்திருக்கிறது. இப்போது என்ன செய்கிறார் நவீன் என அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன்,

''எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும், எங்குமே என்னை விட்டுக் கொடுக்காத மனைவி அவர்''
நவீன்

"பிரச்னைகள், மன உளைச்சல் என இருந்த நான் இப்போதுதான் கொஞ்சம் இளைப்பாறி இருக்கிறேன். கிட்டத்தட்ட இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும். இரண்டு படங்களில் கமிட் ஆகியிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டு படங்களுக்கும் கையொப்பமிட்டு நடிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

நவீன்
நவீன்

அந்தப் படத்திற்காக இடையில் என் உடல் எடையைக் குறைத்தேன். அதன் பிறகு கவனம் செலுத்தாததால் மறுபடியும் எடை கூடிவிட்டது. மீண்டும் அதைக் குறைக்கும் முயற்சியில் இருக்கிறேன். இந்த வருடம் முடிவதற்குள் நான் நடித்த ஒரு படமாவது ரிலீஸ் ஆகும். அந்தப் படத்திற்குப் பிறகு இவன் நல்லவன் என மக்கள் ஏற்றுக் கொள்ள வாய்ப்பிருப்பதாக நான் நம்புகிறேன்.'' என்று அமைதியாகப் பேசியவரிடம், "எந்த மாதிரியான ரோலில் நடிக்கிறீர்கள்?" எனக் கேட்டேன்,

"எனக்கு காமெடி ரோல் எல்லாம் செட் ஆகாதுங்க. அதனால் படத்தில் கிட்டத்தட்ட லீட் ரோல் மாதிரியான ஒரு ரோலில்தான் நடிக்கிறேன். அடுத்த மாதம் அந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும். அப்போது இன்னும் நிறைய விஷயங்களைப் பேசலாம். என்னதான் படத்தில் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருந்தாலும், மேடையில் மிமிக்ரி செய்வதை இதுவரை நிறுத்தியதே இல்லை. ஒரு கலைஞனாக மக்களை இன்னும் என் குரலின் வாயிலாக மகிழ்வித்துக்கொண்டிருக்கிறேன்'' என்றவரிடம் அவரின் மனைவி கிருஷ்ணகுமாரி பற்றிக் கேட்டதற்கு,

நவீன்
நவீன்

"எத்தனை பிரச்னைகள் வந்தாலும், எங்குமே என்னை விட்டுக் கொடுக்காத மனைவி அவர். சிறப்புக் குழந்தைகளுக்கான தேவைகள், அடிப்படை வசதிகள் எனப் பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய சமூக சேவையில் என்னால் முடிந்த உதவிகளையும் செய்ய முயற்சி செய்துட்டு இருக்கேன்.'' என்றார் நவீன்.