உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணி மோதிய போட்டியில், இந்திய அணி ஆரஞ்சு, கருநீலம் கலந்த ஜெர்சியை அணிந்து விளையாடியது. இந்தப் போட்டியில் இந்தியா தோற்கவும் செய்தது. இதற்குக் காரணம், அந்த ஆரஞ்சு நிற ஜெர்சிதான் எனப் பலரும் கூறிவந்த நிலையில், ‘காலா’ படத்தின் நாயகி ஹீமா குரேசி, “இது மூடநம்பிக்கையெல்லாம் இல்லை. ஆனால், இந்தியாவுக்குத் திரும்ப அந்த நீலநிற ஜெர்சியைக் கொடுங்கள்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துவந்த நடிகை காஜல் அகர்வால், தற்போது ஹாலிவுட் படத்தில் என்ட்ரி கொடுக் கிறார். தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தயாரிக்கும் இந்த ஹாலிவுட் படத்தை, ஹாலிவுட் இயக்குநர் ஒருவரே இயக்கவிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதர்வா நடிக்க, அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் கண்ணன். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக, ‘கொடி’ படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். ஜூலை 15-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர், இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த். இவர் தற்போது நடிகை ஆன்ட்ரியாவைப் புகழ்ந்து ஒரு ட்விட் செய்திருக்கிறார். அதில், ‘நாம் எத்தனை பேரை நண்பர்களாக வைத்திருக்கிறோம் என்பது விஷயமல்ல. எத்தனை பேர் நம்மிடம் உண்மையாக இருக்கிறார்கள் என்பதுதான் விஷயமே. அந்த வகையில், வாழ்க்கை முழுவதுக்கும் உண்மையான நட்பாக இருக்கும் ஒருவரைப் பெற்றிருக்கிறேன்’ எனப் புகழ்ந்திருக்கிறார்.

‘யு-டர்ன்’ திரைப்படம் எல்லாத் தரப்பு ரசிகர்களையும் சென்றடையாத வருத்தத்தில் இருக்கிறார் சமந்தா. ‘ஓ பேபி’ படத்தின் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அவர், ‘‘இனி தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பேன்’’ என்று கூறியுள்ளார்.

‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், நடிகை ப்ரியா வாரியர். இந்தப் படம் இவருக்கு எதிர்பார்த்த பெயரை வாங்கித் தரவில்லை. அடுத்ததாக ‘தேவி பங்களா’ என்ற பாலிவுட் படத்தில் ஒப்பந்தமானார். தற்போது மயாங்க் பிரகாஷ் எடுக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். நிதின், ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிக்கும் இப்படம், தனக்கு முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறார் ப்ரியா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ம்யூட்
‘ஜனநாயக முறைப்படி இல்லை’யெனக் கூறி, சங்கப் பதவியிலிருந்து விலகினார், இமய இயக்குநர். அரசியலில் பிஸியாக இருக்கும் நடிகையின் கணவர்தான் இந்த விலகலுக்குக் காரணம் என்கிறார்கள். ஆனால், ‘இருவரும் செயல்படுத்த நினைத்த திட்டங்கள் கைகூடி வராததால், இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
படப்பிடிப்புக்குத் தாமதமாக வரும் புகழ்பெற்ற வாரிசு நடிகர், ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறுத்திவைத்திருந்த ஹெலிகாப்டரை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றியிருக்கிறார். ஷூட்டிங் நேரத்தை இப்படி வீணாக்குகிறாரே என நொந்து கிடக்கிறது, படக்குழு.
சமீபத்தில் வெளியான கடல் பயணியின் பெயர்கொண்ட நடிகரின் படம் வரவேற்பைப் பெறவில்லை. இதனால், அதிக மன உளைச்சலில் இருப்பது ஹீரோதானாம். ‘ஏற்கெனவே நிறைய பணப் பிரச்னைகள். இதில் இது வேறயா?’ என்று நெருக்கமானவர்களிடம் புலம்பிக்கொண்டிருக்கிறாராம், நடிகர்.