Published:Updated:

மிஸ்டர் மியாவ்: ஷங்கர் மகளே வருக!

அதிதி
பிரீமியம் ஸ்டோரி
அதிதி

அதிதி, படித்ததோ எம்.பி.பி.எஸ். ஆனால், சினிமாவில் நடிப்பதுதான் அவர் கனவு.

மிஸ்டர் மியாவ்: ஷங்கர் மகளே வருக!

அதிதி, படித்ததோ எம்.பி.பி.எஸ். ஆனால், சினிமாவில் நடிப்பதுதான் அவர் கனவு.

Published:Updated:
அதிதி
பிரீமியம் ஸ்டோரி
அதிதி

கடைசி நிமிடம் வரை ரகசியம் காப்பாற்றி, வி.ஐ.பி வேட்பாளரை அறிவிப்பதுபோல் இயக்குநர் ஷங்கரின் மகளை கார்த்தி படத்தின் ஹீரோயினாக அறிவித்து ஆச்சர்யப்படுத்தி யிருக்கிறார் சூர்யா. முத்தையா இயக்கத்தில் பக்காவான கிராமத்துக் கதையாக உருவாகும் ‘விருமன்’ படத்தில், யார் ஹீரோயின் எனப் பெரிய பட்டிமன்றமே நடந்துகொண்டிருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்னரே ஷங்கர் மகள் அதிதி, ஹீரோயினாக முடிவுசெய்யப்பட்டாராம். கோடம்பாக்கத்தையே ஆச்சர்யப்படுத்தும்விதமாக, பூஜைக்கு முதல் நாள் வரை ரகசியம் காத்து, அதன் பின்னர் அறிவித்திருக்கிறார்கள்.

அதிதி,
படித்ததோ எம்.பி.பி.எஸ். ஆனால், சினிமாவில் நடிப்பதுதான் அவர் கனவு. முதல் மகளுக்குச் சமீபத்தில் திருமணம் முடித்த ஷங்கர், அடுத்த மகளான அதிதியிடம் எதிர்காலம் குறித்துக் கேட்டிருக்கிறார். நடிக்க விருப்பம் என அதிதி சொல்ல, ஷங்கருக்கு ஆச்சர்யம். மகளின் முடிவை அவர் நிச்சயம் ஆட்சேபிப்பார் என அவர் குடும்பத்தினரே நினைத்திருக்க, எந்த மறுப்பும் சொல்லாமல் கிரீன் சிக்னல் கொடுத்து அட்டகாசத் தந்தையாக ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் ஷங்கர்.

அதிதிக்கு கிராமம், சிட்டி என இரண்டுக்கும் செட்டாகிற முகம். இப்படியொரு முகத்தைத்தான் ‘விருமன்’ படத்துக்காகத் தேடிக்கொண்டிருந்தார்களாம். படக்குழுவின் தேடுதலும் அதிதியின் ஆர்வமும் ஒருமித்து அமைய, 2 டி நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியனும், ஷங்கரின் மேனேஜர் தங்கதுரையும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் கார்த்தி - அதிதி கூட்டணி முடிவாகியிருக்கிறது.

இயக்குநர் முத்தையாவின் படம், கடைக்கோடி கிராமம் வரை சென்றடையக்கூடிய படமாக இருக்கும். ஹீரோயினைப் பெயரளவுக்குப் பயன்படுத்தாமல், உரிய முக்கியத்துவம் கொடுப்பதும் முத்தையாவின் வழக்கம். கார்த்தியுடன் நடித்தால் தமிழ், தெலுங்கு எனப் பெரிய கவனம் கிடைக்கும். சூர்யா தயாரிப்பதால் பாதுகாப்புக்கும் கண்ணியத்துக்கும் குறைவிருக்காது எனப் பல கணக்குகளைப் போட்டு ஷங்கர் மகள் அதிதிக்கு ‘விருமன்’ படத்தைக் களமாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் தங்கதுரை. “என் மகளைப் பற்றி நான் கவலைப்படத் தேவையே இல்லை. நீங்க பத்திரமா பார்த்துக்குவீங்க…” என ஷங்கர் சொல்ல, நெகிழ்ந்துபோனாராம் தங்கதுரை.

மிஸ்டர் மியாவ்: ஷங்கர் மகளே வருக!

மருத்துவப் படிப்போடு முறையான நடிப்புப் பயிற்சியும் பெற்றிருக்கிறார் அதிதி. ‘ஆடிஷன் வைத்து என் நடிப்பு ஓகே என்றால் மட்டுமே வாய்ப்பு கொடுங்கள்’ எனச் சொல்லி, இயக்குநர் முத்தையா முன்னால் போய் நின்றிருக்கிறார் அதிதி. கிராமத்து வசனங்களை முத்தையா மதுரை வழக்கில் பேசிக்காட்ட, அதை மனதில் உள்வாங்கி, அட்டகாசமாக நடித்துக்காட்டியிருக்கிறார் அதிதி. நான்கைந்து சந்திப்பிலேயே சூர்யாவின் 2 டி நிறுவனத்துக்கே செல்லப்பிள்ளையாக மாறிவிட்டாராம். அலுவலக உதவியாளர்கள் வரை அனைவரையும் ‘அண்ணா’ என அழைத்து அதிதி பாசம் காட்ட, நிறுவனமே நெகிழ்ந்துகிடக்கிறது.

மகள் நடிக்கவிருக்கும் படம் என்பதால், ஷங்கர் மிகுந்த ஆர்வத்தோடு கதை கேட்பார் என நினைத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா. ஆனால், “என் மகளுக்குப் பிடிச்சிருந்தா போதும். நான் கதை கேட்கவேண்டியதில்லை” எனச் சொல்லித் தவிர்த்துவிட்டாராம் ஷங்கர். கதை, நடிப்பு என எந்த விஷயத்திலும் ஷங்கர் தலையிடவில்லையாம். மகளின் ஆசைக்குக் குறுக்கே நிற்காத தந்தையாகக் கலையுலகின் கவனத்தை நச்சென ஈர்த்திருக்கிறார் ஷங்கர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism