சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மஞ்சிமா மோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
மஞ்சிமா மோகன்

விஜய் சேதுபதி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக மஞ்சிமா மோகன்....

நித்யா மேனன்
நித்யா மேனன்

நித்யா மேனன் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள ‘மிஷன் மங்கள்’ திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தின் புரொமோஷன் வேலைகளில் இருக்கும் நித்யா மேனனிடம், ‘தி அயர்ன் லேடி’ படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தைக் கேட்டபோது, “படத்தின் பெயரை மட்டும் வைத்து லாபம் பார்க்க இயக்குநர் ப்ரியதர்ஷினி விரும்ப வில்லை. ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் ஷூட்டிங் ஆரம்பிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

அக்‌ஷரா ஹாசன்
அக்‌ஷரா ஹாசன்

‘கடாரம் கொண்டான்’ படத்துக்குப் பிறகு நடிகை அக்‌ஷரா ஹாசன் ‘ஃபிங்கர் டிப்’ என்ற வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார். இதை அறிமுக இயக்குநர் ஷிவ் சங்கர் எடுக்கிறார். இதில் நடிகைகள் சுனைனா மற்றும் காயத்ரி நடிக்கிறார்கள். விஷ்ணுவர்தன் தயாரிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். போனி கபூரின் மகள் ஜான்வி கபூரும் அந்தப் படத்தில் நடிக்கிறார். அஜித்தும் அவரும் அப்பா, மகளாக நடிப்பார்கள் என்று தகவல்கள் வருகின்றன.

மிஸ்டர் மியாவ்

பேய் படங்களை இயக்கி ஹிட் அடித்துக்கொண்டிருக்கும் நடன இயக்குநருக்கு சமீபத்தில் பாலிவுட் வாய்ப்பு கிடைக்கவே, ஈ.சி.ஆர் பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை சத்தமில்லாமல் கட்டிவருகிறாராம்.

தெலுங்கு மருமகளாகியிருக்கும் சென்னையைச் சேர்ந்த நடிகை, தற்போது தன்னுடைய சம்பளத்தை இரட்டிப்பாக்கிவிட்டாராம். `சமீபத்தில் வெளியான இவரது தெலுங்குப் படத்தின் வெற்றியால்தான் இப்படி தலைகால் புரியாமல் ஆடுகிறார்’ என்கிறார்கள், அக்கட பூமியில்!