பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“ஈயைப் பார்த்து பயந்தார்!”

 ‘மிர்ச்சி’ சிவா.
பிரீமியம் ஸ்டோரி
News
‘மிர்ச்சி’ சிவா.

‘‘ `சுமோ’ படத்தின் ஹீரோ மட்டுமல்ல, திரைக்கதை, வசனமும் நாமதான்’’ படபடவெனச் சிரிக்கிறார் ‘மிர்ச்சி’ சிவா.

காமெடி நடிகராக சினிமாவுக்குள் நுழைந்தவர் சீரியஸ் ஸ்க்ரீன்ப்ளே ரைட்டராகிவிட்டார். “இதையெல்லாம் பண்ணணும்னுதான் சினிமாவுக்கே வந்தேன். நடிகரா பல படங்கள் பண்ணியாச்சு. இந்தப் படத்துக்குத் திரைக்கதை, வசனம் மட்டும் எழுதியிருக்கேன். சீக்கிரம் ஒரு படத்தை இயக்குவேன்’’ என்கிறார் உற்சாகமாக.

‘`என்ன திடீர்னு ‘சுமோ’ன்னு ஜப்பான் கதைக்குப் போயிட்டீங்க?’’

‘`குழந்தைகளுக்காக ஒரு படம் பண்ணணும்கிறது ரொம்ப நாள் பிளான். ஒரு நாள், நானும் விடிவி கணேஷும் பேசிட்டு இருந்தப்போ, ரேடியோ மிர்ச்சி சமயத்தில் ஹோசிமின் சொன்ன, இந்த `சுமோ’ கதை ஞாபகத்துக்கு வந்தது. உடனே `சுமோ’ படத்தை ஸ்டார்ட் பண்ணிடலாம்னு பிளான் பண்ணி, அதுக்கான வேலையில் இறங்கினோம்.

“ஈயைப் பார்த்து பயந்தார்!”
“ஈயைப் பார்த்து பயந்தார்!”

‘சுமோ’ படத்தின் திரைக்கதையை எழுதுனதுக்குப் பிறகு, இந்தப் படத்தோட முக்கியமான ஒரு விஷயமா தோணுனது, ஒளிப்பதிவு. ராஜீவ் மேனன் சார் ஒளிப்பதிவு பண்ணினா நல்லா இருக்கும்னு நினைச்சேன். கதையைச் சொன்னதும், ரொம்ப உற்சாகமாகிட்டார். ஜப்பானில் நடக்குற மாதிரி 40 நிமிடக் காட்சிகள் படத்தில் இருக்கிறதால, லொக்கேஷன் பார்க்கிறதுக்காக இயக்குநர் ஹோசிமின், ராஜீவ் மேனன் சார், விடிவி கணேஷ் எல்லோரும் ஜப்பானுக்குப் போனோம். இந்த ஸ்கிரிப்ட்டில் எட்டு கேரக்டர்களில் நடிக்க அந்த ஊர் மக்கள் தேவைப்பட்டாங்க. அதனால, அங்க ஆடிஷன் வெச்சு செலக்ட் பண்ணினோம். முக்கியமான கேரக்டரில் நடிக்க, தஷீரோவை செலக்ட் பண்ணினோம். இவர் சுமோ வீரராக இருந்தாலும், நிறைய விளம்பரப் படங்களில் நடிச்சிருக்கார். சல்மான் கானோடு சேர்ந்தும் நடிச்சிருக்கார்.

“ஈயைப் பார்த்து பயந்தார்!”

அவர் தமிழ்ப்படத்துல நடிக்கப்போறதுன்னு முடிவானதுக்கு அப்புறம், ‘எனக்கு இந்தப் படத்தில் பாட்டு இருக்கா; டான்ஸ் இருக்கா’ன்னு ஆர்வமாகிட்டார். இட்லி, தோசைன்னு வாங்கிக் கொடுத்தோம், என்ஜாய் பண்ணி சாப்பிட்டார். ஒரு நாள் ஷூட்டிங்ல ரொம்ப பயந்துபோய் உட்கார்ந்திருந்தார். `ஏன் பயப்படுறீங்க’ன்னு கேட்டா, ஈயைக் காட்டுறார். `பெரிய சுமோ வீரரா இருந்துட்டு ஈயைப் பார்த்து பயப்படுறீங்களே’ன்னு சொன்னதுக்கு, ஈயினால என்னென்ன வியாதிகள் வரும்னு லிஸ்ட் போட்டார். இதெல்லாம் பார்த்தப்போ, ஜப்பான் மக்கள் எவ்வளவு பாதுகாப்பா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.’’

“ஈயைப் பார்த்து பயந்தார்!”

‘`டோக்கியோ ஷூட்டிங்கில் என்னென்ன சவால்கள் இருந்தன?’’

``முதல் சவால் மொழி. ஒரு சீனில் ஒரு சுமோ வீரர் சும்மா உட்கார்ந்திருக்கணும். இதை அவங்ககிட்ட 10 நிமிஷமா சொல்லிட்டிருந்தார் மொழிபெயர்ப்பாளர். இதுக்கே பத்து நிமிஷம்னா, அவருக்கு வசனம் கொடுத்து, நடிக்கச் சொல்றதுக்கு எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்னு பார்த்துக்கங்க. அப்புறம் ஜப்பான்காரங்க நேரத்தைக் கடைப்பிடிக்கிறதுல செம ஷார்ப். 9 மணிக்கு ஷூட்டிங்னா 8.55-க்கு வந்திருவாங்க. ஐசரி கணேஷ் சார் மாதிரி ஒரு தயாரிப்பாளர் இந்தப் படத்துக்குக் கிடைச்சதனாலதான், எங்களால் ஜப்பான், டோக்கியோன்னு போய்ப் படம் எடுக்க முடிஞ்சது.’’

“ஈயைப் பார்த்து பயந்தார்!”

‘`சுமோ மட்டும்தானா... காதலும் இருக்கா?’’

``நான், பிரியா ஆனந்த், யோகிபாபுன்னு ஒரு முக்கோணக் காதல் இந்தப் படத்தில் இருக்கு. இதில் யோகிபாபு தன் பெஸ்ட்டைக் கொடுத்திருக்கார்.’’